5 Popular WebSites To Buy Cheap Domain Names | டொமைன் வாங்க டாப் 5 இணையதளங்கள்

இலவசமாக இணையதளங்கள் தொடங்க தற்போது நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. Google Blog Spot, Wix, Yola போன்ற பல நிறுவனங்கள் இலவசமாக இணைய பக்கங்களை திறக்க உதவுகின்றன. ஆனால் இதில் நீங்கள் இணையத்தளத்தினை உருவாக்கும் போது உங்களுக்கு வழங்கப்படுகின்ற டொமைன் முகவரி pamarankaruthu.com என்று இல்லாமல் pamarankaruthu.blogspot.com என்றோ pamarankaruthu.wix.com என்றோ தான் இருக்கும். இதனை பார்க்கும் போது இலவச இணையதளம் என்பதனை பார்ப்பவர்கள் கண்டறிந்து விடுவார்கள்.

இதனை தவிர்க்கத்தான் இணையதளங்களை உருவாக்குபவர்கள் தனியாக பணம் செலுத்தி தங்களுக்கென டொமைனை (domain) வாங்க நினைக்கிறார்கள். அப்படி இணையதள முகவரியை பதிவு செய்ய பல இணையதளங்கள் இருந்தாலும் அவற்றில் சில தான் சிறப்பான சேவையை வழங்குகின்றன. அவற்றில் டாப் 5 இணையதளங்களை பற்றி பார்ப்போம்.

1. GoDaddy

உலக அளவில் புகழ் பெற்ற மற்றும் மிக பெரிய web hosting company and domain name registrar GoDaddy. தற்போது இந்தியாவில் மிக அதிக அளவில் வளர்ந்து வருகிறது .

 

நீங்கள் இணையத்தை பெரும்பாலும் பயன்படுத்தி இருந்தால் இணைய விளம்பரங்களிலும் தொலைக்காட்சிகளிலும் ரூ 99 ரூ 199 போன்ற குறைந்த விலைகளில் டொமைன் வாங்கலாம் என்கிற GoDaddy இன் விளம்பரத்தை கண்டிருக்கலாம். உண்மை தான், பிற இணையதளங்களில் ரூ 500 முதல் ரூ 700 வரை விற்கின்ற டொமைனை GoDaddy ரூ 99 ரூ 199 போன்ற குறைந்த விலைகளில் வழங்குகிறது. ஆனால் இந்த ஆபர் முற்றிலும் முதலாம் ஆண்டிற்கு மட்டுமே.

அடுத்த அடுத்த ஆண்டுகளுக்கு நீங்கள் பிற இணையதளங்களில் கொடுக்கின்ற விலை போன்றே தான் GoDaddy யிலும் கொடுக்க வேண்டி இருக்கும். புதிதாக இணையதளம் ஆரம்பிக்க விருப்புபவர்கள் GoDaddy இன் இந்த ஆபரை பயன்படுத்திக்கொள்ளலாம். அடுத்த ஆண்டு அதிகப்படியான விலை இருப்பின் நீங்கள் Domain Transfer ஆப்சனை பயன்படுத்தி வேறு provider க்கு மாறிவிடலாம்.

https://in.godaddy.com/domains/domain-name-search

உபயோகப்படுத்துவதற்கு மிக எளிதாகவும் இருக்கும், பெரும்பாலும் site down போன்ற பிரச்சனைகள் ஏற்படாது.

 

2. BigRock India

இந்தியாவில் புகழ் பெற்ற மற்றும் நம்பர் 1 இணையதள முகவரி பதிவாளர் மற்றும் ஹோஸ்டிங் சேவை வழங்குவோர் பிக்ராக் இந்தியா நிறுவனத்தினர். 6 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களை கொண்டிருக்கிறது இந்த நிறுவனம்.

 

BigRock India பலவிதமான சலுகைகளை வழங்குகிறது ரூ 99 இல் ஆரம்பித்து ரூ 599 வரை இணையதள டொமைனை வாங்க முடியும். மேலும் ஹோஸ்டிங் சேவையை மாதம் ரூ59 இல் இருந்து இருக்கின்றது.

BigRock India : https://www.bigrock.in/domain-registration/

ஆபர் : https://www.bigrock.in/new-deals

3. Name Cheap

இந்த கம்பெனி இந்தியாவை பூர்விகமாக கொண்டதாக இல்லாமல் இருந்தாலும் பெரும்பாலான இந்தியர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. நீங்கள் சிறியதாக பிசினெஸ் செய்ய ஆரம்பித்து இருக்கிறீர்கள் என்றால் நிச்சயம் நீங்கள் உங்களுக்கான டொமைனை இங்கு வாங்கலாம்.

இவர்களிடம் மிக அதிக அளவிலான டொமைன் இருக்கிறது. இதனால் நீங்கள் உங்களது வியாபாரத்திற்கு ஏற்றவாறு டொமைனை தேர்ந்தெடுக்கலாம் .dating .shoe, .social, .holiday, .yoga, .science, .camera, .bike, .restaurant, .clothing etc

4. GlobeHost

GlobeHost கம்பெனியானது டொமைன் ரெஜிஸ்டர் மற்றும் ஹோஸ்டிங் சேவை இரண்டையுமே வழங்குகிறது. இதிலும் டொமைன் ஐ பொறுத்து விலை மாறுபடுகிறது. .in ரூ 499 க்கும் .com ரூ649 முதற்கொண்டும் விற்பனை செய்யப்படுகிறது.

இதோடு சேர்த்து ஹோஸ்டிங் செய்வதற்கான இடமும் மற்ற இணையதளங்களை விட சற்று குறைவான விலைக்கு கொடுக்கப்படுகிறது. மேலும் 24/7 சப்போர்ட் சேவை இதில் இருப்பதால் நீங்கள் எந்நேரமும் உங்களது பிரச்சனைகளை தீர்த்துக்கொள்ள முடியும்.

5. eWeb Guru

 

eWeb Guru முற்றிலும் Indian web hosting provider. மேலும் linux மற்றும் windows ஹோஸ்டிங் சேவையை வழங்குகிறார்கள். மற்ற இணையதளங்களை ஒப்பிடும்போது இங்கு ஹோஸ்டிங் மிக குறைவான விலைக்கு கொடுக்கிறார்கள். Linux ஹோஸ்டிங் ரூ 595/year க்கும் Windows ரூ 1395/year க்கும் வழங்கப்படுகிறது.

மற்ற இணையதளங்களை போலவே இங்கும் டொமைனுக்கு ஏற்றவாறு ரூ 199 லிருந்து விற்கப்படுகிறது .

Website: www.ewebguru.com

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *