“கழிவறை இருக்கை” தமிழ் புத்தகம் வாசியுங்கள்


புத்தகம் : கழிவறை இருக்கை

ஆசிரியர்: லதா

பக்கங்கள்: 224

விலை: ₹225

பதிப்பகம்: Knowrap Imprints

திருமணம் செய்து கொண்டவர்கள், மாணவர்கள், மாணவிகள், பெற்றோர்கள் அனைவரும் படிக்க வேண்டிய ஒரு பொத்தகம் இது. பாலியல் கல்வி குறித்தும், அது இல்லாத காரணத்தால் எவ்வளவு விளைவுகள் இந்த சமூகத்தில் நடந்து கொண்டுள்ளது என்பதை லதா அவர்கள் சிறப்பாக விளக்கியுள்ளார்.

வெளிப்படையாகவே நிறைய கருத்துகளை முன்வைத்துள்ளார் அதற்காகவே ஆசிரியரை பாராட்டலாம். நடக்காத எதையும் பதிவு செய்யவில்லை. ஏன் என்றால் பேசவே கூடாத ஒரு பகுதி காமம் என்பது போல பலரின் மனதில் பதிந்துள்ளது அல்லது இந்த சமூகத்தால் கற்பிக்கப்பட்டு நம்பவைக்கப்பட்டுள்ளது என்று தான் கூற வேண்டும்.

சில மாதங்களுக்கு முன்பே படித்து முடித்து விட்டேன் இந்த கழிவறை இருக்கையை. இதற்கு இணையாக வேறு எதாவது ஒரு பொத்தகம் கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன். அதையும் படித்து முடித்த பிறகு விமர்சனம் செய்யலாம் என்று காத்திருந்தேன். அப்பொழுது தான் ஓஷோ அவர்களின் காமத்திலிருந்து கடவுளுக்கு என்ற பொத்தகக்தை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதையும் படித்த பிறகு புரிதல் இன்னும் ஆழமாக இருந்தது.

லதா அவர்கள் இன்றைய சமூக வாழ்க்கைக்கு தகுந்த அறிவுரைகளையும், கருத்துக்களையும் கூறியுள்ளார். தெளிவாக கூற வேண்டும் என்றால் காதல், நட்பு, அன்பு, திருமணம், உறவுகள், காமம், அடுத்தவர் கணவன், மனைவி மீது ஈர்ப்பு, இளைஞர்கள் மத்தியில் தகாத உறவுகள், ஆண்கள்,பெண்கள் செய்யும் சுய இன்பம் என நிறைய தலைப்புகளில் எடுத்துரைத்துள்ளார். நிறைய தீர்வுகளையும் கூறியுள்ளார். உளவியல் ரீதியான விளக்கங்களையும் கூறியுள்ளார். விருப்பம் உள்ளவர்கள் யார் யாருடனும் உறவு வைத்துக் கொள்ளலாமா? இந்த தேவை ஏன் ஏற்படுகிறது? ஒவ்வொருவரின் மனநிலை எப்படி இதனால் மாறுகிறது? இந்த உண்மை பிறருக்கு தெரிந்த பிறகு அவர்கள் பார்வையில் எப்படி தெரிகிறார்கள்? கணவன் மனைவியை எப்படி அணுக வேண்டும்? மனைவி எப்படி நடந்து கொள்ள வேண்டும்? இருவருக்கும் புரிதல் இல்லாமல் இருந்தால் என்ன நிகழும்? போன்ற பல கோணங்களில் அனுகியுள்ளது சிறப்பு.

அன்பு தான் மூலமாக உள்ளது அனைத்திற்கும். இது குறையும் பொழுது வேறு ஒருவரை தேடி செல்கிறோம். திருமணம் ஆன பிறகும் சிலர் இப்படி தான் இருக்கிறார்கள். மனைவியிடம் இன்பம் காணவில்லை என்றால் விலைமகளை அல்லது வேறு ஒரு பெண்ணை நாடிச் செல்ல வேண்டியுள்ளது. ஒரு பெண்ணும் அப்படியே. இருபாலருக்கும் காமம் பொதுவானது. சரியான புரிதல் இல்லாமல் இருப்பது, வெளிப்படையாக பேசாமல் இருப்பது தான் இதற்கு முக்கிய காரணம் என்பதை உணர்தல் வேண்டும். இருவருக்கும் எது பிடிக்கும் பிடிக்காது? எது தேவை? தேவையில்லை? இருவரும் காமத்தில் ஈடுபடும் பொழுது இயந்திரம் போல செயல்படாமல் விருப்பப்பட்டு எப்படி இருவரும் செயல்பட வேண்டும் என்ற புரிதலுடன் செய்ய வேண்டும் என்பதையும் ஆசிரியர் தெளிவாக எடுத்துரைத்துள்ளார்.

இன்று பள்ளி, கல்லூரிகளில், பொது இடங்களில் நடக்கும் பாலியல் வன்முறைக்கு எதிராக குரல் கொடுக்கிறோம். ஆனால் இதற்கு காரணம் யார்? பெற்றோர்கள் தான். சரியான பாலியல் கல்வியை 13,14 வயதில் எடுத்து சொல்லி புரிய வைத்திருந்தால் நிறைய குற்றங்கள் தடுக்கப்படும் என்றும் ஆசிரியர் கூறியுள்ளார்.

தாயோ, தந்தையோ பிள்ளைகளுக்கு தோழன், தோழி போல காமம் பற்றிய புரிதலை தெரிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.காமம் பற்றி பேச கூடாது என்று கூறும் பொழுது தான் அவர்கள் மாற்று வழியில் பயணித்து தவறான வழிகளில் செல்கிறார்கள். தவறான பழக்கங்களை கற்றுக் கொள்கிறார்கள்.

‘பதி விரதம்’ என்ற போர்வையில் மனைவி, கணவனுடன் எந்திர கதியில் உடலுறவு கொள்வதால், காமம் குறித்த மற்ற முறைகளை அறியாதவளாயும், அதை எப்போதுமே அனுபவிக்காமலும் அவள் முடங்கி விடுகிறாள். கணவன் சொல்படி, அவன் வழிமுறையில், அவனைத் திருப்தி படுத்தும் வகையில் நடப்பது மட்டுமே தன் கடமை என்ற நம்பிக்கையில் அவள் வாழ்க்கை முடிந்துவிடுகிறது. திருமணம் புரிந்தும், திருப்திகரமாகப் பாலுறவு அமையாத பட்சத்தில், பல ஆண்கள், பாலுறவிற்காக வெளியில் அலையும் நிலையில் உள்ளனர்.

என்று திருமணம் என்ற பந்தம் பயன்பாட்டிற்கு வந்ததோ, அன்றிலிருந்தே, திருமணம் தாண்டிய உறவுகளும் இருந்து வந்திருக்கின்றன.உண்மையில் சொல்லப் போனால், எதற்காகக் காத்திருந்து திருமணம் புரிகிறார்களோ, அதுவே இல்லாமல், வெறும் பிள்ளைப் பேறு வரை மட்டுமே உடலுறவு கொண்டு விட்டு. அதன் பிறகு தனியே தவித்துக் கிடக்கும் தம்பதியர் ஏராளம்.

நீலப் படங்களைப் பார்த்து காமத்தைக் கற்றுக்கொள்ளும் விடலைப் பிள்ளைகள் உணர்வதில்லை அவர்கள் பார்க்கும் காட்சிகள் வெறும் நடிப்புக்கள் என்று. அங்கு மன உணர்வுகள் காட்டப்படுவதில்லை. உடல் உணர்வுகளையும் அவர்கள் நடித்தே காட்டுகிறார்கள். ஆணை ஆதிக்கவாதியாகவும்,பெண்ணை இரண்டாம் தர பிரஜையாகவும் வளர்ப்பது ஒவ்வொரு பெற்றோரின் தவறே காமம் பற்றி 12,13 வயதில் புரிதலை ஏற்படுத்தாததும் பெற்றோர்களின் தவறே. நிறைய புரிதலை ஏற்படுத்தும் இந்த பொத்தகம். நிறைய கருத்துகளை நான் கூறவில்லை. படிக்கும் பொழுது தான் அதை உணர முடியும்.

ஓஷோ அவர்களின் காமத்திலிருந்து கடவுளுக்கு என்ற பொத்தகத்தை படித்தாலும் காமம் பற்றி இன்னும் ஆழ்ந்த புரிதலை அறிந்து கொள்ளலாம். காமத்தை கையாள்வது பற்றியும், காமத்தை கடந்து செல்வதை பற்றியும், பாலியல் சார்ந்த புரிதலையும் சிறப்பாக விளக்கியிருப்பார். ஓஷோ அவர்களின் நிறைய கருத்துகளும் இந்த கழிவறை இருக்கை நூலில் இடம் பெற்றுள்ளது.

நன்றி.. – யாழினியன்

புத்தகம் பற்றிய மேலே எழுதப்பட்டிருக்கும் விசயங்கள் வாசிப்பை நேசிப்போம் என்ற பேஸ்புக் பக்கத்தில் யாழினியன் என்பவர் எழுதியது.

கழிவறை இருக்கை – ஆசிரியர் லதா அவர்களின் முன்னுரை

“நாம்‌ காமத்தைப்‌ பற்றி மிக அதிகமாக சிந்திப்பதில்லை: அதைப்‌ பற்றி மிகத்‌ தவறாகவே சிந்திக்கிறோம்‌”

இந்தப்‌ புத்தகம்‌ நன்றாகக்‌ கலவி கொள்வதற்கான வழி முறைகளையோ, சந்தோஷமாக வாழ்வதற்கான குறிப்புகளையோ பற்றியதானதல்ல!

நம்‌ சமுதாயத்தில்‌ காமத்தை எந்தப்‌ பார்வை கொண்டு பார்க்கிறோம்‌, அதை எப்படி கையாள்கிறோம்‌, அந்த வார்த்தையையே எப்படித்‌ தவறான வார்த்தையாக செய்து விட்டோம்‌ என்பதைப்‌ பற்றிய ஒரு அலசலை முன்‌ வைக்கும்‌ முயற்சியே இந்தப்‌ புத்தகம்‌.

காமம்‌ என்ற ஒரு விஷயம்‌ எனக்கு சுவாரசியமானதாகவே தோன்றியிருக்கிறது எப்பொழுதும்‌. எனக்கு மட்டுமல்ல, இங்குப்‌ பொதுவாக எல்லோருக்கும்‌ அது

சுவாரசியமான ஒன்றாகவே தோன்றக்‌ கூடியது இல்‌லையா? எதை மறைத்து வைக்கிறோமா, எதைக்‌குறித்து தவறாக பேசுகிறோமோ, எதைத்‌ தெளிவாக

யாரையும்‌ அறிய முடியாமல்‌ செய்கிறோமோ, அதன்‌பால்‌ மனிதர்களுக்கு ஈர்ப்பும்‌, அறிந்து கொள்ளும்‌ சுவாரசியமும்‌ அதிகரிக்கத்தானே செய்யும்‌? இதில்‌ ஆச்சர்யம்‌ ஒன்றுமேயில்லை!

காமம்‌ குறித்து நிறைய படைப்புகள்‌ வெளிவந்திருக்‌கின்றன: சில உடல்ரீதியாக காமத்தை அலசுவதாகவும்‌, சில மனரீதியாக அலசுவதாகவும்‌ இருக்கின்றன. இதில்‌ இரண்டாவது வகையை முதலில்‌ படிப்பது நன்மை பயக்‌கும்‌. ஏனெனில்‌. காம உணர்வுகளை மனோர்தியாக புரியாமல்‌, உடல்‌ நீதியாக மட்டுமே அணுகினால்‌, அதனை சரிவர புரியவும்‌ இயலாது, மனம்‌ கொள்ள அனுபவிக்கவும்‌ இயலாது.

என்‌ அனுபவங்களிலிருந்து, என்‌ சுற்றுச்‌ சூழலில்‌ நான்‌ பார்த்தவைகளிலிருந்து, மற்றவரிடம்‌ கேட்டுத்‌ தெரிந்த வைகளிலிருந்து, காமத்தை மிக எளிமையான முறையில்‌ ஆராய்ந்து பார்க்கும்‌ ஒரு சிறு முயற்சியே இது. சாதாரண அடிப்படை விஷயங்களான காதலும்‌ காமமும்‌ எப்‌படி குழப்பத்திற்கு ஆட்பட்டு இன்று நம்‌ சமூகத்தையும்‌நம்‌ வாழ்வையும்‌ ஆட்டிப்படைத்துக்‌ கொண்டிருக்கிறது என்ற கேள்விக்கான விடை தேடலின்‌ பயணமே இந்தப்‌புத்தகம்‌.

நானும்‌ காமம்‌ குறித்து எந்த விவாதங்களும்‌ பொதுவில்‌ செய்யாத ஒரு சாதாரண குடும்பத்தில்‌ பிறந்து வளர்ந்தவள்‌ தான்‌. உடல்‌ ரீதியான நெருக்கங்களை என்‌ பெற்றோர்களிடமோ, உறவுகளிடமோ, அக்கம்பக்‌கத்தார்களிடமோ கண்டதே இல்லை. காமத்தினுடனான என்‌ முதல்‌ சந்திப்பு நான்‌ வாழ்க்கையில்‌ பார்த்த

முதல்‌ திரைப்படத்துடன்‌ சம்பந்தப்பட்டது. பார்க்கச்‌சென்றது என்னவோ துணைவன்‌ என்னும்‌ முருகக்‌ கடவுளைப்‌ பற்றிய ஒரு திரைப்படம்‌ தான்‌. ஆனால்‌ அந்தத்‌திரைரங்கின்‌ கழிவறையில்‌ தான்‌ எனக்கு முதன்‌ முதலாக காமத்தினுடனான ஒரு சந்திப்பு நிகழ்ந்தது. அப்பொழுது எனக்கு எட்டு வயது, நான்காவது வகுப்பு படித்‌துக்‌ கொண்டிருந்த நேரம்‌. என்‌ அண்ணனுக்கு ஒன்பது.

எதிர்வீட்டில்‌ இருந்த நிறைய குழந்தைகளுடனான ஒரு குடும்பத்து கடைசிப்‌ பையனுக்கு பத்து வயதிருக்கும்‌. அவனின்‌ தந்த தான்‌ எங்கள்‌ மூவரையும்‌ திரைப்படத்‌திற்கு அழைத்துச்‌ சென்றிருந்தார்‌.

இடைவெளி நேரத்தில்‌ நான்‌ ஒன்றிற்கு இருக்க வேண்‌டும்‌ என அந்த மாமாவிடம்‌ சொல்ல. சிறிது நேரம்‌ காத்‌திரு கூட்டமாக இருக்கும்‌. பிறகு அழைத்துச்‌ செல்கிறேன்‌ என்றார்‌. இடைவெளி ஆரம்பித்து விளம்பரங்கள்‌ போட ஆரம்பித்ததும்‌ என்னை ஆண்கள்‌ கழிவறைக்கு அழைத்துச்‌ சென்று என்னையும்‌ போகச்‌ சொல்லி அவரும்‌ என்னருகிலேயே நின்று சிறுநீர்‌ கழித்தார்‌. ஏனோ

சிறு வயது முதற்கொண்டே ஆண்கள்‌ தெருவில்‌ சிறுநீர்‌ கழிப்பதை தினம்‌ கண்டிருந்ததினால்‌ அது ஒரு பெரிய விஷயமாக எனக்குப்‌ படவில்லை. சிறுநீர்‌ கழித்துமுடிந்து நான்‌ எழுந்ததும்‌ என்‌ கையைப்‌ பிடித்து அவர்‌ தன்‌ உறுப்பின்‌ மீது அழுந்தப்‌ பிடித்துக்கொண்டார்‌ சில நிமிடங்கள்‌. எனக்கு ஒன்றும்‌ புரியவுமில்லை. என்ன செய்வதென்று தெரியவுமில்லை. இந்த நிகழ்‌விற்கு பிறகு, நான்‌ அவர்கள்‌ வீட்டிற்கு செல்வதாக இருந்தால்‌, அவர்‌ வீட்டில்‌ இல்லை என உறுதி செய்துகொண்டே போவேன்‌. ஆனால்‌ இன்று நினைத்து பார்க்‌கையில்‌ அதை ஏன்‌ யாரிடமும்‌ சொல்லவில்லை என்‌பது எனக்கே புரியவில்லை.

இதைத்‌ தொடர்ந்து இன்னொரு நிகழ்வும்‌ நடந்‌தது. ஆங்கிலத்தில்‌ பட்டர்‌ஃபளை எஃபெக்ட்‌ என்று சொல்வார்களே அது போல நடக்க ஆரம்‌பித்தது.

பக்கத்து வீட்டில்‌ ஒரு அண்ணன்‌ தனியாக வசித்து வந்‌தார்‌. அவர்‌ சட்டக்கல்லூரி மாணவர்‌. அவர்‌ பெற்றோர்‌ பணக்காரர்கள்‌ ஆனதால்‌, அந்த வீட்டை மகன்‌ தங்கி

படிப்பதற்காகவே வாங்கிப்போட்டு ஒரு வயதான பெண்‌மணியை சமையலிற்கும்‌, வீட்டை பார்த்துக்கொள்வதற்‌கும்‌ நியமித்து இருந்தனர்‌. அந்த அண்ணா அவ்வப்‌பொழுது ஆஸ்துமா நோயினால்‌ அவதிப்படுவார்‌. என்‌ அப்பாவிற்கும்‌ அது அவ்வப்பொழுது வரும்‌ என்பதால்‌, அவருக்கு அந்த அண்ணன்‌ மீது ஒரு தனி கரிசனம்‌ உண்டு. ஒரு முறை அண்ணன்‌ வீட்டு பாட்டி ஊருக்கு சென்றிருந்த நேரம்‌, அண்ணாவிற்கு ஆஸ்‌துமா படுத்த ஆரம்பித்தது. அப்பா என்னிடம்‌ அந்த அண்ணனுக்காக ஏதோ தனியாக சமைத்து என்னிடம்‌ கொடுத்து அந்த அண்ணனிடம்‌ கொடுத்து விட்டு வரச்‌சொன்னார்‌. நானும்‌ எடுத்துக்‌ கொண்டு போய்‌ அவர்‌ வீட்டு ஹாலில்‌ வைத்து விட்டு திரும்ப நினைத்தபோது.கட்டிலில்‌ படுத்துக்கொண்டிருந்த அண்ணா என்னை

அருகில்‌ அழைத்தார்‌. நான்‌ அருகில்‌ சென்றதும்‌ கட்‌டிலில்‌ அமரச்‌ சொன்னார்‌. இல்லை நான்‌ விளையாடப்‌போகணும்‌ என்று சொல்லிக்கொண்டே நகர நினைத்த நேரம்‌, சட்டென்று என்‌ கையை பிடித்து இழுத்து என்‌னைத்‌ தன்‌ மேல்‌ போட்டுக்கொண்டார்‌. எனக்கு பயம்‌ வந்து விட்டது, “விடுங்க என்னை. நான்‌ போகணும்‌” என்று சொல்லிக்கொண்டே நகர பார்த்தும்‌, முடியாமல்‌

போனது. அவர்‌ நல்ல கட்டுமஸ்தான உடம்பில்‌ இருப்‌பார்‌. பிறகு முரட்டுத்தனமாக என்னை அழுத்தி பிடித்து என்‌ மார்பை வலிக்கும்‌ அளவிற்கு அழுத்தி ஏதோ செய்‌துவிட்டு என்‌ ஒரு கையை இழுத்து அவர்‌ ஆணுறுப்‌பில்‌ வைத்து மேலும்‌ கீழும்‌ அவசர அவசரமாக தேய்க்க ஆரம்பித்தார்‌. எத்தனை

முயன்றும்‌ விலக முடியவில்லை. திடீரென கையை விட்‌டார்‌. என்‌ கை முழுவதும்‌ பிசு பிசுவென ஏதோ ஓட்டிக்‌கொண்டிருந்தது. கையை கழுவிக்கொண்டு வீட்டிற்குபோ என்று சொல்லிவிட்டு படுத்துக்கொண்டு விட்டார்‌. அன்று பிசுபிசுத்த என்‌ கை சமயத்தில்‌ இன்றும்‌ நாற்றமெடுப்பது போல்‌ ஒரு பிரமை, இதை எழுதிக்கொண்டிருக்கும்‌ இந்த நேரத்திலும்‌!

இப்படி என்‌ வாழ்வில்‌ நிகழ்ந்த ஒவ்வொன்றையும்‌ இங்கு பட்டியல்‌ போடுவது என்‌ நோக்கமல்ல. ஆனாலும்‌ காமம்‌ என்றால்‌ என்னவென்று கூட அறியாத வயதில்‌ நடந்த சில விஷயங்களை எனக்கு மட்டுமே நடந்ததாக நான்‌

அன்று எண்ணிக்‌ கொண்டிருந்திருந்தாலும்‌, வளர வளர தான்‌ தெரிந்தது ஏதோ ஒரு வகையில்‌ எல்லா குழந்தைகளும்‌, அது ஆணாக இருந்தாலும்‌ பெண்ணாக இருந்‌தாலும்‌, இறக்கும்‌ தருவாயில்‌ இருக்கும்‌ கிழவியானாலும்‌ இந்த மாதிரியான தீண்டுதல்களுக்கோ,. வன்புணர்‌விற்கோ ஆட்படுத்தப்பட்டுக்‌ கொண்டு தான்‌ இருக்‌கின்றனர்‌ நம்‌ சமூகத்தில்‌ என. அதையும்‌ செய்பவர்கள்‌

பெரும்பாலும்‌ நம்‌ குடும்பத்தினரால்‌ நல்லவர்கள்‌, பெரியவர்கள்‌ என நம்பப்படும்‌ மனிதர்கள்‌ தான்‌.

இது போலான பல அனுபவங்கள்‌ “பெரியவர்கள்‌”, “நல்‌லவர்கள்‌” என என்‌ குடும்பம்‌ நம்பிக்கொண்டிருந்த சிலரால்‌, வெளியில்‌ செல்லும்போது, சில மூன்றாம்‌ மனிதர்‌களாலும்‌ ஏற்பட்ட பிறகு. என்னுடைய பதினான்காவது

வயதில்‌ எனக்கொரு அதிர்ச்சி காத்திருந்தது. என்‌ தந்‌தையே எனக்கு பாலியல்‌ தொல்லை கொடுக்க ஆரம்‌பித்தார்‌. இரவுகளிலும்‌, அம்மா வீட்டில்‌ இல்லாத பொழுதுகளிலும்‌. உறக்கம்‌ தொலைத்து, உள்ளுக்குள்‌ ஒரு நடுக்கத்துடன்‌ இரண்டு வருடங்கள்‌ நகர்ந்தது. வீட்டைவிட்டு ஓட முயற்சித்து, எப்படியோ தேடிக்‌ கண்டுபிடித்து,ஏதோ நான்‌ யாருடனோ ஓட முயற்சித்தது போல்‌ அடி

உதைகள்‌ வாங்கினேன்‌. அதற்குப்பிறகு அந்த இம்சைகள்‌ அப்பாவிடமிருந்து நின்றன.

இது எல்லாவற்றையும்‌ அலசினால்‌ வேடிக்கையாக இருக்கிறது. தெய்வ நம்பிக்கையுள்ள ஒரு மனிதர்‌,தெய்வத்தை பற்றியான ஒரு திரைப்படத்திற்கு என்னைஅழைத்துச்‌ சென்று தவறாக நடந்தார்‌; அண்ணா என்று நான்‌ அழைத்துக்கொண்டிருந்த ஒரு நபர்‌, தவறாக என்னை உபயோகித்துக்‌ கொண்டார்‌; எல்லாவற்றிற்கும்‌ மேலாக, நான்‌ இந்த உலகில்‌ ஜனிப்பதற்கு காரணமாகவும்‌. என்னை காக்க வேண்டிய பொறுப்புள்ளவராகவும்‌ இருந்த தந்தையே என்‌ பாதுகாப்பின்மைக்கும்‌ காரணமானார்‌.

ஆனால்‌ இன்றும்‌ பாரம்பரியமிக்க இந்திய கலாச்சார பெருமைகளையும்‌, குடும்ப அமைப்புகளின்‌ மேன்மையையும்‌ மேற்கத்திய நாடுகளோடு ஒப்பிட்டு தொண்டை தண்ணீர்‌ வற்ற கதறிக்கொண்டிருக்கும்‌ குரல்கள்‌ என்‌ காதில்‌ நாராசமாக ஒலித்துக்கொண்டே தான்‌ இருக்‌கின்றன.

உன்னொருவளுக்கு இப்படி நடந்துவிட்டதென்றால்‌ கலாச்சாரத்தையே குறை சொல்வது சரியா என்ற கேள்‌வியை நீங்கள்‌ கேட்பீர்களேயானால்‌, “தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில்‌. இந்த ஜகத்தினை அழித்‌திடுவோம்‌” என்று குரல்‌ கொடுத்த பாரதியாரின்‌ வார்த்‌தைகளும்‌ இப்படியாகப்பட்டது தானே?

ஆயினும்‌ சொல்கிறேன்‌, இது எனக்கு மட்டும்‌ நடந்ததல்ல…இன்னும்‌ பல ஆயிரம்‌ பெண்களுக்கும்‌. ஆண்‌குழந்தைகளுக்கும்‌ இப்படிப்பட்ட தொந்தரவுகளோ,

இல்லை இதையும்‌ தாண்டிய கொடுமைகளோ அன்றிலிருந்து இன்று வரை நடந்து கொண்டுதான்‌ இருக்கிறது என்பதை யாராலும்‌ மறுக்க இயலுமா?

இந்த வயதிலும்‌. மக்கள்‌ காமம்‌ தேடி என்னை நோக்கிb வந்து கொண்டே தான்‌ இருக்கிறார்கள்‌. பெரும்பாலோருக்கு வேண்டியது என்னவோ அவர்கள்‌ உடல்‌ இச்‌சைக்கு ஒரு தீர்வு தான்‌. ஆனால்‌ கூறும்‌ காரணங்களோ ஆயிரம்‌.

காதல்‌, அன்பு என கூறிக்கொண்டு நெருங்க முற்படுவர்‌. இல்லையெனில்‌ நம்‌ பரிதாபத்தை சம்பாதிக்க, தன்‌மனைவிக்கு இதில்‌ சுத்தமாக விருப்பமில்லாமல்‌ போய்‌ விட்டதாகவோ, இல்லை அவர்களுக்குள்‌ சுமுகமான

உறவில்லை எனவோ முறையிடுவார்கள்‌. காதல்‌. அன்பு என்ற பெயர்‌ சொல்லி நெருங்குபவர்கள்‌ ஏமாற்றுக்காரர்கள்‌ என்றால்‌, இந்த இரண்டாவது வகை மனிதர்களைக்‌ காண்கையில்‌, ஆச்சரியமும்‌, அருவருப்பும்தான்‌ மிஞ்சும்‌. இவர்கள்‌ வீட்டில்‌ கிடைக்கவில்லையெனில்‌ அதற்கு பரிதாபப்பட்டு இவர்கள்‌ bதேவையைப்‌ பூர்த்தி செய்ய,

பெண்கள்‌ இங்கு சத்திரமா வைத்து நடத்திக்‌ கொண்டிருக்கிறோம்‌?

மிகவும்‌ அரிதாக சில ஆண்கள்‌ நேரடியாக கேட்பார்கள்‌ அவர்கள்‌ தேவையை. இது ஏற்றுக்கொள்ள வேண்‌டிய விஷயமாக இருந்தாலும்‌ இல்லாவிட்டாலும்‌, அவர்களின்‌ இந்த நேர்மையை நான்‌ எப்பொழுதுமே பாராட்டுவதுண்டு.

என்னை ஆச்சர்யத்தில்‌ ஆழ்த்தும்‌ இன்னொரு விஷயம்‌ என்னவென்றால்‌ ஒரு ஆணின்‌ அகம்பாவமானது ஒரு பெண்ணிடமிருந்து வேண்டாம்‌ என்ற சொல்லை ஏற்க மறுக்கிறது; இங்கே அவன்‌ செய்வது என்ன? தன்‌ அகம்‌ பாவத்தை காக்கும்‌ பொருட்டு தன்‌ சுயமரியாதையை இழந்து மேலும்‌ மேலும்‌ அழுத்தம்‌ கொடுப்பது தான்‌. என்‌ சில ஆண்‌ நண்பர்கள்‌ என்னிடம்‌ கூறி இருக்கிறார்‌கள்‌. இம்மாதிரியான யுக்திகளை ஆண்கள்‌ மட்டுமல்ல நிறைய பெண்களும்‌ கையாள்வதுண்டு என. கண்டிப்‌பாக இருக்கும்‌. காமமும்‌, உடல்‌ வேட்கையும்‌ இருபாலாருக்கும்‌ பொது தானே? அங்கங்கு செய்தித்தாள்களில்‌ படித்துக்கொண்டு தானே இருக்கிறோம்‌, வயதில்‌ மிகுந்த பெண்கள்‌. சிறு ஆண்‌ பிள்ளைகளை தவறான வழியில்‌ அழைத்துச்‌ சென்று அவர்கள்‌ வாழ்வை

பாழாக்குவதைப்‌ பற்றி? இவர்கள்‌ பல நேரங்களில்‌ நம்‌ அருகிலேயே நமக்கே தெரியாமல்‌ நடமாடிக்கொண்டிருக்கும்‌ மனிதர்கள்‌ தான்‌.

நான்‌ ஒரு பெண்ணாக இருப்பதாலும்‌. என்‌ அனுபவங்‌களை கொண்டே நான்‌ இந்தப்‌ புத்தகத்தை எழுதுவதாலும்‌, நான்‌ இன்னொரு பாலாரை மட்டுமே குறை

கூறுவதாக தோன்றலாம்‌. ஆனால்‌ என்‌ நோக்கம்‌ அதுவல்ல. காமத்தை மறைத்து வைக்க வேண்டிய ஒன்றாகவும்‌.மிகவும்‌ தவறான விஷயமாகவும்‌, திருமணத்திற்கு முன்‌பான காம உணர்வுகளை ஒதுக்கி வைக்க வேண்டிய

ஒன்றாகவும்‌ இருக்கும்‌ ஒரு சூழலில்‌. அவற்றால்‌ ஏற்படும்‌ பாதிப்புகளை அலசுவது மட்டுமே என்‌ நோக்கம்‌.

நாம்‌ நம்‌ உயர்ந்த கலாச்சாரம்‌ பற்றி நிறைய பேசுகிறோம்‌. ஒருவனுக்கு ஒருத்தி, ஒருத்திக்கு ஒருவன்‌ என வாய்‌ கிழிய பேசுகிறோம்‌. தாய்‌ தந்தையர்‌ தெய்வமெனபோற்றுகிறோம்‌, மேலும்‌ ஆயிரம்‌ தெய்வங்களை வணங்‌குகிறோம்‌. இது தான்‌ சரியான பாதை என்றால்‌, ஏன்‌ இங்கு இத்தனை பாலியல்‌ கொடுமைகள்‌, வன்முறைகள்‌. ஏக்கங்கள்‌? ஏன்‌ இத்தனை ஏமாற்று வித்தைகள்‌? எங்கே பிரச்சினை? வேரிலேயே ஏதோ பெரிய பிரச்னை உள்ளது. அதை சரி செய்வது அவசியமாகிறது.

என்‌ ஆச்சரியங்கள்‌, தாக்கங்கள்‌. அதிர்ச்சிகள்‌, வெறுப்‌புகள்‌, கோபங்கள்‌, அன்பு, காதல்‌, என்‌ கேள்விகள்‌,எனக்கு கிடைத்த பதில்கள்‌, இவை எல்லாவற்றின்‌ தொகுப்பு தான்‌ இந்த புத்தகம்‌.

இந்தப்‌ புத்தகத்தின்‌ அத்தியாயங்களுக்குள்‌ போவதற்கு முன்‌ ஒன்றை தெளிவு படுத்த விழைகிறேன்‌. எந்த விதத்திலும்‌ இந்தப்‌ புத்தகம்‌, ஒரு தனி மனிதரையோ, ஒரு தனி பாலாரையோ தனிப்பட்ட முறையில்‌ குறை சொல்லும்‌ நோக்குடன்‌ எழுதப்படவில்லை. நான்‌ பார்த்த மனிதர்கள்‌ (ஆண்‌/பெண்‌ இரு பாலாரும்‌ இதில்‌ அடக்கம்‌), எனக்கான தாக்கங்கள்‌, மற்ற மனிதர்களுடனான என்‌ விவாதங்கள்‌, என்‌ அனுபவங்கள்‌. என்னுடன்‌ மனம்‌ திறந்து பகிர்ந்த சில நண்பர்களின்‌ அனுபவங்கள்‌, இவையே இந்தப்‌ புத்தகத்தின்‌ அடித்தளம்‌.

ஆனால்‌ என்ன சொன்ன போதிலும்‌ பல காலமாக நம்‌ சமூகம்‌ ஆணாதிக்க சமூகமாகவே இருந்து வருவதால்‌, பெண்கள்தான்‌ அதிகமாக அடிமைப்பட்டு வாழ்‌கிறார்கள்‌ என்னும்‌ உண்மையையும்‌ ஒப்புக்கொண்டே ஆக வேண்டியுள்ளது. ஆனால்‌ என்னால்‌ இயன்ற வரை காமத்தை இரு பாலாருக்கும்‌ பொதுவில்‌ வைத்தே அலசி இருக்கிறேன்‌. படிப்பவர்கள்‌ நீங்களும்‌ ஒரு நடுநிலையில்‌ இருந்தே இதை படிக்க வேண்டுகிறேன்‌.

ஏன்‌ இந்த தலைப்பு?

ஏன்‌ இந்தப்‌ புத்தகத்திற்கு “கழிவறை இருக்கை” எனப்‌ பெயர்‌ வைத்திருக்கிறேன்‌ என உங்களுக்கு கேள்வி எழலாம்‌. புத்தகத்தை மேலே படிக்க உங்களுக்கே அது

புரியலாகும்‌.

அன்பும்‌ நன்றியும்‌

லதா

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *