MBBS படிப்பது எப்படி? NEET தேர்வு பற்றிய முழு தகவல்

இந்தியர் ஒருவர் MBBS, BDS, ஆயுர்வேத மருத்துவம் படிக்க வேண்டுமெனில் அவர் நீட் தேர்வு எழுதி தகுதி மதிப்பெண்ணை வாங்கியிருப்பது அவசியமாகிறது. ஒரு மாணவர் வெளிநாட்டில் மருத்துவம் படிக்க வேண்டும் என்றாலும் கூட நீட் தேர்வு அவசியமாகிறது.

12 ஆம் வகுப்பிற்கு பிறகு படிப்பதற்கு இருக்கும் ஏராளமான படிப்புகளை இங்கே கிளிக் நீங்கள் தெரிந்துகொள்ளலாம். எத்தனை படிப்புகள் இருந்தாலும் மருத்துவர் ஆவது என்பது பலரது கனவு. ஆனால் மருத்துவர் ஆவதற்கு பல்வேறு சோதனைகளை நீங்கள் கடந்தாக வேண்டும். இந்தியா முழுமைக்கும் சுமார் 15 லட்சம் முதல் 20 லட்சம் வரையிலான மாணவர்கள் மருத்துவர் ஆவதற்கான போட்டியில் ஈடுபடுகிறார்கள். ஆனால் இருக்கக்கூடிய மருத்துவ இருக்கைகளோ 80000 என்ற அளவில் தான் இருக்கின்றது. ஆகவே தான் கடுமையான போட்டி நிலவுகிறது. சிறுவயதில் இருந்தே மருத்துவர் ஆக வேண்டும் என்ற குறிக்கோளோடு படிக்கக்கூடிய மாணவரால் மருத்துவர் ஆக முடியும்.

மருத்துவர் ஆக வேண்டும் என நினைக்கும் மாணவர்கள் தற்போது எதிர்கொள்ள வேண்டிய முதல் சவால் நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவதோடு நல்ல மதிப்பெண்ணை பெறுவது தான். ஆங்கிலத்தில் National Eligibility cum Entrance Test (NEET) என அழைக்கப்படும் இந்தத்தேர்வில் தகுதி மதிப்பெண்ணை பெற்றால் தான் நீங்கள் பணம் கட்டியாவது MBBS படிப்பை படிக்க முடியும். வெளிநாட்டில் படிக்க வேண்டும் என்றாலும் NEET தேர்ச்சி என்பது அவசியம்.

National Testing Agency (NTA) என்ற அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் NEET பரீட்சையை நடத்துகிறது. இந்தியா முழுமைக்கும் ஒரே கட்டமாக நடத்தப்படும் NEET தேர்வில் தகுதி பெற்றால் மட்டுமே ஒருவரால் மருத்துவர் ஆக முடியும். நீட் தேர்வை இந்திய உச்சநீதிமன்றமும் அங்கீகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. AIIMS கல்லூரியில் 1899 இடங்களும் JIPMER இல் 249 இடங்களும் நீட் தேர்வில் தேர்வாகும் மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக, 542 மருத்துவ கல்லூரிகள், 15 AIIMS, 2 JIPMER கல்லூரிகள் நீட் தேர்வு மூலமாக இடங்களை நிரப்புகின்றன. ஒவ்வொரு ஆண்டும் நீட் தேர்வில் பங்கேற்கும் மாணவர்களது எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. கடந்த ஆண்டு, 13.66 லட்சம் மாணவர்கள் தேர்வில் பங்கேற்ற நிலையில் 7.71 லட்சம் மாணவர்கள் தான் தகுதி மதிப்பெண்ணை பெற்றார்கள். 

நீட் தேர்வு என்றால் என்ன?

நான் ஏற்கனவே தெரிவித்தது போல இந்தியர் ஒருவர் MBBS, BDS, ஆயுர்வேத மருத்துவம் [BAMS/BUMS/BYMS/BSMS/BHMS] படிக்க வேண்டுமெனில் அவர் நீட் தேர்வு எழுதி தகுதி மதிப்பெண்ணை வாங்கியிருப்பது அவசியமாகிறது. ஒரு மாணவர் வெளிநாட்டில் மருத்துவம் படிக்க வேண்டும் என்றாலும் கூட நீட் தேர்வு அவசியமாகிறது.

நீட் தேர்வில் பொது பிரிவு மாணவர்களுக்கு 50% மதிப்பெண், SC/ST/OBC மாணவர்களுக்கு 40% மதிப்பெண் தகுதி மதிப்பெண்ணாக வைக்கப்பட்டு இருக்கிறது. நீட் தேர்வு மொத்தமாக 720 மதிப்பெண்ணுக்கு நடத்தப்படுகிறது. 

நீட் தேர்வு முடிந்த பிறகு நடக்கும் கலந்தாய்வு

நீட் தேர்வு முடிந்த சில வாரங்களுக்கு பிறகு விடையை தேர்வு நடத்தும் அமைப்பு வெளியிடும். அதனை வைத்துக்கொண்டே மாணவர்கள் தாங்கள் எவ்வளவு மதிப்பெண் பெறுவோம் என்பதை கண்டறிந்துவிடுவார்கள். கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட முடிவுகளைக்கொண்டு இந்திய அளவில் தங்களது நிலை குறித்தும் அவர்களால் அறிந்துகொள்ள முடியும். அதனை வைத்துக்கொண்டே பல மாணவர்கள் எந்த கல்லூரியில் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்பது உள்ளிட்ட முடிவுகளை எடுத்துவிடுவார்கள். நீட் தேர்வு முடிந்த பிறகு தகுதி மதிப்பெண்ணை ஒரு மாணவர் பெற்றுவிட்டால் அவரால் மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளுக்கு விண்ணப்பிக்க முடியும்.

>> தகுதி மதிப்பெண்ணை பெறுதல்

>> விண்ணப்பித்தல்

>> கலந்தாய்வில் கலந்துகொண்டு இடத்தினை பிடித்தல் 

மருத்துவ கல்லூரிகளில் இருக்கும் இடங்கள்

அரசு மருத்துவ கல்லூரிகளில் 15% இடங்கள் “இந்திய அளவிற்கும்” ஆங்கிலத்தில் இதனை All India Quota என சொல்லுவார்கள், மீதமுள்ள இடங்களை [85%] அந்தந்த மாநில மாணவர்களுக்கும் கொடுப்பார்கள். அதேபோல மத்திய அரசு நடத்தக்கூடிய மருத்துவ கல்லூரிகள் மற்றும் தன்னாட்சி மருத்துவ கல்லூரிகளில் உள்ள இடங்கள் All India Quota விற்கு செல்லும். All India Quota இடங்களுக்கான கலந்தாய்வை சுகாதார சேவைகள் இயக்குநரகம் [Directorate General of Health Services] நடத்தும். மாநில அரசுகளுக்கு இருக்கும் 85% இடங்கள் மற்றும் தனியார் கல்லூரிகளில் மாநிலத்திற்கு ஒதுக்கப்பட்டிருக்கும் இடங்களுக்கான கலந்தாய்வை மாநில அரசு நடத்தும்.

[ஆந்திராவில் இருக்கும் மருத்துவ கல்லூரிகளில் இருந்து 15% இடங்கள் மத்திய அரசுக்கு கொடுக்கப்படுவதில்லை என சொல்லப்படுவது உண்டு. தற்சமயம் மாற்றம் வந்திருக்கிறதா என தெரியவில்லை. ஆனால் ஒரு மாநில அரசு அப்படி செய்தால், அந்த மருத்துவ கல்லூரிக்கு மத்திய அரசு எந்தவித உதவியும் செய்யாது. அதேபோல அந்த மாநில மாணவர்களால் All India Quota விற்கு விண்ணப்பிக்க முடியாது]

ஜூலை 2019 வாக்கில் மட்டும் தமிழக்தில் இருக்கும் மொத்த மருத்துவ இடங்களின் எண்ணிக்கை 7150. இதில் 26 அரசு மருத்துவ கல்லூரிகளில் இருக்கும் 3400 இடங்கள், 23 தனியார் மருத்துவ கல்லூரிகளில் இருக்கும் 3750 இடங்களும் அடங்கும். இதுதவிர 9 மருத்துவ கல்லூரிகள் அமைக்கப்பட்டால் கூடுதலாக 1350 இடங்கள் கூடும் பட்சத்தில் 8500+ இடங்களுக்கு மேல் மருத்துவ இருக்கைகள் கொண்ட மாநிலமாக தமிழகம் இருக்கும். 

என்னென்ன சான்றிதழ்கள் அவசியம்?

ஒரு மாணவர் நீட் தேர்வில் தகுதி மதிப்பெண்ணை பெற்றுவிட்டால் கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவார். அப்படி அழைக்கப்படும் போது பின்வரும் சான்றிதழ்களை கொண்டு செல்வது அவசியம்.

NEET admit card 2020 [நீட் அழைப்பு கடிதம்]

NEET rank letter [நீட் ராங்க்]

Class 10 or 12 certificate and mark sheet

ID Proof Domicile Proof (only for state quota seats)

[குடியேற்ற சான்று] 

நீட் தேர்விலும் இடம் கிடைக்காமல் போனால் என்ன செய்வது?

நீங்கள் மருத்துவம் படிக்க விரும்பினால் நிச்சயமாக நீட் தேர்வில் குறிப்பிட்ட மதிப்பெண்ணை பெற்றே ஆக வேண்டும். ஒருவேளை நீங்கள் அதிக மதிப்பெண்ணை பெற்றும் உங்களைவிட அதிக மதிப்பெண் பலர் பெற்று இருப்பதனால் வாய்ப்பு கிடைக்காமல் போகலாம். அப்படிப்பட்ட சூழ்நிலை ஏற்படும் போது மாணவர்கள் கவலைப்பட கூடாது என அறிவுறுத்துகிறார்கள் வல்லுநர்கள். இந்த ஆண்டு சரியான மதிப்பெண்ணை பெற முடியாத மாணவர்கள் அடுத்த ஆண்டு தேர்வில் கலந்துகொள்ளலாம். உங்களுக்கு தேவைப்படுகிற ஒரு இடத்திற்கு இங்கே 60,000 இடங்கள் இருக்கின்றன.

ஆகவே விட்டுக்கொடுக்காமல் போட்டி போடுங்கள் என்பதே பலரின் கருத்து. நீட் தேர்வு தேவைப்படாத மருத்துவம் சார்ந்த படிப்புகள் இங்கே இருக்கின்றன, மருந்தகம், நர்சிங், பயோடெக்னாலஜி, பயோமெடிக்கல் இன்ஜினியரிங், தடய அறிவியல், மருத்துவ உளவியல், மருத்துவ ஆய்வக தொழில்நுட்பவியலாளர், ஆப்டோமெட்ரி ஆகவே இவற்றில் மாணவர்கள் சேர்ந்து படிக்கலாம். 

Read More : 12 ஆம் வகுப்பிற்கு பிறகு மேற்படிப்பு வாய்ப்புகள்

எங்களது கட்டுரைகளை நீங்கள் தவறாமல் படிக்க விரும்பினால் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்து பின்தொடருங்கள். கூறவே வாட்ஸ்ஆப் பட்டனை அழுத்தி எங்களுடைய குரூப்பில் இணைத்துக்கொண்டு பதிவுகளை பெறுங்கள்



Get Updates in WhatsApp