ஆசிரியர் பணி அறப்பணி. சிறுவயதில் தங்களது ஆசிரியர்களால் ஈர்க்கப்படும் மாணவர்கள் பலர் தாங்களும் சிறந்த ஆசிரியர்களாக வேண்டுமென விரும்புகிறார்கள். ஒருவர் தமிழ்நாட்டில் பள்ளி ஆசிரியர் ஆவது எப்படி என்பதை தெரிந்து கொள்ள இந்தப்பதிவு பயன்படும்.
தமிழகத்தை பொறுத்தவரைக்கும் நீங்கள் பள்ளியில் ஆசிரியர் பணிக்கு சேர விரும்பினால் நிச்சயமாக தமிழக அரசு நடத்தும் TNTET என்றதேர்வில் தகுதி மதிப்பெண்ணை பெற வேண்டும். நீங்கள் இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்றுவிட்டால் உங்களுக்கு அரசுப்பள்ளியில் நிச்சயமாக ஆசிரியர் பணி கிடைத்துவிடும் என்பது நிச்சயமல்ல. இது ஒரு தகுதித்தேர்வு என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
நீங்கள் 12 ஆம் வகுப்பு முடித்துவிட்டு D.Ed முடித்தால் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை உள்ள பிள்ளைகளுக்கு ஆசிரியராக செல்ல முடியும்.
நீங்கள் ஒரு டிகிரி முடிந்துவிட்டது D.Ed அல்லது B.Ed முடித்தால் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை உள்ள பிள்ளைகளுக்கு ஆசிரியராக செல்ல முடியும்.
What is TNTET?
Teachers Recruitment Board (TRB) ஒவ்வொரு ஆண்டும் TNTET [Tamil Nadu Teachers Eligibility Test] என்ற தகுதித்தேர்வை நடத்துகிறது. இதிலே தேர்ச்சி பெரும் ஒருவர் தான் பள்ளி ஆசிரியராக பணிக்கு சேர முடியும். இந்த பதிவை படிக்கும் உங்களுக்கோ அல்லது உங்களது பிள்ளைகளுக்கோ ஆசிரியர் ஆகும் கனவு இருந்தால் ஒரு பாராட்டுக்கள். TNTET தேர்வானது இரண்டு பேப்பர்களை கொண்டிருக்கும். Paper 1 என்பது 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரைக்கும் உள்ள மாணவர்களுக்கான ஆசிரியர் தகுதித்தேர்வு. Paper 2 என்பது 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரைக்கும் உள்ள தேர்வு. இந்த தேர்வில் வாங்கும் மதிப்பெண்கள் அடுத்த 7 ஆண்டுகளுக்கு செல்லும் என்பது.கவனிக்கத்தக்கது .
18 வயது துவங்கி 40 வயதுடையவர்கள் இந்த தேர்வில் பங்கேற்கலாம். நீங்கள் சிறப்பு பிரிவினர் என்றால் அரசு வழங்கும் சிறப்பு விலக்கு இதற்கும் உண்டு.
TNTET கல்வித்தகுதி என்ன?
Paper 1 க்கான தேர்வில் பங்கேற்க நீங்கள் நிச்சயமாக 12 ஆம் வகுப்பில் 50% க்கும் மேல் மதிப்பெண் பெற்று இருக்க வேண்டும். அதோடு D.Ed அல்லது B.EI.Ed அல்லது D.Ed course in Special Education முடித்தவர்கள் அல்லது இறுதி ஆண்டு படிப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். ஏதேனும் ஒரு டிகிரி முடித்துவிட்டு D.Ed அல்லது B.Ed முடித்தவர்கள் கூட விண்ணப்பிக்க முடியும்.
Paper 2 க்கான தேர்வில் டிகிரி மற்றும் D.Ed அல்லது டிகிரி (50% மார்க்) மற்றும் B.Ed. முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். விரிவான தகுதியை அறிந்துகொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள புகைப்படத்தை பாருங்கள்.
TNTET தேர்வு எப்படி நடைபெறும்?
நாம் மேலே பார்த்தது போல இரண்டு பகுதிகளாக இந்த தேர்வு நடைபெறும். இந்த தேர்வு TNPSC தேர்வு போன்றே நடத்தப்படும். மூன்று மணி நேரம் நடைபெறும் இந்தத்தேர்வில் 150 கேள்விகள் இடம்பெறும். ஒவ்வொரு கேள்விக்கும் 1 மதிப்பெண் வழங்கப்படும். நீங்கள் தவறாக பதில் அளித்தால் அதற்காக மதிப்பெண் குறைக்கப்படாது.
TNTET exam pattern – paper I
TNTET exam pattern –paper II
நீங்கள் தேர்வில் பெரும் மதிப்பெண்ணை அடிப்படையாக வைத்து உங்களுக்கு தகுதி சான்றிதழ் வழங்கப்படும். இந்த சான்றிதழ் அடுத்த 7 ஆண்டுகளுக்கு செல்லும்.
எங்களது கட்டுரைகளை நீங்கள் தவறாமல் படிக்க விரும்பினால் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்து பின்தொடருங்கள். கூறவே வாட்ஸ்ஆப் பட்டனை அழுத்தி எங்களுடைய குரூப்பில் இணைத்துக்கொண்டு பதிவுகளை பெறுங்கள்