சசிகலா மீதான வெறுப்பில் தீபாவை ஆதரிப்பது அறிவார்ந்த செயலா ?
ஜெயலலிதா அவர்கள் இறந்தபிறகு கட்சியின் பொதுசெயலாளர் பதவியில் 30 ஆண்டுகளுக்குமேல் ஜெயலலிதாவுடன் இருந்தவர் என்கிற தகுதியுடன் சசிகலா வந்தமர்ந்தார் …
மேல்மட்ட தலைவர்களை சரிக்கட்ட முடிந்த சசிகலா தரப்பினால் அடிமட்ட தொண்டர்களை திருப்தி படுத்த முடியவில்லை ..
சசிகலாவிற்கு எதிர்ப்பினை காட்டுவதற்காக அதிமுக தொண்டர்கள் ஆதரவு கரம் நீட்டியது ஜெயலலிதாவின் அண்ணண் மகள் என்கிற ஒற்றை தகுதியை மட்டுமே வைத்துக்கொண்டிருக்கும் தீபா அவர்களை …
சசிகலாவிற்கு போதிய தகுதிகள் இல்லை கட்சியின் எந்த பதவியிலும் அவர் இருந்ததில்லை , குறிப்பாக ஜெயலலிதா உயிரோடிருக்கும் போது சசிகலாவிற்கு எந்த பதவியையும் தரவில்லை என காரணங்களை அடுக்கிவிட்டு மாற்றாக தீபா பக்கம் ஒதுங்கிய அதிமுக தொண்டர்கள் தீபாவின் தகுதியை பார்க்க மறந்துவிட்டார்கள் ..
தகுதியை வைத்து சசிகலாவை நிராகரித்து தீபாவை ஆதரிப்பது இன்னொரு தண்ணியில்லாத கிணற்றில் விழுவதற்கு சமமே ….
இத்தனை நாட்களாக பிரபலங்களின் பேருக்காகவும் முகத்திற்காகவும் வாக்களித்த தமிழக மக்களுக்கு ஜெயலலிதா எம்ஜியார் அவர்களின் இழப்பு , சுய சிந்தனையுடனும் அரசின் செயல்பாட்டை பார்த்து ஓட்டுப்போடும் வாய்ப்பையும் தமிழக மக்களுக்கு தந்துள்ளது …
இதனை பயன்படுத்தி அரசியலில் மக்கள் அதிகாரம் ஓங்கிட வேண்டும் ..