சப்பைக்கட்டு கட்டும் தேர்தல் ஆணையம் ….

டெல்லி முதல்வரும் ஆம்ஆத்மி கட்சி தலைவருமான கெஜ்ரிவால் ஓட்டுக்கு பாஜக காங்கிரஸ் கட்சிகள் பணம் கொடுத்தல் வாங்கிகொண்டு எங்களுக்கு ஓட்டு போடுங்கள் என்று கூறியிருந்தார் . ஒரு முதல்வரும் முக்கிய பேச்சாளருமான ஒருவர் சட்டத்தை மீறி தவறாக பேச கூடாதென்று கூறிய தேர்தல் ஆணையம் அவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளது ..

ஒருவர் இப்படி கூறியதும் சட்டப்படி வழக்கு பதிவு செய்ய சொன்னதை வரவேற்கிறோம் ..

வழக்கு பதிந்து என்ன செய்ய போகிறீர்கள் ….வழக்கம் போல கண்டிப்போடு விட்டு விடுவீர்கள் …

சரி …. இப்படியெல்லாம் கண்காணிக்கும் உங்களால் தேர்தல்களில் பணம் கொடுக்கப்படவில்லை என்பதை உறுதியாக உங்களால் சொல்ல முடியுமா ?

வாக்காளர்களுக்கு வெளிபடையாக பணம் கொடுப்பது தெரிந்தும் நீங்கள் நடவெடிக்கை எடுக்கவில்லையே ..

எத்தனயோ போலிஸையும் துணைராணுவ படையையும் பயன்படுத்திக்கூட உங்களால் நேர்மையான தேர்தலை நடத்திட முடியவில்லையே ? ஏன் ?

இதுவரை நடந்த தேர்தல்களில் எத்தனை வேட்பாளர்களின் மீது பணம் கொடுப்பதாக புகார்வந்து அதன் மீது நடவெடிக்கை எடுத்துள்ளீர்கள் ?

கொடுக்கபட்ட அதிகாரத்தை வெறுமனே வைத்துகொண்டு மக்களுக்கு பயன்படக்கூடிய  வகையில் ஒன்றும் செய்யாமல் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல்களை மட்டும் நடத்திக்கொடுக்க தன்னாட்சிகொண்ட தேர்தல் ஆணையம் தேவையா ?

தேர்தல் ஆணையம் ஒழுங்காக செயல்பாட்டாலே அரசியல்வாதிகளும் அரசியல்கட்சிகளும் ஒழுங்காக செயல்பட ஆரம்பித்துவிடுவார்கள் ….

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *