பெயர் : ஜெயலலிதா
உண்மையான பெயர் : கோமளவல்லி
பெற்றோர் : ஜெயராம் -வேதவல்லி
பிறந்த இடம் : மேல்கோட்டை,மாண்டியா மாவட்டம், மைசூர் சமஸ்தானம் (தற்போது கர்நாடகா)
பிறப்பு : 24 பிப்ரவரி 1948
இறப்பு : 5 டிசம்பர் 2016
பதவி : முன்னனி நடிகை ,மாநிலங்களவை உறுப்பினர், அதிமுக பொது செயலாளர்,தமிழக முதல்வர்
ஜெயலலிதா பற்றிய சில குறிப்புகள் :
தமிழக மக்களால் “அம்மா” என்கிற அடைமொழியோடு அன்பாக அழைக்கப்பட்ட பெண்மணி செல்வி ஜெயலலிதா. அவருடைய “மக்களால் நான், மக்களுக்காகவே நான்” என்கிற பேச்சு மக்கள் மத்தியில் பிரபலம். பெண்ணாக இருந்தாலும் அவருடைய ஆளுமை, கட்டுக்கோப்பாக கட்சியை நடத்தும் விதம், மக்களுக்கு புதிய நல்ல திட்டங்களை கொடுத்த விதம் அவரை மக்கள் மத்தியில் அசைக்க முடியாத ஆளுமையாக “இரும்பு பெண்மணியாக” உயர்த்தியது.
சினிமாவில் ஜெயலலிதா :
ஆரம்பகாலத்தில் நடிகையாக தனது வாழ்வை தொடங்கிய செல்வி ஜெயலலிதா 127 படங்களில் நடித்துள்ளார். அப்போதைய தமிழக முன்னனி நடிகர்கள் பலருடனும் நடித்து பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார்.
அரசியலில் ஜெயலலிதா :
எம் ஆர் வீரப்பன் முன்னிலையில் நடந்த நாட்டிய நிகழ்ச்சிக்கு பிறகு ஜெயலலிதாவின் அரசியல் பிரவேசம் ஆரம்பம் ஆனது. மிக நெடிய இடைவெளிக்கு பிறகு எம் ஜி ஆர் அவர்களை சந்தித்தார் ஜெயலலிதா. பிறகு 1981 இல் அதிமுகவில் அக்கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் ஆனார் ஜெயலலிதா.
1984 ஆம் ஆண்டு நடந்த மாநிலங்களவை தேர்தலில் வென்று மாநிலங்களவை உறுப்பினரானார். அவரது ஆங்கில பேச்சை கேட்டு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியே வியந்தார் என சொல்லப்படுகிறது. பிறகு எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு 1989 இல் அதிமுகவின் பொதுச்செயலாளர் ஆனார் ஜெயலலிதா.
தமிழக முதல்வராக ஜெயலலிதா :
[table id=3 /]
ஜெயலலிதாவிற்கு கொடுக்கப்பட்ட விருதுகள் :
கலைமாமணி விருது – தமிழ்நாடு அரசு (1972)
சிறப்பு முனைவர் பட்டம் – சென்னைப் பல்கலைக்கழகம் (டிசம்பர் 19, 1991)
தங்க மங்கை விருது – பன்னாட்டு மனித உரிமைகளுக்கான குழு, உக்ரைன்
ஜெயலலிதா அவர்கள் மீதான வழக்குகள் :
ஜெயலலிதா எந்த அளவிற்கு புகழ் பெற்ற ஆளுமையாக இருந்தாரோ அந்த அளவிற்கு வழக்குகளும் அவர் மீது இருந்தன.
வண்ணத் தொலைக்காட்சி வழக்கு
டான்சி நில வழக்கு
பிளசண்ட் ஸ்டே விடுதி வழக்கு
நிலக்கரி இறக்குமதி வழக்கு
டிட்கோ-ஸ்பிக் பங்குகள் வழக்கு
பிறந்த நாள் பரிசு வழக்கு
சொத்துக் குவிப்பு வழக்கு
வருமானவரிக் கணக்கு வழக்கு
ஜெயலலிதா மறைவு :
முதல்வராக பதவி வகித்த ஜெயலலிதா அவர்கள் செப்டம்பர் 22 2016 அன்று உடல்நல குறைவால் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 75 நாட்கள் தொடர் சிகிச்சை பெற்றுவந்த ஜெயலலிதா 5 டிசம்பர் 2016 அன்று இரவு 11.30 மணிக்கு காலமானார்.
ஜெயலலிதா மறைவு : விசாரனை ஆணையம்
ஜெயலலிதாவின் மறைவில் சந்தேகம் இருப்பதாக மக்கள் மத்தியிலும் அரசியல் தலைவர்கள் மத்தியிலும் பரவலாக பேசப்பட்டது. இதுகுறித்து வழக்குகளும் போடப்பட்டன. இறுதியாக தமிழக அரசு ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் தனிநபர் விசாரனை ஆணையத்தை அமைத்தது.