Ishwarya Ramanathan IAS – இளம் வயதிலேயே இரண்டுமுறை UPSC தேர்வில் வென்றவர்

தனது மகள் ஒரு கலெக்டர் ஆக வேண்டும் என்ற தனது அம்மாவின் பெருங்கனவை நினைவாக்க கடுமையாக படித்து சாதித்துக்காட்டி இருக்கிறார் ஐஸ்வர்யா ராமநாதன் [Ishwarya Ramanathan IAS]. மிகவும் இளம் வயதில் இரண்டு முறை UPSC தேர்வில் தேர்ச்சி அடைந்து அவரது திறமையை நிரூபித்தும் உள்ளார். வாருங்கள் அவரது வெற்றிக்கதையை பார்க்கலாம்.

பெயர் : ஐஸ்வர்யா ராமநாதன் 

சொந்த ஊர் : கடலூர் 

கல்வி : BE (Civil Engineering)

UPSC Rank : AIR 47

தற்போதைய பதவி : துணை ஆட்சியர் (திருவள்ளூர் மாவட்டம்)

Youtube Channel : Becoming IAS at 24 – My dream journey….ISHWARYA RAMANATHAN IAS | AIR 47 | UPSC | Civil Services

நமது இணையதளத்தில் தொடர்ச்சியாக, IAS அதிகாரிகளின் வெற்றிக்கதைகளை பதிவிட்டு வருகிறோம். சாதிக்க நினைக்கும் மாணவ மாணவியருக்கு இது உந்து சக்தியாக இருக்கும் என்ற நோக்கத்தில் தான் இவைகளை பதிவிடுகிறோம். இதனை உங்கள் வீட்டு பிள்ளைகளுக்கோ படிக்கும் மாணவர்களுக்கோ கொண்டு சேருங்கள். 

அம்மாவிடம் இருந்து….

ஐஸ்வர்யா அவர்களின் அம்மாவிற்கு இளம் வயதிலேயே திருமணம் நடந்துவிட்டது. ஐஸ்வர்யா அவர்கள் கல்லூரியில் படித்துக்கொண்டு இருக்கும் போது அவரது அம்மாவிற்கு அரசு வேலை கிடைத்துள்ளது. மகள் பிறந்த காலம் தொட்டு அவர் ஒரு கலெக்டர் ஆக வேண்டும் என்ற பெருங்கனவை அவர் கொண்டிருந்தார். அந்த ஆர்வத்தை தனது மகளிடமும் தொடர்ச்சியாக ஊட்டிக்கொண்டே வந்துள்ளார். 

கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஐஸ்வர்யா. அந்தப்பகுதி அடிக்கடி மழை மற்றும் புயல் காலங்களில் அதிக பாதிப்புகளை சந்திப்பது வழக்கம். அப்படியான காலகட்டங்களில் பணிகளை சிறப்பாக மேற்கொண்ட அப்போதைய இளம் வயது ஆட்சியர் ககன்தீப் சிங் பேடி மூலமாகவும் வெகுவாக ஈர்க்கப்பட்டார் ஐஸ்வர்யா. 

அம்மாவின் கனவு, ஆட்சியரின் செயல்பாடு ஆகிய இரண்டும் ஒன்று சேர, ஐஸ்வர்யா அவர்கள் தனது பயணத்தை துவக்கினார். 

பள்ளிப்படிப்பிற்கு பிறகு, அண்ணா பல்கலைக்கழகத்தில் இவர் சிவில் இன்ஜினியரிங் பட்டப்படிப்பை முடித்தார். இந்த காலகட்டத்திலேயே இவர் UPSC தேர்வுக்காகவும் தயாராகி வந்துள்ளார். 

முதல் முறை இவர் பங்கேற்ற UPSC தேர்வில் AIR 630 இடத்தை பிடித்தார். அப்போது இவருக்கு Railway Accounts Service துறையில் பணி வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால், இவர் மீண்டும் தனது முயற்சியை துவங்கினார். 

தனது இரண்டாவது முயற்சியில், 2019 ஆம் நடந்த தேர்வில் அகில இந்திய அளவில் AIR 47 இடத்தை பிடித்து IAS அதிகாரி ஆகும் வாய்ப்பினை பெற்றார். தற்போது திருவள்ளூர் மாவட்டத்தில் இவர் துணை ஆட்சியராக பணி புரிந்து வருகிறார். 

திறம்பட செயல்பட்டு வரும் ஐஸ்வர்யா IAS அவர்கள் சமூக வலைத்தளங்களிலும் செயல்பட்டு வருகிறார். இவர் தான் நிர்வகிக்கும் Youtube சேனல் மூலமாக UPSC தேர்வு குறித்தும் அதற்கு தயாராவது குறித்தும் தனது அனுபவங்களை பகிர்ந்து வருகிறார்.

இவர் வெற்றிக்கதையில் இருந்து….

ஒவ்வொரு குழந்தையிடமும் நாம் நல்ல விதைகளை (எண்ணங்களை) விதைக்க வேண்டும். ஐஸ்வர்யா அவர்களின் வெற்றிக்கு அவரது அம்மாவின் தூண்டுகோள் மிக முக்கியமான காரணியாக அமைந்து உள்ளது. அடுத்தது, ஒரு நல்ல அதிகாரியை பார்க்கும் இளையோருக்கு நாமும் அப்படியாக வேண்டும் என்ற எண்ணம் நிச்சயமாக உண்டாகும். 

ஆகவே, ஆட்சியர் மற்றும் உயர் அதிகாரிகள் தொடர்ச்சியாக மாணவர் சந்திப்புகளை நடத்த வேண்டும். அவர்களுக்கு ஊக்கமூட்டிட வேண்டும். 

மிகவும் முக்கியமாக, நாம் இலட்சியத்தை அடைய முயற்சிக்கும் போது கிடைக்கும் சிறு வெற்றிகளால் மனம் குளிர்ந்து அதோடு நின்றுவிடக்கூடாது. ஒருவேளை ஐஸ்வர்யா அவர்கள் இரண்டாவது முறை முயற்சி செய்திடவில்லை என்றால் IAS அதிகாரி ஆகியிருக்க முடியாது. ஆகவே, தொடர் முயற்சி என்பது மிகவும் அவசியம். 

மீண்டும் ஒரு சிறந்த IAS Success Story இல் சந்திப்போம்.

மேலும் பல IAS வெற்றிக்க்கதைகளை இங்கே கிளிக் செய்து படியுங்கள்.

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *