வாகன இன்சூரன்ஸ் உண்மையாலுமே பயனுள்ளதா? நாம் கவனிக்க வேண்டியது என்ன? அரசின் கடமை என்ன?

இன்று அனேக இடங்களில்  போக்குவரத்து போலீசிடம் நாம் மாட்டிகொண்டு நிற்பது காலாவதியான இன்சூரன்ஸ் காரணமாகவும் தான். எதற்காக இந்த இன்சூரன்ஸ் நாம் போடவேண்டும் என்று  அந்த நேரத்தில் நாம் எண்ணுவது  உண்டு. 1000 பேரிடம் வாங்கிக்கொண்டு ஒருத்தனுக்கு மட்டும் இன்சூரன்ஸ் கம்பெனி பணம் கொடுப்பதாகவும் நாம் எண்ணுவது உண்டு. உண்மையில் நடப்பது தான் என்ன?

இப்பொழுது நடைமுறையில் இருக்கும் வாகன சட்டம்(Motor Vehicle Act) 1988 ம் ஆண்டு கொண்டுவரப்பட்டு 1989ல்  நடைமுறைக்கு வந்தது.

இன்சூரன்ஸ் நம்மை எந்த நேரத்தில் நமக்கு உதவும் :

பொதுவாகவே நாம் எடுக்கும் இன்சூரன்ஸ் ஆனது வாகன உரிமையாளரை விட பாதிக்கப்படும் மூன்றாம் நபருக்கே உதவிகரமாக இருக்கும். எதிர்பாரத விதமாக நாம் மூன்றாம் நபரையோ மூன்றாம் நபரது சொத்துகளையோ நம் வாகனத்தால் பாதிப்படைய செய்யும் போது இன்சூரன்ஸ் மட்டுமே அதற்கு ஆகும் செலவினை அளிக்கும். மிகச்சிறிய இன்சூரன்ஸ் பணத்தினை நாம் செலுத்தினாலும் நம்மால் பாதிப்படைந்தவர்களுக்கு மிகப்பெரிய தொகையினை இன்சூரன்ஸ் கம்பனியே அளிக்கும். இந்தியாவில் பெரும்பாலான மக்கள் நடுத்தர வர்க்கத்தினர். எனவே அவர்களால் பாதிப்படைந்தவர்களுக்கு 2 லட்சமோ 3 லட்சமோ உடனடியாக கொடுக்க இயலாது. எனவே தான் இன்சூரன்ஸ் இந்தியாவில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

சில நேரங்களில் நமது வாகனம் சில காரணங்களால் பாதிக்கப்படும் போது அதற்கான ஒரு குறிப்பிட்ட தொகையினையும் இன்சூரன்ஸ் கம்பெனி நமக்கு அளிக்கும்.

நாம் இன்சூரன்ஸ் எடுக்கும் போது கவனிக்க வேண்டியது என்ன?

சில இன்சூரன்ஸ் கம்பனிகள் நாம் இன்சூரன்ஸ் எடுக்கும் போது அனைத்து குறிப்புகளையும் நம்மிடம் சொல்வதில்லை. நாமும் அந்த நேரத்தில் அதைப்பற்றி கவலைப்படாமல் வாகனம் பாதிப்படையும் போது மட்டுமே நாம் இன்சூரன்ஸ் பாலிசியை படிக்கிறோம்.

இன்சூரன்ஸ் பின்வரும் இயற்கை மற்றும் செயற்கை காரணிகளால் பாதிக்கப்பட்டால் பயன்படுமாறு இருக்க வேண்டும்.

* Fire (நெருப்பு )
* Explossion (வெடிப்பு 0
* self ingition
* Lightning (மின்னல்)
* Earthquake (நிலநடுக்கம்)
* Flood (வெள்ளம்)
* Typhoon (கடும்புயல்)
* Hurricane (சூறாவளி)
* Storm(புயல்)
* Tempest (பெருங்காற்று
* Inundation (வெள்ளப்பெருக்கு)
Cyclone  (சூறாவளி)
Hailstorm (பனிமழை)
Frost (பனி)
Landslide (நிலச்சரிவு)
Rockslide (பாறை சரிவு)
Burglary (கொள்ளை)
Theft (திருட்டு0
Riot/Strike/Malicious act (கலகம்)
Accident by external means (விபத்து)
Terrorist activity (தீவிரவாத செயல்கள்)

குறிப்பு : உங்கள் வாகனம் பாதிப்படைந்த காரணி உங்கள் பாலிசியில் இல்லை என்றால் உங்களுக்கு இழப்பீடு கிடைக்காது.

அரசின் கடமை :

இந்தியாவில் பல்வேறு இன்சூரன்ஸ் கம்பனிகள் உள்ளன. ஒவ்வொரு நிறுவனமும் ஒவ்வொரு விதமாக பாலிசிகளை வைத்துக்கொண்டுள்ளன. படிக்காத பலரும் படித்த நடுத்தர வர்க்கத்தினரும் பாலிசியை படிக்காமலே தான் பெரும்பாலும் எடுத்து வருகிறோம். இன்சூரன்ஸ் கம்பனிகளோ இதை பயன்படுத்திக்கொண்டு நம்மை ஏமாற்றும்வேலையும் நடந்து வருகின்றது.

எனவே அரசாங்கமே அனைத்து இன்சூரன்ஸ் கம்பனிகளுக்கும் பொதுவான பாலிசியினை கொண்டு வந்தால் யாரும் ஏமாற வாய்ப்பில்லை.

நன்றி!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *