அறியப்படாத தமிழகம் தொ.பரமசிவன் | Ariyappadatha Tamizhagam PDF Download

நாம் அறிந்த தமிழகத்தின் அறியாத பரிமாணம் இந்நூல் [Ariyappadatha Tamizhagam]. ஒரு பொருட்டாக நாம் கருதாத செய்திகளை எடுத்துக்கொண்டு அதில் வரலாறும் பண்பாடும் எவ்வாறு படிவம் படிவமாகப் படிந்துள்ளது என்பதை நூலின் ஒவ்வொரு கட்டுரையும் வெளிச்சமிட்டுக் காட்டுகிறது. உப்பு, எண்ணெய், தேங்காய், வழிபாடு, விழாக்கள், உடை, உறவுமுறை, உறவுப்பெயர்கள் என அன்றாட வாழ்வின் பகட்டில்லாத பல்வேறு கூறுகளைக்கொண்டு தமிழ் சமூகத்தின் ஈராயிரம் மூவாயிரம் ஆண்டு வரலாற்றின் அசைவியக்கம் இந்நூலில் கோடிட்டுக் காட்டப்படுகிறது. 

காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ள 168 பக்கங்களைக் கொண்ட அறியப்படாத தமிழகம் என்ற புத்தகம் பல்வேறு ஆன்லைன் புத்தக விற்பனை நிலையங்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. குறைந்தபட்சம் ரூ 67 முதல் நீங்கள் இந்த புத்தகத்தை வாங்கலாம்.

அறியப்படாத தமிழகம் தொ.பரமசிவன் | Ariyappadatha Tamizhagam PDF Download

தொ.பரமசிவன் நூல் ஆசிரியர் பற்றி…

தொ.பரமசிவன் எழுத்தாளர்கள் உலகில் போற்றப்படும் அறிஞர் பெருமகனார். கல்வெட்டுகள், இலக்கியங்கள் மூலமாக மட்டுமே வரலாற்றுத் தொன்மங்கள் பற்றி பெரிதாக பேசப்பட்டு வந்த சூழலை மாற்றி, அடித்தட்டு மக்களின் வாழ்வியல், அவர்களின் பழக்க வழக்கங்கள், நாட்டார் வழக்காற்றியல் கதையாடல்கள் மூலமாகத் தமிழர்களின் வரலாற்றைப் பதிவு செய்தவர் என அறிஞர்களால் புகழப்படுகிறார்.

 

தொ.பரமசிவன் அவர்கள் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் 1950-ல் பிறந்தார். பள்ளிப் படிப்பை முடித்த அவர், மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் இளங்கலை பொருளாதாரம் பயின்றார். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் முதுகலை தமிழ் படித்தார். 

 

இவர் பின்வரும் முக்கியமான பல புத்தகங்களை தமிழ்ச் சமூகத்திற்கு தந்திருக்கிறார். 

 

அறியப்படாத தமிழகம் – காலச்சுவடு பதிப்பகம்

பண்பாட்டு அசைவுகள் – காலச்சுவடு பதிப்பகம்

அழகர் கோயில் – மதுரைக்காமராசர் பல்கலைக்கழகம்

தெய்வம் என்பதோர் – காலச்சுவடு பதிப்பகம்

வழித்தடங்கள் – மணி பதிப்பகம்

பரண் – சந்தியா பதிப்பகம்

சமயம் (தொ.ப – சுந்தர் காளி உரையாடல்)

சமயங்களின் அரசியல் – வானவில் புத்தகாலயம்

தொ.பரமசிவன் நேர்காணல்கள் – காலச்சுவடு பதிப்பகம்

விடு பூக்கள் – கயல்கவின் பதிப்பகம்

உரைகல் – கலப்பை பதிப்பகம்

இந்துதேசியம் – கலப்பை பதிப்பகம்

நாள்மலர்கள் – பாவை பதிப்பகம்

மானுடவாசிப்பு – தடாகம் பதிப்பகம்

பாளையங்கோட்டை: ஒரு மூதூரின் வரலாறு – காலச்சுவடு பதிப்பகம்

மஞ்சள் மகிமை – காலச்சுவடு பதிப்பகம்

மரபும் புதுமையும் – காலச்சுவடு பதிப்பகம்

இதுவே சனநாயகம் – காலச்சுவடு பதிப்பகம்

செவ்வி – கலப்பை பதிப்பகம்

அறியப்படாத தமிழகம் நூல் முன்னுரை

அண்மையில் படித்த இரண்டு செய்திகளை முதலில் சொல்லியாக வேண்டும். அமெரிக்கா, இந்தியா போன்ற வளரும் நாடுகள் வேதி உரங்களை அதிகமாகப் பயன்படுத்துவது, ‘உலகில் மாசுப் பெருக்கத்துக்கான பெருங்காரணங்களில் ஒன்றாகிவிட்டது’ என்று குற்றம் சாட்டியிருந்தது. மற்றொருபுறத்தில், தமிழக வேளாண்துறை உயர் அதிகாரி ஒருவர், ‘இரண்டாவது பசுமைப்புரட்சிக்கு நமது நிலங்கள் ஏற்புடையதாக இல்லை; இயற்கை உரங்களைக் கொண்டு நிலத்தை மீண்டும் நாம் செம்மையாக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தார். 1960-களின் தொடக்கப் பகுதியில் நான் சிறுவனாக இருந்தபோது நெடுஞ்சாலை ஓரத்து நன்செய் வயல்களில் ‘நவீன உர நிரூபண வயல்’ என்றெழுதி நடப்பட்டிருந்த விளம்பரப் பலகைகள் நினைவுக்கு வந்தன. உயிரியல் தெழில்நுட்பத்தை எதிர்த்து வேளாண் அறிஞர் வந்தனா சிவா அண்மையில் எழுதிய புத்தகமும் என் நினைவுக்கு வந்தது.

 

நாற்பதாண்டுக் காலத்தில் இயற்கை நம்மைப் பார்த்து ஏளனமாகச் சிரிக்கத் தொடங்கிவிட்டது என்றுதானே இதற்குப் பொருள்? ‘உள்ளது சிறத்தல்’ எனும் உயிரியல் கோட்பாட்டில் ‘காலம்’ பெற்றுள்ள இடத்தை நாம் புரிந்து கொள்ளத் தவறிவிட்டோமோ? ‘இயற்கையோடியைந்த இன்பம் இன்பத்தோடியைந்த வாழ்வு’ என்று பாடிய சுந்தரரும் திரு.வி.க.வும் இப்போது பெரியாரைப் போல நமது மறுவாசிப்புக்கு உரியவர்களாகி விட்டார்கள்.

 

பயிர்த்துறையில் நடந்த மாற்றங்கள், பண்பாட்டுத் துறையிலும் நடந்தேறியுள்ளன. வேதி உரங்கள் ‘விஞ்ஞானப் போர்வையில் உருவாக்கிய எதிர்விளைவுகளை, பண்பாட்டுத் தளத்தில் தகவல் தொடர்புச் சாதனங்கள், பன்னாட்டு மூலதன உதவியுடன் உருவாக்கிவிட்டன. 14 செ.மீ. திரைப்பெட்டி, கிரிக்கெட் என்னும் இரண்டு நோய்கள் நம்முடைய ‘கொழுந்து’களைத் தாக்கத் தொடங்கியுள்ளன. “வேரிலே வெக்கை தட்டினால் கொழுந்து முற்பட வாடுமாறுபோல” என்பது வைணவ உரை நயம். வேர்களைப் பற்றிய ஞானமில்லாமல், கல்வியில்லாமல், கொழுந்துகளைப் பற்றிக் கவலைப்பட்டு என்ன பயன்!’

 

… வேரைத் தாங்கும் மண்ணை இழந்த ஆற்றங்கரை அரச மரத்துக்குக்கூட மறுவாழ்வு உண்டு. நோய் தாக்கிய வேர்களுக்கு மருந்து இல்லாமல் வாழ்வில்லை. மண் எப்பொழுதும் வளமானதுதான்.கடந்த முப்பது ஆண்டுகளாக நான் கண்டும் கேட்டும் வாசித்தும் அறிந்தவை மட்டுமே இந்த நூலில் பதியப்பட்டுள்ளன. தமிழகத்தின் தென் மாவட்டங்கள்தான் என் வளர்ப்புக்கும் கல்விக்கும் வாழ்வுக்கும் பட்டறிவுக்கும் எல்லையாகும். ஆயினும், என் தேடல் மனிதனை நோக்கியே. 

 

‘அறியப்படாத தமிழகம்’ – உண்மையில் இது நாம் அறிந்த தமிழகத்தின் அறியாத பரிமாணம் – இடையறாத நெடிய வரலாற்றையுடைய ஒரு சமூகத்தின் மீது மின்னல் வெட்டுகளாகப் பளீரென ஒளிபாய்ச்சுவதே நூலின் சிறப்பம்சம். நீங்கள் இந்த புத்தகத்தை வாசித்து முடிக்கும் போது பல எளிய விசயங்களாக நீங்கள் கருதிக்கொண்டு இருந்தவற்றிற்கு பின்னால் இருக்கும் நுண்ணிய வரலாற்றை தெரிந்துகொள்ளலாம். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *