ஐ.ஏ.எஸ் என்பது கனவு படிப்பு. நீங்கள் ஏழையோ பணக்காரரோ யாராக இருந்தாலும் சிறு வயதில் இருந்தே திட்டமிட்டு படித்தால் ஐ.ஏ.எஸ் ஆக முடியும். வறுமை, உடல் குறைபாடு உள்ள பலரும் கூட முயற்சியினால் IAS அதிகாரியாக உருவாகி இருக்கிறார்கள். கடின முயற்சி இருந்தால் எவரும் சாதிக்கலாம்.
சிறிய வயது பிள்ளைகளிடம் ‘எதிர்காலத்தில் என்னவாக நீ ஆக வேண்டும்?’ என கேட்டால் பெரும்பாலான பிள்ளைகளின் பதிலாக ‘கலெக்டர்’ ஆக வேண்டும் என்பதாகத்தான் இருக்கும். ஆனால், வயது ஆக ஆக அவர்களின் இந்த எண்ணம் என்பது கடலினுள் மூழ்கியிருக்கும் முத்து போல ஆகிவிடுகிறது. சிலர் மட்டுமே, சிறுவயது கனவை நினைவாக்குகிறார்கள். ஏன் பலர் தங்களது ஐ.ஏ.எஸ் கனவை நோக்கி நகர்வது இல்லை?
> ஐ.ஏ.எஸ் படிப்பதெல்லாம் சாதாரணம் இல்லை, அதற்கு மிகவும் கஷ்டப்பட வேண்டும் என நினைத்திருக்கலாம்
> சரியான ஆரம்பகால வழிகாட்டிகள் இல்லாமல் இருந்திருக்கலாம்
> நாளடைவில் கவனம் வேறு படிப்பில் திரும்பியிருக்கலாம்
இதுபோன்ற பல காரணங்கள் இருக்கின்றன. இவற்றில் மிக முக்கியமான காரணம் என்பது ‘ஐ.ஏ.எஸ்’ தேர்வு பற்றிய அறிமுகம் பலருக்கும் இல்லாததே.
இந்தப்பதிவில் முயன்றவரைக்கும் மிகவும் எளிமையாக ஐ.ஏ.எஸ் தேர்வு முறை குறித்து உங்களுக்கு விளக்க முயற்சி செய்துள்ளேன். நீங்களும் படியுங்கள், உங்களுக்கு தெரிந்த மாணவர்களுக்கும் பகிருங்கள்.
நீங்கள் ஆசிரியர் ஆக வேண்டும் என்ற கனவு உடையவரா எப்படி ஆவது? இங்கே கிளிக் செய்து படியுங்கள்
நீங்கள் மருத்துவர் ஆக வேண்டும் என எண்ணுகிறீர்களா? இங்கே கிளிக் செய்து படியுங்கள்.
நீங்கள் என்ஜினீயர் ஆக வேண்டுமா? இங்கே கிளிக் செய்து படியுங்கள்
Civil Services Examination எந்த பணிகளுக்கு நடத்தப்படுகிறது?
மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம் [UPSC] மத்திய அரசின் உயர் பதவிகளுக்கு தேவையான ஆட்களை தேர்வு செய்திட சிவில் சர்வீசஸ் தேர்வு என்ற ஒன்றை நடத்துகிறது. இந்தத் தேர்வானது ஐ.ஏ.எஸ் பணிக்கு மட்டுமேயானது இல்லை. அதோடு சேர்த்து பல்வேறு பணிகளுக்கும் இந்தத்தேர்வு நடத்தப்படுகிறது. குறிப்பிட்ட அந்தத் தேர்வில் நீங்கள் வாங்கும் மதிப்பெண்ணுக்கு ஏற்றவாறு பின்வரும் வரிசையில் நீங்கள் பதவிகளை தேர்ந்தெடுக்கலாம்.
Indian Administrative Service or IAS
Indian Foreign Service or IFS
Indian Police Service or IPS
List of Group A Services by UPSC
Indian P & T Accounts & Finance Service
Indian Audit and Accounts Service
Indian Revenue Service (Customs and Central Excise)
Indian Defence Accounts Service
Indian Revenue Service (I.T.) or IRS
Indian Ordnance Factories Service (Assistant Works Manager, Administration)
Indian Postal Service
Indian Civil Accounts Service
Indian Railway Traffic Service
Indian Railway Accounts Service
Indian Railway Personnel Service
Indian Railway Protection Force (Assistant Security Commissioner)
Indian Defence Estates Service
Indian Information Service (Junior Grade)
Indian Trade Service, Group ‘A’ (Gr. III)
Indian Corporate Law Service
List of Group – B Services
Armed Forces Headquarters Civil Service (Section Officer’s Grade)
Delhi, Andaman & Nicobar Islands, Lakshadweep, Daman & Diu and Dadra & Nagar Haveli Civil Service
Delhi, Andaman & Nicobar Islands, Lakshadweep, Daman & Diu and Dadra & Nagar Haveli Police Service
Pondicherry Civil Service
Pondicherry Police Service
ஆக நீங்கள் இத்தனை பணிகளுக்காகத் தான் சிவில் சர்வீசஸ் தேர்வை எழுதுகிறீர்கள் என்பதை புரிந்துகொள்ளுங்கள்.
சிவில் சர்வீசஸ் தேர்வு எழுத என்ன தகுதிகள் வேண்டும்?
வயது : நீங்கள் 21 வயது முடிந்தவராகவும் 30 வயதுக்கு மேல் இல்லாதவராகவும் இருக்க வேண்டும். ஓபிசி மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு அதிகபட்ச வயது 33 வயது ஆகும். தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இனத்தை சேர்ந்தவர்கள் [SC/ST] இந்த தேர்வை 35 வயது வரைக்கும் எழுதலாம்.
கல்வித்தகுதி : நீங்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் ஒரு பட்டப்படிப்பை முடித்திருந்தால் போதும் நீங்கள் சிவில் சர்வீசஸ் தேர்வை எழுத முடியும்.
எத்தனை முறை எழுதலாம்?
குடிமை பணித்தேர்வுகளை ஒருவர் 4 முறை எழுதலாம். நீங்கள் முதல்நிலை தேர்வுக்கு சென்று உங்களது பதிவெண்ணை விடைத்தாளில் எழுதிவிட்டாலே நீங்கள் ஒருமுறை எழுதிவிட்டதாக கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். ஓபிசி பிரிவினர் 7 முறை இந்தத்தேர்வை எழுதலாம். அதேபோல, SC/ST பிரிவினர் இந்தத்தேர்வை எத்தனை முறை வேண்டுமானாலும் குறிப்பிட்ட வயதிற்குள் எழுதிக்கொள்ள முடியும்.
சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு விண்ணப்பம் செய்வது எப்படி?
எப்படி நீங்கள் TNPSC தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பம் செய்வீர்களோ அது போலவே நீங்கள் சிவில் சர்வீசஸ் தேர்வுக்கும் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இதற்கு நீங்கள் upsconline.nic.in என்ற இணையதளத்திற்கு சென்று விண்ணப்பிக்க முடியும். அதேபோல, நீங்கள் விண்ணப்ப படிவத்தை மாவட்ட தலைமை தபால் நிலையங்களில் பெற்றும் குறிப்பிட்ட முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பத்தை பூர்த்தி செய்திடும் போது மிகவும் கவனமாகவும் சரியாக தகவலோடும் இருத்தல் அவசியம்.
சிவில் சர்வீசஸ் தேர்வு முறை என்ன?
சிவில் சர்வீசஸ் தேர்வு மூன்று கட்டங்களாக நடைபெறும்.
1. நுழைவுத்தேர்வு [Preliminary Exam]
2. பிரதானத்தேர்வு [Main Exam]
3. நேர்முகத்தேர்வு [Personality Test]
நுழைவுத்தேர்வு பொதுவாக ஜூன் மாதத்தில் நடத்தப்படும். இதற்கான அறிவிப்பு முந்தைய ஆண்டு டிசம்பர் மாதமே வெளியாகும். இதில் இரண்டு தாள்கள் இருக்கும். 1. பொது அறிவுப்பாடம் 2. விருப்பப்பாடம். அதனை எழுதி தேர்ச்சி அடையும் மாணவர்களுக்கு பிரதானத்தேர்வு நடைபெறும். இதிலே ஒன்பது தாள்கள் இருக்கும். இதிலும் தேர்ச்சி அடைந்தால் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்.
மூன்று கட்ட தேர்வுகளிலும் இருக்கும் பாடங்கள், நீங்கள் எப்படி தேர்வுக்கு தயாராக வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு விசயங்களை பின்வரும் புத்தகத்தை டவுன்லோட் செய்து படித்து தெரிந்துகொள்ளுங்கள். இறையன்பு அவர்களும் IAS ஆவது எப்படி என்பதற்காக புத்தகம் வெளியிட்டு உள்ளார் அதனையும் வாங்கி படியும்.
ஐ.ஏ.எஸ் க்கு படிப்பது எப்படி? Download PDF Book Here
தமிழிலும் எழுதலாம்
ஆங்கிலத்தில் மட்டுமே சிவில் சர்வீசஸ் தேர்வை எழுத முடியும் என்பது உண்மை அல்ல, நீங்கள் தமிழ் மொழியிலும் இந்தத் தேர்வை எழுத முடியும். நேர்முகத்தேர்வையும் கூட நீங்கள் தமிழ் மொழியிலேயே அணுக முடியும். அப்படி செய்து அதிகாரிகளாக உள்ளோர் பலர். தமிழ் மொழி என்பது உங்களுக்கு ஒரு வாய்ப்பு. அதற்காக, ஆங்கிலம் தெரியாமல் நீங்கள் சிறந்ததொரு அதிகாரியாக நம்பிக்கையை பெறுவது நிர்வாக ரீதியில் சற்று கடினமான ஒன்றாக இருக்கும். சிவில் சர்வீசஸ் தேர்வில் தேர்ச்சி அடையும் நீங்கள் எந்தப்பகுதிக்கு வேண்டுமானாலும் பணியமர்த்தப்பட வேண்டிய கட்டாயம் எழும். ஆகவே தமிழ் மொழியோடு ஆங்கிலத்தையும் முறையே நீங்கள் கற்று வருவது உங்களுக்கு கூடுதல் பலம் சேர்க்கும்.
கடினமான சூழலில் IAS அதிகாரிகளாக ஆனவர்கள் வெற்றிக்கதையை இங்கே படிக்கலாம்
எங்களது கட்டுரைகளை நீங்கள் தவறாமல் படிக்க விரும்பினால் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்து பின்தொடருங்கள். கூறவே வாட்ஸ்ஆப் பட்டனை அழுத்தி எங்களுடைய குரூப்பில் இணைத்துக்கொண்டு பதிவுகளை பெறுங்கள்