சமூக வலைதளத்தில் உதவி கேட்போர் மீது வழக்கு தொடுக்க கூடாது : சுப்ரீம் கோர்ட் அதிரடி

‘ஒருவர் தங்களுக்கு உதவி வேண்டுமென சமூக வலைதளத்திலோ அல்லது இணையத்திலோ பதிவிடுவது குற்றம் ஆகாது. நாங்கள் ஒவ்வொரு மாநில அரசுக்கும் மாநில காவல்துறை தலைவருக்கும் ஒன்றை சொல்லிக்கொள்கிறோம். நீங்கள் இப்படி உதவி கேட்போர் மீது நடவெடிக்கை எடுத்தால் இந்த கோர்ட்டை அவமதிப்பது என்பதை நினைவிலே கொள்ளுங்கள்’ என சொல்லியிருக்கிறது.

Read more

பொதுப்பிரிவு என்பது ‘இடஒதுக்கீடு’ அல்ல, அனைவருக்கும் பொதுவானது : உச்சநீதிமன்றம்

இடஒதுக்கீடு என்பது விவாதத்திற்கு உரியதாகவும் குழப்பத்திற்கு உரியதாகவும் இருந்து வருகிறது. இடஒதுக்கீட்டில் பங்குபெறுகிறவர்கள் பொதுப்பிரிவில் உள்ளவர்களைக்காட்டிலும் அதிக மதிப்பெண்ணை பெற்றாலும் அவர்களை அனுமதிக்காத சூழலில் “பொதுப்பிரிவு என்பது ‘இடஒதுக்கீடு’ அல்ல எனவும் அது தகுதி படைத்த எவருக்கும் அது பொருந்தும் என்றும் உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது.

Read more

க/பெ ரணசிங்கம் : எப்படி இருக்கிறது படம்?

பெயர்போடும்போதே ஒலிக்கின்ற பாடல் வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்கிறவர்களின் வலியை பற்றிய படமிது என்பதை உணர்த்துகிறது . சொந்த ஊரில் ஆட்டுக்குட்டிகளை விற்று வெளிநாட்டில் ஒட்டகம் மேய்க்கப்போறியா எனும்

Read more

“UPSC Jihad” நிகழ்ச்சியை ஒளிபரப்ப தடை | சேனல்களை கண்டித்த நீதிமன்றம்

திட்டமிட்டு அரசுப்பணிகளில் முஸ்லிம்கள் பெருமளவில் இடம்பிடித்து உள்ளனர். மேலும் அவர்கள் ஊடுருவிக்கொண்டு இருக்கிறார்கள். இது ஒரு ஜிகாத் என்ற தலைப்பில் ஒரு நிகழ்ச்சியை நடத்தியது சுதர்சன் எனும் இந்தி சேனல். உச்சநீதிமன்றம் கடுமையாக கண்டித்து இருக்கிறது.

Read more

அரியர் வைத்திருந்தாலும் தேர்ச்சி – செல்லுமா? அதை கொண்டாடலாமா?

தமிழக அரசு அண்மையில் வெளியிட்ட ஒரு அறிவிப்பினால் சமூக வலைதளங்களில் முதல்வர் திரு எடப்பாடி பழனிசாமி அவர்கள் கொண்டாடப்படுகிறார். சில இடங்களில் இவரது அறிவிப்பை பாராட்டி கட்அவுட்களும் கூட வைத்திருக்கிறார்கள். அப்படியென்ன அறிவிப்பு என கேட்கிறீர்களா? “ஒரு மாணவர் கடந்த பருவங்களில் நடைபெற்ற தேர்வில் தேர்ச்சி அடையாமல் இருந்து இந்த முறை மறுதேர்வுக்கு பணம் செலுத்தி இருந்தால் போதும் அவர் அந்த பாடத்தில் தேர்ச்சி என அறிவிக்கப்படுவார்” என்பது தான்.

Read more

நல்லாசிரியர் விருது வென்ற இரண்டு தமிழக ஆசிரியர்கள்

மத்திய கல்வி அமைச்சகம் சிறந்த ஆசிரியர்களுக்கான தேசிய விருதை வென்ற 47 நல்லாசிரியர்களின் பெயரை வெளியிட்டு இருக்கிறது. இதில் தமிழகத்தை சேர்ந்த இரண்டு ஆசிரியர்கள் இடம்பெற்று இருக்கிறார்கள்.

Read more

பெண்களுக்கு சொத்து உரிமை – மீண்டும் நிறுவப்பட்ட பெண்ணுரிமை

உச்சநீதிமன்றம் இந்த பிரச்சனைகள் தொடர்பாக மிகத்தெளிவாக தீர்ப்பளித்து இருக்கிறது. அதன்படி, 2005 ஆம் சட்டம் நிறைவேற்றப்பட்ட போது சொத்தின் உரிமையாளரான அப்பா உயிருடன் இல்லை என்றாலும் கூட மகளுக்கு மகனைப்போலவே சொத்தில் சம பங்கு உண்டு. அதேபோல 2005 க்கு முந்தைய காலகட்டத்துக்கும் இந்த சட்டம் பொருந்தும் என தெளிவுபடுத்தி இருக்கிறது.

Read more

அப்துல்கலாம் அவர்களை இளமையில் செதுக்கியவர்கள் இவர்களே!

ஒரு மனிதன் பிற்காலத்தில் என்னவாக ஆகப்போகிறார், எப்படி நடந்துகொள்ளப்போகிறார் என்பதை அவரது மூதாதையரின் ஜீன்கள் மட்டுமே தீர்மானிப்பது இல்லை. மாறாக, அந்த மனிதர் எப்படிப்பட்ட மனிதர்களோடு பழகுகிறார், அவர் எந்த சூழ்நிலையில் வளர்கிறார் என்பதையெல்லாம் பொறுத்தான் பிற்காலத்தில் அவரது நடத்தை தீர்மானிக்கப்படுகிறது. இந்தியாவின் மிக உயரிய பொறுப்பான குடியரசுத்தலைவர் பதவியில் இருந்தபோதும் மாறாத குணமுடைய அமைதியாளர் அப்துல் கலாம் அவர்கள். இந்த அமைதியான பண்பும் அரவணைத்து செல்லும் பாங்கும் எங்கிருந்து இவருக்கு கிடைத்தது? இதனை அக்னி சிறகுகள் புத்தகத்தில் இருந்து தெரிந்துகொள்ள முடிகிறது. வாருங்கள் நாமும் அவர்களோடு பயணிப்போம்

Read more

சாவர்க்கர் – காந்தி – முதல் சந்திப்பில் நடந்தது என்ன? | Savarkar Gandhi First Meet

சாவர்க்கர் என்ற பெயர் அண்மையில் அடிக்கடி புழக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது. காந்தியின் கொலையில் சம்பந்தப்பட்டவர் என்பதைத் தாண்டி பெரிய அளவில் தகவல்கள் பொதுமக்களிடத்தில் கிடைக்கவில்லை. காரணம் அவரைப்பற்றி தமிழ் மொழியில் சில புத்தகங்களே எழுதப்பட்டு இருக்கின்றன.

இப்படி பெரும் ஜனங்களால் எதிர்க்கவும் கொண்டாடவும் படுகின்ற வீர் சாவர்க்கர் இளமையில் எப்படி இருந்திருப்பார்? எந்த சூழலில் அவருடைய மனநிலை மாறி இருக்கும்? அவர் முஸ்லீம் மக்களுக்கு எதிரியா? காந்தியின் கொலையில் அவருக்கு பங்களிப்பு உண்டா? என்பது போன்ற தகவல்களை ஆராய முற்பட்டபோது கிடைத்தது தான் இலந்தை சு. ராமசாமி அவர்கள் எழுதியிருக்கும் “வீர் சாவர்க்கர் – வீரம் வீரம் மேலும் கொஞ்சம் வாழ்க்கை” என்ற புத்தகம். நான் அந்த புத்தகத்தை வாசித்துக்கொண்டிருக்கும் தருணத்தில் நமது வாசகர்களுடன் அதுகுறித்து பகிர்ந்துகொள்ள ஆசைப்பட்டு அதன் சில பகுதிகளை உங்களோடு பகிர ஆசைப்படுகிறேன்.

Read more

காவல்துறையினர் சமூகத்தின் அங்கம் என்பதனை உணர வேண்டும்

இந்த சமூகத்தில் நீங்கள் எவ்வளவு பெரிய அதிகாரம் படைத்தவராக இருந்தாலும் கூட ஏதாவது ஒரு சூழலில் பிறரை சார்ந்து தான் வாழ்ந்தாக வேண்டும். உங்களிடம் அதிகாரம் இருக்கும் போது நீங்கள் எப்படி நடந்துகொண்டாலும் கூட பிறர் உங்களை மதித்து நடப்பார்கள், மரியாதை கொடுப்பார்கள். ஆனால் நன்றாக கவனத்தில் கொள்ளுங்கள், அந்த மரியாதை உங்களுக்கானது அல்ல – உங்களுடைய பதவிக்கானது. அந்தப்பதவி போகும்போது உங்களை அவர்கள் எள்ளளவும் கூட மதிக்க மாட்டார்கள்.

Read more