சசிக்கு மட்டுமா இன்று தீர்ப்பு ஜெயாவுக்கும்தான் ….
இன்று சொத்துகுவிப்பு மேல்முறையிட்டு மனு மீதான தீர்ப்பை வழங்குகின்றது உச்சநீதிமன்றம் . ஜெயலலிதா இறந்துவிட்டார் என்பதற்காக அவரது பெயர் இந்த தீர்ப்பில் இடம்பெறாமல் போக வாய்ப்புண்டு ..இது நடைமுறையே .
ஒருவேளை இந்த வழக்கின் இரண்டாவது குற்றவாளிக்கே தண்டணை வழங்கப்பட்டால் அதே அளவோ அல்லது அதைவிட அதிக தண்டனையோ முதன்மை குற்றவாளியான ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்டிருக்கும் என்பதனை யாராலும் மறுக்க முடியாது …
இந்த தீர்ப்பில் சசிகலாவுக்கு தண்டணை கிடைத்தால் , ஜெயலலிதாவிற்கு மத்திய அரசு விரும்பினால் கூட பாரத ரத்னா கொடுக்க எதிர்ப்பு கிளம்பும் ..
நிச்சயமாக நடுநிலையாளர்களின் மனதிலும் வரலாற்றிலும் இந்த குற்ற உணர்வு இடம்பெரும் …
இந்த வழக்கு சசிகலா அவர்களுக்கு மட்டுமல்ல ஜெயலலிதா அவர்களுக்கும் முக்கியமானதுதான் …