500 1000 ரொக்கப்பணம் மதிப்பிழப்பு – இன்றைய நிலைமை என்ன ?
ரொக்கப்பணம் மதிப்பிழப்பால் உண்டான மக்களின் இடையூறுகள் அனைத்தும் 50 நாட்களுக்குள் தீர்ந்துவிடும் என்று பிரதமர் மக்களை பொறுமை காத்திட சொன்னார் ..
ஆனால் இன்று 60 நாட்களை கடந்து போய்க்கொண்டிருக்கின்ற வேளையில் உண்மையான நிலைமை எப்படியிருக்கிறது என்பதை பார்க்கலாம் .
இன்னும் சென்னை போன்ற நகரங்களில் மக்கள் கூட்டம் atm வாசல்களில் அலைமோதிக்கொண்டிருக்கின்றது .வைக்கப்படும் பணத்தின் அளவு குறைந்தும் எடுக்கக்கூடிய பணத்தின் அளவினை 2000 இருந்து 4000 ஆக உயர்த்தியதும் ஒரு சிலர் மட்டுமே பணமெடுக்கும் வாய்ப்பினை கொடுக்கின்றது .
நகரங்களின் நிலைமை இப்படி இருக்க கிராமங்களின் நிலைமையை நினைத்த கூட பார்க்க முடியாது .இருக்க கூடிய ஒரு வங்கியில் ஆயிரக்கணக்கான நூறுநாள் வேலை செய்யும் மக்கள் கூட்டம் பணமில்லாத atm ஐ நோக்கி நின்று கொண்டிருக்கின்றன ..இதோடு வங்கி பணப்பரிமாற்றம் செய்பவர்களும்
விவசாயிகளின் இறப்பிற்கும் இந்த ரொக்கப்பணம் மதிப்பிழப்பு திட்டம் காரணமென்று சொல்லப்படுகின்றது .ஆம் , கூட்டுறவு வங்கிகளின் பண பரிவர்த்தனையை மத்திய அரசு நிறுத்தி வைத்ததால் விவசாயிகளுக்கு கொடுக்கவேண்டிய கடன் கொடுக்கப்படவில்லை .விவசாயிகள் தங்கள் நகைகளை கூட அடமானம் வைத்து பணத்தினை பெற முடியவில்லை .இதனாலேயே விவசாயிகள் பயிரை காப்பாற்ற முடியாமல் இறந்துள்ளதாக தெரிகின்றது ..
சரி நினைத்ததை போன்றே கறுப்புப்பணம் ஒழிந்துவிட்டதா என்றால் , மத்திய அரசு வழக்கறிஞர் 3 லட்சம் கோடி கருப்பு பணம் வராது என்று எதிர்பார்க்கிறோம் என்று கூறியிருந்த நிலையில் அதையும் சேர்த்து 15 லட்சம் கோடிக்கும் மேலே வங்கிகணக்கில் கொண்டுவரப்பட்டுள்ளது …ஆக கருப்பு பணம் இனிமேல் தான் கண்டுபிடிக்க பட வேண்டும் .
தீவிரவாதத்தை ஒழிப்போம் என்ற அறிவிப்பில் , தீவிரவாதத்தை இதன் மூலமாக ஒழிக்க வாய்ப்பில்லை .அதேநேரத்தில் தீவிரவாத குழுக்கள் மக்களிடம் கள்ளப்பணத்தை அளித்து அரசுக்கெதிராக தூண்டிவிடுவது குறைந்திருப்பதாக அரசே தெரிவித்துள்ளது .
கருப்புப்பண முதலைகள் கண்டுபிக்கப்பட்டார்களா என்றால் , அரசும் வருமான வரித்துரையும் அதில் தோல்வியடைந்துள்ளது என்பதே உண்மை . கட்டுகட்டாக பணம் வங்கிகளுக்கு செல்லாமலே நேரடியாக கருப்பு பணம் பதுக்கியவர்களின் வீடுகளுக்கு சென்றது .இது இப்போது நடந்து வரும் சோதனையில் கட்டுகட்டாக புதிய 2000 நோட்டுகள் சிக்கின …இதிலிருந்தே இது தெரிகின்றது
இப்போதே இவ்வாறு பதுக்க முடிந்த இவர்களால் இன்னும் சில மாதங்களில் இப்படியெல்லாம் பதுக்குவார்கள் என்று நினைத்தாலே மலைக்கின்றது ….
மொத்தத்தில் பிரதமர் கொடுத்த வாக்குறுதிகளில் மக்கள் திருப்தி அடையவில்லை என்பதே உண்மை .
என்னதான் நமக்கு தொல்லைகளை இந்த ரொக்கப்பண ஒழிப்பு தந்திருந்தாலும் இப்போது செய்யாமல் போயிருந்தால் இனிமேல் எப்போதும் செய்திருக்க வாய்ப்பிருந்திருக்காது .
சிறந்த நடவெடிக்கையாக இருந்தாலும் போதிய திட்டமிடுதலோ அரசாங்க ஊழியர்கள் சிலரின் ஆசையினாலோ இந்த நடவடிக்கை மக்களிடம் திருப்தியை கொடுக்கவில்லை