புதிய வாகன சட்டம் 2016 – புதிய அபராத தொகை என்ன? ஒரு பார்வை!

பிரதமர் மோடி அவர்களின் தலைமையிலான கேபினட் அமைச்சரவை புதிய வாகன சட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.இது இந்திய சாலை பாதுகாப்பிலும் எண்ணற்ற உயிர்களின் பாதுகாப்பிலும் இந்திய அரசாங்கம் மேற்கொண்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த செயலாக இது பார்க்கப்படுகின்றது.

இந்த புதிய சட்டத்தின்படி அனைத்து குற்றங்களுக்குமான அபராதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஓட்டுனர் உரிமத்தை சிறிது காலம் தகுதி இழப்பு செய்யும் நடவெடிக்கையும் இதில் இணைக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட சில விதிமுறைகள்…

சாலை விதிகளை பின்பற்றாமல் வாகனம் ஓட்டினால் முன்பு ரூ100 இப்பொழுது ரூ500
ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வண்டி ஓட்டினால் முன்பு ரூ500 இப்பொழுது ரூ5000
ஹெல்மெட் இல்லாமல் வாகனம் ஓட்டினால் முன்பு ரூ 100 இப்பொழுது ரூ 1000 அபராதம் மற்றும் 3 மாதம் உரிமம் ரத்து.
இன்சூரன்ஸ் இல்லாமல் இருந்தால் முன்பு ரூ 1000 இப்பொழுது ரூ 2000
> ஓட்டுனர் உரிமம் தகுதி இழப்பு செய்யப்பட்டிருக்கும் பொழுது வண்டி ஓட்டினால் அபராதம் முன்பு ரூ500 இப்பொழுது ரூ10,000
> ஆபத்தை ஏற்படுத்தும் விதமாக வண்டி ஓட்டினால் முன்பு ரூ 1000 இப்பொழுது ரூ5000 வரை
குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் முன்பு ரூ 2000 இப்பொழுது ரூ 10000
> அனுமதிக்கப்பட்ட வேகத்தை விட அதிவேகமாக வண்டி ஓட்டினால் முன்பு ரூ500 இப்பொழுது ரூ 5000
>இரண்டு நபர்களுக்கு மேல் இரு சக்கர வாகனத்தில் சென்றால் முன்பு ரூ 100 இப்பொழுது ரூ 2000 அபராதம் மற்றும் 3 மாதம் உரிமம் ரத்து.

புதிய சட்டங்கள் : 

ஆம்புலன்ஸ் போன்ற வாகனங்களுக்கு வழிவிடாமல் இடையூறாக வாகனம் ஓட்டினால் ரூ 10000 அபராதமாக விதிக்கப்படும்.

சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் அவர்களின் பாதுகாவலர்கள் அல்லது பெற்றோர்கள் ரூ 25,000 அபராதத்துடன் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க முடியும் மேலும் அந்த வாகனமும் பறிமுதல் செய்யப்படும்.

இந்த சட்டம் எந்த முறையில் நடைமுறைப்படுத்தபட போகின்றதோ தெரியவில்லை. ஆனால் இந்த சட்டங்களை சரியாக நடைமுறை படுத்தினால் வாகன விபத்துகள் குறையும் என்பதில் சந்தேகம் இல்லை. அதே நேரத்தில் இது போன்ற அதிக அபராத தொகையை செலுத்த வழியில்லாத மக்கள் நிச்சயமாக காவல் துறை அதிகாரிகளுக்கும், சில காவல்துறை அதிகாரிகள் மக்களை மிரட்டியும் லஞ்சம் வாங்க இந்த அதிக அபராத தொகை வழி வகுக்கும்..

சாலை விதிகளை மதிப்போம்!!! விபத்தை தடுப்போம்!!!

நன்றி
ஸ்ரீ 

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *