தடம் மாறும் மீம்ஸ் பயன்பாடு ….கட்டுமர மீம்ஸ்கள் சரியா
நகைச்சுவையின் வாயிலாக சமூகத்தில் நடக்கும் குறைகளை சுட்டிக்காட்ட பயன்படுகின்ற இந்த கால நவீன ஆயுதம் தான் மீம்ஸ் ….(கார்டூன் படமாக செய்தித்தாள்களில் வரும் )
ஆனால் இன்று இந்த மீம்ஸ் சரியாக பயன்படுத்த படுகின்றதா என்றால் பெரும்பாலும் இல்லை என்றே சொல்லலாம் …
ஒரு நல்ல மீம்ஸ் யாரையும் நேரடியாக தாக்காமல் அவரது செயல்பாடுகளில் இருக்கும் குறைபாடுகளை சுட்டிக்காட்டுவதாகவே இருக்க வேண்டும் ..
எடுத்துக்காட்டாக கருணாநிதி உடல்நிலை தொடர்பாக இப்போது மீம்ஸ்கள் பரவி வருகின்றன ..அவரை கட்டுமரம் என்று விமர்சித்து அவர் இறப்பது தொடர்பாக மீம்ஸ்கள் பரவுகின்றன ….
இது சரியா ? கருணாநிதியின் குடும்ப அரசியலை பற்றி மீம்ஸ் போடலாம் , அவருடைய ஆட்சியில் ஊழல் நடந்திருந்தால் மீம்ஸ் போடலாம் ..அதை விட்டுவிட்டு அவரது வயோதிகத்தை வைத்தும் இறப்பு குறித்தும் மீம்ஸ் வெளியிடுவது தலைவர்களுக்கு நாம் செய்யும் சரியான மரியாதையா ?
ஊழல்களையும் குற்றங்களையும் தோலுரித்துக்காட்டும் மீம்ஸ்களே நல்லது ….