ப்ளீஸ் இந்தப் புத்தகத்தை வாங்காதீங்க! நேர்மறை எண்ணங்கள் நிறைந்திருக்கும் புத்தகம்

“ப்ளீஸ் இந்தப் புத்தகத்தை வாங்காதீங்க” என்ற தலைப்பே நீங்கள் இந்தப் புத்தகத்தை வாங்கிப்படிக்க வேண்டும் என்பதற்காகத்தான்.

புத்தகம் : ப்ளீஸ் இந்தப் புத்தகத்தை வாங்காதீங்க! 

ஆசிரியர் : கோபிநாத்

வெளியீடு : சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிக்கேஷன்ஸ்

விஜய் டிவியின் நீயா? நானா? நிகழ்ச்சியின் மூலமாக தமிழக மக்கள் அனைவருக்கும் பரிட்சயமானவர் கோபிநாத். ஆனால், அதற்கு முன்னரே பல்வேறு முன்னனி செய்தி நிறுவனங்களில் சிறப்பாக பணியாற்றியவர். விஜய் டிவியின் நீயா? நானா? நிகழ்ச்சி மட்டுமல்லாது பல்வேறு சேனல்களுக்காக எண்ணற்ற சாதனையாளர்களை சந்தித்து உள்ளார். அப்படி அவர் சந்தித்த சாமானியர்கள், சாதனையாளர்கள் ஆகியோரிடமிருந்து பெற்ற அனுபவங்களை எளிமையாக சாமானியர்களும் புரிந்துகொள்ளும் விதத்தில் இந்தப் புத்தகத்தில் தந்துள்ளார். ஆர்ப்பாட்டம் இல்லாத எழுத்துக்கள் நேர்மறை சிந்தனைகளை சுமந்துள்ளன.




புத்தகத்தில் இடம்பெற்றுள்ள சில கருத்துக்கள்….

+ சந்தோசத்தை தன்னுள்ளே வைத்திருக்கிறவன் அதை வெளியே தேடிக்கொண்டிருக்க மாட்டான்.  அதற்காக அவன் அலையப்போவதில்லை. சந்தோஷம் எதில்தான் இருக்கிறது? ரொம்ப சுலபம். சந்தோசமாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் உங்களது எண்ணத்தில் தான் இருக்கிறது.

+  நம் அக்கறை சிரிக்கக்கூடாது என்பதில் இல்லை. உண்மையில் பார்த்தால் அது அழக்கூடாது என்கிற நம் அச்சத்தின் மீதுதான் இருக்கிறது. உங்கள் எண்ணம் வெற்றிகுறித்தே இருக்கிறது என்றால் இலக்கு நோக்கி ஓடுங்கள் தோல்வியின் பின்னால் ஓடாதீர்கள். தோற்காமல் இருக்க வேண்டுமே என்பதற்காக நீங்கள் ஜெயிக்கப்பார்த்தால் தோல்வி தான் உங்களுக்கு மிஞ்சும்.

+ ஒரு வேலையை விரும்பிச் செய்கிறபோது உங்களுக்கு அதன் கஷ்டம் தெரிவதில்லை. வருந்திச்செய்ககிறபோது உங்கள் கஷ்டம்  பலமடங்காகிறது.

+ உங்கள் வாழ்வில் நீங்கள் எதிர்கொள்கிற சின்ன சின்ன விஷயங்களைக்கூட இரசிக்கத் தொடங்குங்கள்.  அதன் மூலம் உங்கள் வாழ்க்கையைச் சுவாரஸ்யமுள்ளதாக்கத்மாற்றலாம். மாற்றங்கள் தரும் உற்சாகம் உங்களை வாழ்வின் பல உயரங்களுக்கு அழைத்துப்போகும்.  இந்த உலகம் எப்போதும் ஒரே மாதிரிதான் இருக்கும். அதை வெவ்வேறு காலங்களில் நின்று கவனிப்பதும், ரசிப்பதும் நம்மிடம் இருக்கிற ரசனை சார்ந்த விஷயம்.

+ தோல்வி என்பது அவமானம் என்று கூறியிருக்கும் ஒரு பிம்பத்தை ஏற்றுக்கொள்ளாதீர்கள். குழந்தை தடுமாறி விழுவதும், கஜினி முகமது 17 முறை படையெடுத்ததும் தோல்வி என்றால்., நீங்கள் தோல்வியடைவதில் எந்தப் பிரச்சனையுமில்லை.

+ உங்களை அடுத்தவர் ரசிக்க வேண்டும்,  கவனிக்க வேண்டும், உங்கள் சிறப்பியல்புகளை, உங்கள் தனித்துவங்களை அடையாளங்கண்டு பாராட்ட வேண்டும் என்று நீங்கள் ஆசைப்படுவது உண்மை என்றால், அதனை முதலில் உங்களிடம் இருந்து நீங்கள்தானே தொடங்க வேண்டும்.

+ நீங்கள் ஏழையாக இருந்தால் உங்கள் மனசும் ஏழையை போலவே சிந்திக்க வேண்டுமா? நீங்கள் எதை சிந்திக்கிறீர்களோ அதைத்தான் பெறுகிறீர்கள். நீங்கள் எதை ஈர்க்கிறார்களோ அதுதான் உங்களுக்கு கிடைக்கிறது.

+ சில விஷயங்களை விட்டால்தான் பல விஷயங்களை பெற முடியும். இழந்துபோனது குறித்து நினைவுகளையும்,  கவலைகளையும் உள்ளங்கைக்குள் வைத்து மூடிக்கொண்டு நாம் சிரமப்படுகிறோம்.  அதைவிட்டு வெளியே வந்தால்தான் நம்மால் பலவற்றை சாதிக்க முடியும்.

+ வசதியான சுழல்(comfort zone)க்கு பழகப்போகிற மனசும் உடம்பும் கண்முன்னே தெரிகிற வாய்ப்புக்களைக் கூட அது கஷ்டம் அதனால் தேவையில்லை என்று சொல்லி ஒதுக்கி வைத்து விடுகிறது. நமக்குள் இருக்கும் திறமைக்கும், ஞானத்திற்கும் என்ன பலன் இருக்கிறது என்பதை பரிட்சித்து பார்க்காமலேயே முடங்கிப்போக வைக்கிறது. 

+ உங்களின் முன்னேற்றம் என்பது உங்கள் கையில் மட்டுமில்லை. உங்களைச் சுற்றியிருப்பவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை பொருத்தும் அது தீர்மானிக்கப்படுகிறது. உண்மைதான். நம்மைச் சுற்றி எவ்வளவு நேர்மறை எண்ணமுடைய மனிதர்கள் இருக்கிறார்களோ உண்மையாக பாராட்டுகிற குணம் கொண்டவர்கள் இருக்கிறார்களோ,  நம்முடைய வளர்ச்சியில் அகமகிழ்பவர்கள் இருக்கிறார்களோ, அதைப் பொறுத்துதான் நம்முடைய வளர்ச்சியும் இருக்கிறது.

எங்களது கட்டுரைகளை நீங்கள் தவறாமல் படிக்க விரும்பினால் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்து பின்தொடருங்கள். கூறவே வாட்ஸ்ஆப் பட்டனை அழுத்தி எங்களுடைய குரூப்பில் இணைத்துக்கொண்டு பதிவுகளை பெறுங்கள்



Get Updates in WhatsApp



மேலும் நூல்கள் பற்றி படிக்க….

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *