2021 இந்தியாவின் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகள் என்னென்ன?

இந்தியாவில் சேவைகளை வழங்கும் சமூக வலைதள நிறுவனங்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் பிப்ரவரி 2021 இல் வெளியானது. அந்த விதிகள் இன்றுமுதல் நடைமுறைக்கு வந்துள்ள சூழ்நிலையில் அந்த விதிகள் குறிப்பிடும் விசயங்கள் என்னென்ன என்பதைத்தான் இங்கே பார்க்க இருக்கிறோம். [Intermediary Guidelines and Digital Media Ethics Code] 

இந்தியாவில் 50 லட்சம் அல்லது அதற்கு மேல் பயனாளர்களைக் கொண்டிருக்கும் சமூக வலைதள நிறுவனங்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் இந்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தால் பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டது. இதனை கூகுள், பேஸ்புக் உள்ளிட்ட நிறுவனங்கள் ஏற்றுக்கொண்டுள்ளன. தற்போதைய சூழ்நிலையில் இந்த விதிமுறைகள் அனைத்தும் பேஸ்புக், கூகுள், ட்விட்டர், கூ உள்ளிட்ட ஆப்களுக்கு தான் பொருந்தும். காரணம், அவை தான் 50 லட்சத்திற்கும் மேலான பயனாளர்களை கொண்டிருக்கிறார்கள். 

இந்தியாவின் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகள் என்னென்ன?

முக்கியமாக இந்த நிறுவனங்கள் செய்திட வேண்டிய விசயங்கள் இவையே,

குறை தீர்க்கும் அதிகாரி : இதற்காக குறிப்பிட்ட நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவரை குறை தீர்க்கும் தலைமை அதிகாரியாக [grievance officer] நியமிக்க வேண்டும்

கண்காணிக்கும் வழிமுறை : தங்களுடைய பயனாளர்கள் பதிவிடும் கருத்துக்களை வேகமாகவும் துல்லியமாகவும் கண்காணிக்கும் வழிமுறையை ஏற்படுத்த வேண்டும்

குறைதீர்க்கப்படும் வேகம் : சக பயனாளர்கள் ஏதேனும் ஒரு பதிவு குறித்தோ அல்லது பயனாளர் குறித்தோ புகார் தெரிவிக்கும் போது அதன் மீது மிக வேகமாக நடவெடிக்கை எடுக்கப்பட வேண்டும். புகார் 24 மணி நேரத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டு அதற்கான ரசீது வழங்கப்பட வேண்டும். அதேபோல, புகார் ஏற்றுக்கொள்ளப்பட்ட அடுத்த 15 நாட்களுக்குள் நடவெடிக்கை எடுக்கப்பட்டிருக்க வேண்டும்

தவறான பதிவுகள் நீக்கப்படும் வேகம் : சமூக வலைதளத்தில் இடப்படும் பதிவுகள் குறித்து புகார் அளிக்கப்படும் போது உடனடியாக அந்தப்பதிவுகள் நீக்கப்பட வேண்டும். உதாரணத்திற்கு, ஆபாச வீடியோ அல்லது புகைப்படம் குறித்த புகார் எழுந்தால் மிக வேகமாக இந்தப்பதிவு நீக்கப்பட்டிருக்க வேண்டும்.

மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தால் உருவாக்கப்பட்ட மேற்பார்வை வழிமுறையும் இருக்க வேண்டும்.

இவைதான் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கியமான விசயங்கள். 

இவற்றை நிறுவனங்கள் பின்பற்றாவிடில் தடை செய்யப்படுமா?

4. சமூகவலைதளம்

இந்தப் புதிய விதியை பின்பற்றாவிடில் பேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்ஆப், கூகுள் நிறுவனங்கள் தடை செய்யப்படுமா என பலரும் பேசி வருகிறார்கள். விதிகளை ஒரு நிறுவனம் பின்பற்றாவிடில் என்னென்ன நடவெடிக்கை எடுக்கப்படும் என விதிகளிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, தற்போது சமூக வலைதளங்களில் தவறான பதிவுகள் பதிவிடப்பட்டால் குறிப்பிட்ட நிறுவனத்தின் மீது நடவெடிக்கை எடுக்க முடியாது. அதற்கான பாதுகாப்பு [legal immunity] கொடுக்கப்பட்டுள்ளது. இந்த விதிகளை பின்பற்றாத நிறுவனங்களுக்கு அந்த பாதுகாப்பு என்பது நீக்கப்பட்டுவிடும். ஆகவே குறிப்பிட்ட சமூக வலைதளத்தில் யாரேனும் தண்டனைக்கு உரிய பதிவுகளை பதிவிட்டால் குறிப்பிட்ட அந்த நிறுவனமும் குற்றம் இழைத்ததாக கருதப்படும். விதிகளை பின்பற்றாவிடில் தடை செய்யப்பட்டு விடும் என்பதில் உண்மை இல்லை.

This is where the subsection 1 of the section 79 of the IT Rules 2021 comes into play. This has been clearly mentioned in the new IT Rules 2021. “When an intermediary fails to observe these rules, the provisions of sub-section (1) of section 79 of the Act shall not be applicable for such intermediary and the intermediary shall be liable for punishment under any law for the time being in force including the provisions of the Act and the Indian Penal Code”. The section 79 specifically gives digital media platforms such as Facebook, Twitter, YouTube and WhatsApp legal immunity in a way against liability for posts made on their networks, third party information or data. That legal immunity will be withdrawn if non-compliance becomes an issue. 






எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!

பாமரன் கருத்து

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *