எனது பாரம்பரியம் அடையாளம் இதை காப்பாற்றிக்கொள்ள முடியாத தேசத்தில் குடியரசு தினம் எப்படி உணர்வோடு கொண்டாட முடியும் ….

நமது நாட்டிற்கு வெள்ளைக்காரன் சுதந்திரம் அளிக்க முடிவு செய்தபோது இந்தியா என்ற நாடாக நாம் இருக்க வில்லை ..அப்போது வெறும் மாகாணங்களாக சமூகங்களாக இந்திய பகுதிகள் இருந்தன …சுதந்திரம் அடைந்தபிறகு பல கலாச்சார பண்பாடு மொழிகளை கொண்ட மாகாணங்கள் இணைக்கப்பட்டு வேற்றுமையில் ஒற்றுமைவாய்ந்த இந்திய தேசம் கட்டமைக்கப்பட்டது …

இந்த காரணத்தினால் தான் உலகமே நம்மைக்கண்டு வியக்கிறது .எப்படி இத்தனை வேறுபாடுகள் கொண்டிருந்ததாலும் ஒற்றுமையாக இருகிறார்கள் என்று . நமது ஒற்றுமைக்கு முக்கிய காரணம் அந்ததந்த மக்கள் அவர்கள் மொழியினை முன்னிறுத்தவும் அவர்களின் கலாச்சார பண்பாடுகளை பின்பற்றி நடந்திடவும் சுதந்திரம் அளிக்கப்பட்டது ..அதுவே உண்மையான சுதந்திரமும் கூட …

ஆனால் இந்தியா எப்படி உருவானது அதன் அடிப்படை ஆதாரம் என்ன என்பதை உணராததினாலோ அல்லது அதை ஒதுக்கி ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் ஒரே மொழி பண்பாடு கலாச்சாரம் கொண்டு வர நினைப்பதாலோ என்னவோ விரும்பத்தகாத நிகழ்வுகள் அண்மையில் நடந்துவருகின்றன ..

அது மொழி திணிப்பு ஆகட்டும்
பொது சிவில் சட்டமாகட்டும்
மக்களின் அடிப்படை உரிமைகளை பாதிக்காத பாரம்பரிய அடையாள நிகழ்வுகளை ஒடுக்கி அந்த சமூகத்தின் அடையாளத்தை மறைக்க முயலுவதாகட்டும் இவை அனைத்துமே இந்தியா உருவானபோது அந்ததந்த சமூகங்களுக்கும் மக்களுக்கும் கொடுக்கப்பட்ட வாக்குறுதியையும் நம்பிகையையும் குலைக்கும் செயல் .

ஆனால் இவை அனைத்தையும் தாண்டி இத்தனை ஆண்டுகளாகவும் இனிமேலும் எங்கள் உள்ளத்தில் இந்தியன் என்ற உணர்வு மேலோங்கி இருக்கும் ..ஆனால் எங்களால் சந்தோசமாக இருக்க முடியாது ..

எனக்கென்று உள்ள அடையாளத்தை அழிக்க நினைக்கும் இங்கே  நானெப்படி  சந்தோசமாக குடியரசு தினம் கொண்டாட முடியும் ….

இன்றும் தேசியகீதம் கேட்கும்போது உடல் புல்லரிக்கிறது எங்களுக்கு …ஆனால் உள்ளுக்குள் ஒரு வலியும் இருந்துகொண்டே இருகின்றது தனித்துவிடப்பட்டுவிட்டோமோ என்கிற வலி …

ஸ்ரீ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *