பயணங்களுக்காக வாழ்வையே அர்பணித்திருக்கும் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் தனது பயண அனுபவங்களை வரலாற்றின் குறிப்புகளோடு தந்திருக்கும் புத்தகம் தேசாந்திரி. படிக்கும் போதே நாமும் பயணம் செய்திட வேண்டும் என்கிற எண்ணத்தை விதைக்கும் நல்ல புத்தகம். கவிதை அழகு! [Desanthiri Book Pdf Download]
சிறு வயதில் ஜன்னலுக்கு வெளியே எட்டிப்பார்த்து உலகைக் காண ஆரம்பித்த ஆசிரியர் எஸ்.ராமகிருஷ்ணன் இன்றளவும் பயன்பட்டுக்கொண்டே இருக்கிறார். வரலாற்று புத்தகங்களில் இலக்கியங்களில் நாம் வெறுமனே படித்துவிட்டு கடந்துபோகும் இடங்களை ஆசிரியர் நேரே சென்று பார்ப்பதும் அந்த பயண அனுபவங்களை வரலாற்று பின்னனியோடு எழுதுவதும் சிறப்பான விசயம். தேசாந்திரி என்ற இந்த புத்தகத்தில் எப்படி தனக்கு பயண ஆர்வம் எழுந்தது என்பது பற்றியும் இளம் வயது அனுபவங்கள் பற்றியும் பல இடங்களுக்கு சென்ற அனுபவங்கள் குறித்தும் மிகவும் நேர்த்தியாக எழுதியுள்ளார். குறிப்பாக சொல்லவேண்டுமானால், ஒவ்வொரு பகுதி துவங்கும் போதும் ஒரு அழகான கவிதையை தந்து கட்டுரையை துவங்கிருப்பது இன்னும் சிறப்பு.
கடவுளைக் கண்டேன்
எதையும் கேட்கவே தோன்றவில்லை
அவரும் புன்னகைத்துப் போய்விட்டார்
ஆயினும் மனதிலே ஒரு நிம்மதி
– ஆத்மாநாம்
சில தலைப்புகள் :
கடலளவு வெளிச்சம்
சாரநாத்தில் ஒரு நாள்
கூந்தல் கிணறு
லோனாவாலாவில் பார்த்த மழை
பாடப்புத்தகங்களுக்கு வெளியே
கண்ணால் வரைந்த கோடு
நிலமெங்கும் பூக்கள்
நாரைகளின் நடனம்
இதுபோன்று இன்னும் பல தலைப்புகளில் கட்டுரைகள் உள்ளன.
நல்லதங்காள் கதை உங்களுக்காக…..
இந்த புத்தகத்தில் “கூந்தல் கிணறு” என்ற கட்டுரையில் நல்லதங்காள் என்ற பெண்ணைப் பற்றிய கதை உள்ளது. அது உங்களுக்காக….
பஞ்சம் பிழைப்பதற்காக தனது தேசத்தைவிட்டு ஏழு குழந்தைகளை அழைத்துக்கொண்டு பசியும் தாகமுமாக அண்ணன் வீடு வந்து சேர்கிறாள் நல்லதங்காள். அண்ணன் வரவேற்று அடைக்கலம் தருகிறான். ஆனால், அண்ணி மூளி, அலங்காரிக்கோ நல்லதங்காளை பிடிக்கவில்லை. அண்ணனுக்குத் தெரியாமல் கொடுமை படுத்துகிறாள்.
அண்ணன் வேட்டைக்குப் போன நாளில் நல்லதங்காளை அடித்து சித்ரவதை செய்து கொதிக்கும் கூழை அவள் தலையில் கவிழ்த்திவிடுகிறாள் மூளி. பிள்ளைகள் பசியில் துடிக்கிறார்கள். வாழ்வதற்கு வழியில்லாமல் போன நல்லதங்காள் தன் பிள்ளைகளை அழைத்துக்கொண்டு போய் ஒரு கிணற்றில் ஒவ்வொருவராகப்போட்டுவிட்டு தானும் குதித்து தற்கொலை செய்துகொள்கிறாள்.
உண்மை அறிந்து மூளி அலங்காரியை மொட்டையடித்து மூக்கை அறுத்து துரத்தி விடுகிறான் அண்ணன். தங்கையைக் காவுகொண்ட கிணற்றில் தானும் விழப்போகிறான். கடவுள் தோன்றி யாவரையும் உயிர்ப்பிக்கிறார்.
இந்தக்கதையில் வரும் கிணற்றை பார்வையிட்டு அதனைப் பற்றியும் எழுதி உள்ளார் ஆசிரியர்.
Click Here To Download Desanthiri Book PDF Download
எங்களது கட்டுரைகளை நீங்கள் தவறாமல் படிக்க விரும்பினால் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்து பின்தொடருங்கள். கூறவே வாட்ஸ்ஆப் பட்டனை அழுத்தி எங்களுடைய குரூப்பில் இணைத்துக்கொண்டு பதிவுகளை பெறுங்கள்
Click Here To Download Desanthiri Book PDF Download
மேலும் நூல்கள் பற்றி படிக்க….