Site icon பாமரன் கருத்து

பொள்ளாச்சி அண்ணனை போல இருந்திடுவோம்

 


நம் ஒவ்வொருவரின் தூக்கத்தையும் அந்த வீடியோவின் “அழுகுரல்” நிலைகுலைய செய்கிறது. நாளை நமது வீட்டில் இருக்கும் பெண் பிள்ளைகளுக்கு இது போன்றதொரு ஆபத்து வந்துவிட்டால் என்னாவது என ஒவ்வொருவரும் தவிக்கின்றனர். மிகவும் நேர்த்தியாக , ஏமாற்றிட வேண்டும் என்ற நோக்கத்துடனேயே செயல்படும் இதுபோன்ற குழுக்களிடம் இருந்து மீத பெண்களை காப்பாற்றிட என்ன செய்யப்போகிறோம் என்பதுதான் இப்போது அனைவரின் முன்னால் நிற்கின்ற கேள்வி.

 


இதையும் படிங்க,

பெண்களின் கோபம் நியாயமா?

பொள்ளாச்சி சம்பவம் – புற்றுநோய்க்கு அறுவை சிகிச்சை செய்வது எப்போது?


 

செய்திகளில் வருகின்ற தகவலின் அடிப்படையில் பார்த்தால் கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த வக்கிரத்தை இந்த கும்பல் நடத்திக்கொண்டு தான் இருந்திருக்கிறார்கள் என தெரிய வருகிறது. இத்தனை வருடங்கள் கழித்து இந்த பிரச்சனை வெளிப்பட்டதற்கு மிக முக்கிய காரணம், தற்போது புகார் அளித்திருக்க கூடிய மாணவியும் அவரது சகோதரரும் தான். ஒருவேளை இவர்களும் அதிகார வர்க்கத்தினரின் மிரட்டல்களுக்கு பயந்து, வெளியில் சொன்னால் நமது மானம் போய்விடும் என அஞ்சி அமைதியாக இருந்திருந்தால் இந்நேரம் இந்த கொடியவர்களின் பாவக்கரங்கள் பல பெண்களின் மீது பரவியிருக்கும்.

 


 

பொள்ளாச்சி அண்ணனை போல இருந்திடுவோம்

 

ஆண் ,பெண் , குழந்தைகள் இவர்களுக்கு பக்கபலமாய் இருக்கவேண்டியது குடும்பம் தான். இந்த நிகழ்வில், அந்தப்பெண் அவரது அண்ணனிடத்தில் நடந்ததை கூறிய போது தவறு செய்தவர்களிடத்தில் நீதி கேட்க சென்று இருக்கிறார். கிடைத்த ஆதாரங்களை கொண்டுவந்து போலீசாரிடத்தில் கொடுத்திருக்கிறார். மீண்டும் அவர் மீது தாக்குதல் நடக்கும் போது மீண்டும் அஞ்சாமல் காவல்துறையை நாடுகிறார். உண்மையில் இவர் போற்றப்பட வேண்டிய தைரியசாலி.

 

குடும்பம் சப்போர்ட் செஞ்சா பொண்ணுங்க தைரியமா சொல்லுவாங்க

 

சராசரியாக பார்த்தோமேயானால் நாம் எப்படி இருக்கிறோம்? நம் சகோதரியோ மனைவியோ காதலியோ எனக்கு இப்படி நடந்துவிட்டது என்றால், நீ ஏன் போனாய் என்பதில் ஆரம்பித்து “மானம் போச்சு” “மரியாதை போச்சு” என்பதில் கொண்டு வந்து முடிப்போம். அடுத்த முறை இப்படி நடந்தால் வீட்டில் சொல்லவே கூடாது என்ற அளவிற்கு கொண்டுவந்து வைத்துவிடுவோம். பெண்களில் பலர் குடும்பத்தை நினைத்தே தங்களுக்கு நடந்த அநீதியை வெளியில் சொல்ல தயங்குகிறார்கள்.

 

பொள்ளாச்சி வன்கொடுமைக்கு எதிராக போராடும் மாணவர்கள்

 

அப்படி இருக்கக்கூடாது, நமது சகோதரியை கண்டிப்பது சரியானது தான். ஆனால் திட்டமிட்டு நடக்கும் இதுபோன்ற கயவர்களிடம் ஏமாறுவது இயல்பான ஒன்றே. அப்படிப்பட்ட கயவர்களை உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டி மீதமிருக்கும் பெண்களை காப்பாற்றிட வேண்டும். இந்த பிரச்சனையை மிக திறமையாக கையாண்ட அந்த சகோதரியின் அண்ணனை பாரட்டிடுவோம்.
நாளை நமது குடும்ப பெண்களிடத்தில் எவரேனும் இதுபோன்ற வில்லத்தனத்தை காட்டினால், நமது பெண்களுக்கு பக்கபலமாய் இருந்து உண்மையை வெளிக்கொண்டு வர துணை நிற்போம். உறுதி ஏற்போம்.

 

நன்றி

பாமரன் கருத்து

Share with your friends !
Exit mobile version