ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் | PDF DOWNLOAD

இணையம் மற்றும் சமூகவலைதளங்களின் வருகையால் அரசியல் பரவலாக மக்களிடத்தில் சென்று சேர்ந்திருக்கிறது. நமக்கு நடக்கிற ஒவ்வொரு விசயத்திற்கும் அரசியலோடு தொடர்பு உண்டு என்பதை நாம் அறிவோம். ஆனால் இந்தப் புத்தகத்தை வாசித்தபிறகு நமக்கு நடக்கிற ஒவ்வொரு விசயத்திற்கும் அமெரிக்கா போன்ற வல்லாதிக்க நாடுகளுக்கும் தொடர்பு இருப்பதை நீங்கள் அறிவீர்கள்.

ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் PDF Download Here

எனக்கும் அரசியலுக்கும் வெகு தூரம் என்று சொல்பவர்களின் வீடுகளில் எப்போது மின்சாரம் வர வேண்டும், தண்ணீர் எப்போது வர வேண்டும், வீட்டிற்கு முன்னே சாலை எப்படி இருக்க வேண்டும், மாதாந்திர வருவாயில் எவ்வளவு தொகையை நாம் ஒவ்வொரு மாதமும் செலவு செய்ய வேண்டும் என்பதில் கூட அரசியலின் தாக்கம் இருக்கிறது. அந்த தாக்கத்தை நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும். இது உலகமயமாக்கல் ஆரம்பிப்பதற்கு முன்பிருந்த நிலை. ஆனால், உலகமயமாக்கல், தாராளமயமாக்கல் என்பது எப்போது ஆரம்பித்ததோ அன்றிலிருந்து ஒரு நாட்டில் நடக்கும் ஒரு மாற்றத்திற்கும் அமெரிக்கா அல்லது அமெரிக்கா போன்றதொரு வல்லாதிக்க நாட்டின் பங்கு இருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? நம்பித்தான் ஆக வேண்டும்.

நீங்கள் ஜான் பெர்கின்ஸ் எழுதிய Confessions of an Economic Hit Man என்ற புத்தகத்தின் தமிழாக்கமான இரா.முருகவேள் எழுதிய “ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்” என்ற புத்தகத்தை படித்துவிட்டால் நிச்சயமாக நம்புவீர்கள். இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளை அமெரிக்கா தன் கைக்குள் வைத்துக்கொண்டு வளங்களை சுரண்டுவதற்கு எப்படிப்பட்ட வேலைகளையெல்லாம் செய்கிறது என்பதனை ஜான் பெர்கின்ஸ் விரிவாக தெரிவித்து இருக்கிறார். தனக்கு பயன்படும் நாடுகளை பட்டியல் எடுத்து அந்த நாடுகளை தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர அமெரிக்கா பல ரகசிய உளவாளிகளை பயன்படுத்துகிறது. அதிலே ஒரு உளவாளி தான் ஜான் பெர்கின்ஸ்.

மிகவும் நாணயமிக்க பெற்றோர்களை கொண்டிருந்த ஜான் பெர்கின்ஸ் அமெரிக்காவின் ரகசிய உளவு அதிகாரியாக வேலை பார்த்தவர். அமெரிக்காவின் உத்தரவிற்கு இணங்கி பல நாடுகளை ஆசை காட்டியோ அல்லது அந்த நாட்டின் தலைவர்களை சில சிக்கல்களில் சிக்கவைத்து மிரட்டியோ அமெரிக்காவிற்கு அடிமைப்படுத்தும் வேலைகளை கச்சிதமாக செய்து வந்துள்ளார். பனாமா நாடு உருவாக்கம், சவூதி அரேபியாவில் குப்பை அள்ளும் வேலை மூலமாக நுழைந்து அடிமைப்படுத்தியது, ஒசாமா பின்லேடன் வளர்த்தெடுக்கப்பட்டது என பல்வேறு ரகசியங்களை போட்டு உடைத்திருக்கிறார் ஜான் பெர்கின்ஸ்.

இந்தப்புத்தகத்தை நீங்கள் வாசிப்பதற்கு முன்பு பேசிய அரசியலுக்கும் வாசிப்பிற்கு பிறகு பேசும் அரசியலுக்கும் ஏகப்பட்ட வித்தியாசங்கள் இருந்தே தீரும். நீங்கள் இந்த புத்தகத்தை வாசித்து இருந்தால் புத்தகம் பற்றிய உங்களது கருத்துக்களை பதிவிடுங்கள்.

Buy Here : ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *