நெட் நியூட்ராலிட்டி எனப்படும் “இணைய சமநிலை” – பிரச்சனை முழு விவரம் ?
நாம் அனைவரும் வேகமாக ஓடிக்கொண்டிருக்கும்போதே பல விஷயங்கள் நடந்து முடிந்துவிடுகின்றன . அப்படிப்பட்ட முக்கிய பிரச்சனைகளில் ஒன்றுதான் நெட் நியூட்ராலிட்டி எனப்படும் “இணைய சமநிலை” – பிரச்சனை.
நெட் நியூட்ராலிட்டி என்றால் என்ன ?
இன்று இணையத்தில் இணையாதவர்களே இல்லை என சொல்லலாம் . அதேபோல எண்ணற்ற பலர் தங்களுக்கென, தங்கள் திறமைகளை வெளிகொண்டுவர ,மக்களுக்கு நன்மை தரக்கூடிய வகையில் இணையதளங்களை உருவாக்கி வைத்திருக்கின்றனர் .
இன்னொருபக்கம் மிகப்பெரும் கம்பெனிகள் தேடுபொறி (Search Engine ), இணையதளம் போன்றவற்றை உருவாக்கி வைத்துள்ளனர் .
இன்றைய நிலைப்படி சாதாரண மனிதனின் இணையதளத்திற்கு ப்ராட்பேன்ட் வழங்குநர்கள் வழங்கக்கூடிய முக்கியதுவம் , வேகம் அனைத்துமே மிகபெரிய கம்பெனிகள் (Google , Facebook etc …) இணைய தளத்திற்கு வழங்கக்கூடிய வேகம் , முக்கியத்துவத்திற்கு இணையாக இருக்கும் . கூகுள் க்கு தனி வேகமோ மற்ற தளங்களுக்கு தனி வேகமோ இருக்காது . இதுவே நெட் நியூட்ராலிட்டி எனப்படும் “இணைய சமநிலை” .
அமெரிக்காவில் மாறிய விதி :
இதுவரை இப்படி இருந்துவந்ததை அமெரிக்கா தற்போது மாற்றிட முடிவு செய்துள்ளது .அமெரிக்க ப்ராட்பேன்ட் வழங்குநர்கள் ஒரு சேவையை விட மற்றொரு சேவைக்கு வேகத்தில் முன்னிலை தருவதைக் கட்டுப்படுத்தும் தடைகளை ஒழுங்குமுறை ஆணையம் குறைக்க உள்ளது.
இது தொடர்பாக அமெரிக்காவின் மத்திய தகவல் ஆணைக்குழுவில் (FCC) நடந்த வாக்கெடுப்பில் ஆதரவாக மூன்று பேரும் எதிராக இருவரும் வாக்களித்துள்ள நிலையில், நெட் நியூட்ராலிட்டி எனப்படும் “இணைய சமநிலை”யை நிர்வகிக்கும் முறை மாற்றத்திற்கு உள்ளாகிறது.
இணைய சேவை நிறுவனங்கள் தற்போது, வெவ்வேறு இணைதளங்களின் வேகத்தை அதிகப்படுத்தவோ, குறைக்கவோ முடியும். மேலும், பயன்பாட்டாளர்கள் பயன்படுத்தும் சேவைக்கு ஏற்றவாறு கட்டணம் வசூலிக்கவும் முடியும்.
ஆனால், அவர்கள் இவ்வாறு செய்வதை வெளிப்படுத்த வேண்டும்.
இதனால் என்ன ஆபத்து ?
இந்தியா இதற்கு அனுமதிக்காது என்றே தெரிகின்றது .ஆனால் அப்படி அனுமதித்தால் பின்வரும் கஷ்டங்களை மக்கள் அனுபவிக்கலாம் .
கேபிள் டிவி க்கு சேனலுக்கு இவ்வளவு என பணம் கட்டி பார்பதைபோல ஒவ்வொரு இணையத்தளத்திற்க்கும் பணம் கட்டி பயன்படுத்த வேண்டி இருக்கும் .
நீங்கள் திடீரென ஒரு இணையதளத்தை பார்க்க விரும்பினால் அதற்கு தடை ஏற்படலாம் .
தனியாக இணையதளம் வைத்திருப்பவர்கள் நிச்சயமாக பாதிக்கப்படுவார்கள் . அவர்களின் இணையதளத்தை காசு கொடுத்து எவரும் பார்க்க முன்வராத போது வீழ்ச்சி அடையும் .
கூகுள் போன்ற பணக்கார இணையதளங்கள் சொல்பவையே மக்களிடம் சென்று சேரும் . இதனால் நல்ல பல தகவல்களை மக்கள் பெற முடியாமல் போகும் .
இணையத்தின் அடிப்படையே “சமம்” “பாகுபாடு இல்லாமல் தகவல் பரிமாற்றம்”. இந்த அடிப்படையையே அமெரிக்கா மாற்றிட முயன்றுள்ளது . இதனை முன்மாதிரியாக கொண்டு பிற நாடுகளும் பின்பற்ற வாய்ப்புள்ளது . இது மிக பெரிய தவறு.
இதற்கு எதிராக மக்கள் நிற்க வேண்டும் .
நன்றி
பாமரன் கருத்து
Pingback:facebook அடுத்த அதிரடி .... – பாமரன் கருத்து