சமூக வலைதளத்தில் உதவி கேட்போர் மீது வழக்கு தொடுக்க கூடாது : சுப்ரீம் கோர்ட் அதிரடி

டெல்லி, மகாராஷ்டிரா, உத்திரபிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கொரோனா கோர தாண்டவம் ஆடிக்கொண்டு இருக்கிறது. பலர் தங்களுக்கோ,தங்களது பிள்ளைகளுக்கோ, பெற்றோருக்கோ, உறவினர்களுக்கோ ஏதேனும் மருத்துவ உதவி அல்லது ஆக்சிஜன் உதவி தேவைப்பட்டால் அதனை சமூக வலைதள பக்கங்களில் தெரிவித்து உதவியை பெற்றுவருகிறார்கள். உதவி செய்திடும் நல்ல உள்ளங்கள் சமூக வலைதள பக்கங்களில் உதவி கேட்போரை பார்த்தால் அவர்களுக்கு தங்களால் இயன்ற உதவியை செய்துவருகிறார்கள். இந்த இக்கட்டான சூழ்நிலையில் சமூக வலைதளங்கள் மக்களின் நண்பனாக செயல்பட்டு வருகிறது.

ஆனால், சில மாநில அரசுகளோ இப்படி உதவி கேட்போரை ‘அரசின் மீது களங்கம் ஏற்படுத்துவது’ ‘பொய்யான தகவலை பரப்புவது’ உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து வருகின்றன. இந்த சூழ்நிலையில் தான் உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து இந்த பிரச்சனைகளை விசாரித்தது. அதன்படி, மிகவும் கார சாரமாக கருத்து தெரிவித்த நீதிபதிகள் ‘ஒருவர் தங்களுக்கு உதவி வேண்டுமென சமூக வலைதளத்திலோ அல்லது இணையத்திலோ பதிவிடுவது குற்றம் ஆகாது. நாங்கள் ஒவ்வொரு மாநில அரசுக்கும் மாநில காவல்துறை தலைவருக்கும் ஒன்றை சொல்லிக்கொள்கிறோம். நீங்கள் இப்படி உதவி கேட்போர் மீது நடவெடிக்கை எடுத்தால் இந்த கோர்ட்டை அவமதிப்பது என்பதை நினைவிலே கொள்ளுங்கள்’ என சொல்லியிருக்கிறது. 

பிழைத்துக்கொள்ளுங்கள், கொரோனா இரண்டாவது அலை மிகவும் அபாயகரமானது - ஏன்?

“Let a strong message go across to all states that we will consider it a contempt of this court if any citizen is harassed for making a plea on social media/media for making an appeal for oxygen/beds etc. Clampdown on information contrary to basic precepts. No state can clampdown on information.” பாதிக்கப்பட்டவர்கள் தங்களது அனுபவங்களை சமூக வலைதளங்களில் பகிரவே செய்வார்கள். இந்த தருணத்தில் அனைத்து குரல்களையும் அமைதியாக கேட்டுக்கொண்டு மக்களுக்கு நன்மை செய்திடும் வேலையை ஒவ்வொரு அரசுகளும் செய்ய வேண்டுமே தவிர அவர்களை தண்டிக்கும் வேலையில், மிரட்டும் வேலையில் ஈடுபடக்கூடாது என்பதையே நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு காட்டுகிறது. 

எங்களது கட்டுரைகளை நீங்கள் தவறாமல் படிக்க விரும்பினால் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்து பின்தொடருங்கள். கூறவே வாட்ஸ்ஆப் பட்டனை அழுத்தி எங்களுடைய குரூப்பில் இணைத்துக்கொண்டு பதிவுகளை பெறுங்கள்



Get Updates in WhatsApp

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *