தமிழகத்தை பொறுத்தவரைக்கும் பொறியியல் படிப்பில் சேருவதற்கு மாணவர்கள் எந்தவித நுழைவுத்தேர்வையும் எழுதவேண்டிய அவசியம் இல்லை. மாணவர்கள் தங்களது 12 ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களை அடிப்படையாக வைத்தே பொறியியல் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.
Engineering [BE] படிப்பு என்பது இன்றளவும் வரவேற்பிற்கு உரிய படிப்பாக இருக்கிறது. படித்தவுடன் நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கும் என்பதனால் பல பெற்றோர்களும் தங்களது பிள்ளைகளை பொறியியல் படிப்பில் சேர்ப்பதற்கு விரும்புகிறார்கள். தமிழ்நாட்டை பொறுத்தவரைக்கும் பொறியியல் படிப்பு சேர்க்கையை TNEA (Tamil Nadu Engineering Admissions) என்ற அமைப்பு நடத்துகிறது. தமிழகத்தை பொறுத்தவரைக்கும் பொறியியல் படிப்பில் சேருவதற்கு மாணவர்கள் எந்தவித நுழைவுத்தேர்வையும் எழுதவேண்டிய அவசியம் இல்லை. மாணவர்கள் தங்களது 12 ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களை அடிப்படையாக வைத்தே பொறியியல் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.
TNEA Eligibility Criteria 2021
பின்வரும் தகுதிகளை கொண்ட மாணவர்கள் தமிழகத்தில் TNEA நடத்தக்கூடிய பொறியியல் கலந்தாய்வில் கலந்துகொள்ள முடியும்.
> 8 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை தமிழகத்தில் படித்திருந்தால் விண்ணப்பிக்கலாம்
> மத்திய அரசு பணியாளர்கள் [எங்கு பிறந்தவர்களாக இருந்தாலும் பரவாயில்லை) அல்லது பிள்ளைகளின் பாதுகாப்பாளர்கள் [தாய் தந்தை இல்லாத சூழலில்] தமிழகத்தில் TNEA நடத்தும் கலந்தாய்வு நடக்கும் தேதிக்கு முன்னர் 5 ஆண்டுகள் தமிழகத்தில் பணியில் இருந்தால் விண்ணப்பிக்கலாம்.
> அகில இந்திய சேவை தமிழ்நாடு கேடர் அதிகாரிகள் பிள்ளைகள் [Sons/daughters All India Service Tamil Nadu cadre officers]
> கடந்த 5 ஆண்டுகளாக அரசு அங்கீகாரம் பெற்ற அமைப்புகளில் பணியாற்றுகிறவர்களின் குழந்தைகளும் அவர்களின் இருப்பிடத்தை பொருட்படுத்தாமல் விண்ணப்பிக்கலாம்.
> வேறு மாநிலத்தை சேர்ந்த பிள்ளைகள் தமிழகத்தில் 8 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்திருந்தால் விண்ணப்பிக்கலாம்
> தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட மாணவர்கள் தமிழகத்திற்கு வெளியே VIII, IX, X, XI and XII இந்த படிப்புகளை முடித்திருந்தாலும் விண்ணப்பிக்கலாம்.
TNEA 2021 Eligibility Criteria: Qualifying Exams
நாம் ஏற்கனவே சொன்னதுபோல தமிழகத்தில் பொறியியல் படிப்பதற்கு எந்தவித நுழைவுத்தேர்வையும் எழுதவேண்டிய அவசியம் இல்லை. 12 ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களை அடிப்படியாக வைத்தே பொறியியல் மாணவர் சேர்க்கை நடத்தப்படும். அதன்படி, கணிதம், இயற்பியல், வேதியியல் பிரிவுகளை படித்த மாணவர்கள் பெற வேண்டிய மதிப்பெண் விவரங்கள் இவையே.
அதேபோல தற்போதைய விதிப்படி மாணவர்கள் தங்களது 12 ஆம் வகுப்பில் கணிதம், இயற்பியல் அல்லது வேதியியல் இவற்றில் ஏதாவது ஒரு பாடத்தை படித்திருந்தாலும் கூட பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பிக்க முடியும்.
TNEA Counselling Procedure
விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு பின்வரும் விதத்தில் தான் கவுன்சிலிங் நடக்கும்.
> தகுதி பட்டியல் வெளியிடப்பட்ட பின்னர், மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்க வேண்டும்.
> நீங்கள் வாங்கிய கட் ஆப் மதிப்பெண் அடிப்படையில் உங்களுக்கு ஒதுக்கப்படும் தேதியில் நீங்கள் பங்கேற்க வேண்டும்.
> ஆன்லைன் முறை மூலம் கவுன்சிலிங் நடத்தப்படும்.
> உங்களுக்கு வழங்கப்பட்ட அழைப்பு கடிதத்தை [call letter] பதிவிறக்கம் செய்திட வேண்டும்.
> நீங்கள் கவுசிலிங்கில் பங்கேற்க விரும்பினால் அதற்கென நிர்ணயம் செய்யப்பட்ட கட்டணத்தை ஆன்லைன் வாயிலாக செலுத்த வேண்டியது அவசியம்.
> கவுன்சிலிங் கட்டணம் பொது பிரிவுக்கு ரூ. 5000 / – மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த எஸ்சி, எஸ்சிஏ, எஸ்.டி. பிரிவுக்கு ரூ. 1000 / – செலுத்திய பிறகு, மாணவர்கள் ஆவண சரிபார்ப்பு செயல்முறைக்கு செல்ல வேண்டும்.
> மாணவர்கள் தங்களது அசல் சான்றிதழை =நகல்களுடன் கொண்டு வர வேண்டும்.
> மாணவர்கள் சரிபார்ப்புக்காக தங்கள் ஆவணங்களை பதிவேற்ற வேண்டும்.
> அதன் பிறகு, மாணவர்கள் தங்கள் விருப்பப்படி கல்லூரிகள் மற்றும் படிப்புகளின் தேர்வுகளை நிரப்ப வேண்டும்.
> கலந்தாய்வின் போது, மாணவர்கள் தங்களது தரவரிசைப்படி கிடைக்கக்கூடிய இடங்களிலிருந்து ஒரு இடத்தைத் தேர்ந்தெடுக்கலாம்.
> மாணவர்கள், தங்களுக்கு விருப்பமான கல்லூரிகள் மற்றும் படிப்புகளை தேர்ந்தெடுத்து குறைந்தது மூன்று தேர்வுகளை சமர்ப்பிக்க வேண்டும்.
> இருக்கை ஒதுக்கப்பட்டதும், மாணவர்கள் தங்கள் ஒதுக்கீட்டு சான்றிதழை தரவிறக்கம் செய்துகொள்ள வேண்டும்.
> அந்த கடிதத்தை கல்லூரிக்கு கொண்டு சென்று நீங்கள் சேர்ந்துகொள்ள முடியும்.
> குறிப்பிட்டுள்ள தேதிக்கு முன்னராக மாணவர்கள் கல்லூரிக்கு செல்ல வேண்டியது அவசியம். இல்லையேல் உங்களுக்கென ஒதுக்கப்பட்ட இடம் காலாவதி ஆகிவிடும்.
Documents Required for Engineering Counselling
நீங்கள் பொறியியல் படிப்பில் சேர வேண்டுமெனில் பின்வரும் சான்றிதழ்கள் அதற்கு மிகவும் அவசியம்.
10th class mark sheet
12th class or equivalent mark sheet
12th class hall ticket
Transfer certificate
Permanent community certificate (for reserved categories)
Nativity certificate (if applicable)
Counselling call letter
Passport size photographs