விளையாட்டு காட்டுகிறாரா ராகுல் ஜி ? காங்கிரஸ் கட்சிக்கும் பிஜேபி கட்சிக்கும் நல்ல புரிதல் இருக்கின்றதோ ? மக்கள் முட்டாள்களா ?

அண்மையில் பணம் மதிப்பிழப்பு செய்யபட்டது தொடர்பாக பிரதமர் விளக்கமளிக்குமாறு
கூறி எதிர்கட்சிகள் அமளி  செய்வதால்
மக்களவை தொடர்ந்து ஒத்திவைக்கப்படுகின்றது .

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் அவர்கள் செய்தியாளர்  சந்திப்பில் பிரதர் மோடி அவர்கள் மீதான தனிபட்ட ஊழல் குறித்து தனக்கு தெரியும் என்று அறிவித்தார் ….ஆனால் அதை மக்களவையில் மட்டுமே அறிவிப்பேன் என்றார் ….

ராகுலுக்கு எனது கேள்விகள் :

நடாளுமன்றத்தில் ஒரு பொருளின் மீது விவாதம் நடத்தப்பட வேண்டுமெனில் நிச்சயமாக அவைத்தலைவரிடம் முன்கூட்டியே அனுமதி பெற வேண்டும் …நீங்கள் அனுமதி கேட்டிர்களா ? அவர் மறுத்தாரா ?

நாடாளுமன்றத்தில் சொல்லவிடவில்லை என்றால் மக்கள் மன்றத்தில் அறிவிக்கலாமே ? ஏன் தயக்கம் ?

பிரதமர் குறித்த ஊழலுக்கு ஆதாரம் இருந்தால் முறையான அனுமதி பெற்று வழக்கு தொடரலாமே ?

நீங்கள் எதையும் செய்ய மாட்டிர்கள் …காங்கிரஸ் தலைவர்களும்  பிஜேபி தலைவர்களும் மாற்றி மாற்றி ஊழல் குற்றசாட்டுகளை சுமத்தி கொள்வீர்கள் ..ஆனால் வழக்கு போடும் அளவுக்கும் அது போகாது ….தண்டணை பெறுகின்ற அளவுக்கும் அது போகாது …

உங்கள் இருவருக்குமிடையில் நல்ல புரிதல் இருகின்றது என்று மக்களாகிய நாங்கள் ஏன் நினைக்க கூடாது ?

உண்மை இதுவாக கூட இருக்கலாம் …
.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *