500 1000 ஒழிப்பு நடவடிக்கையில் மாறுகிறதா பிரதமரின் குரல் ….
500 மற்றும் 1000 ரூபாயை பிரதமர் செல்லாது என அறிவித்த போது அதற்கான காரணமாக அவர் கூறியது “கருப்பு பண ஒழிப்பு , கள்ள நோட்டு ஒழிப்பு , பதுக்கல் பணத்தை ஒழித்தல் ” போன்றவைகளைகளுக்காவே இந்த நடவடிக்கை என்று ….
முதலில் பொதுமக்களும் பெரும்பாலான அரசியல் தலைவர்களும் கூட வரவேற்பு தெரிவித்தனர் ..ஆனால் இன்று வரையில் மக்கள் பனத்திற்க்காக அலைந்தும் வங்கிகளின் முன்னால் காத்துக்கிடந்தும் வருகின்றனர் ….ஆனால் சில பணக்காரர்களும் தொழில் அதிபர்களும் மிகபெரிய கருப்பு பணத்தினை எளிமையாக மாற்றினர் ..
ஏழை மற்றும் நடுத்தர மக்கள் வங்கிகளின் முன்னால் காத்துக்கிடக்கும் போது கருப்பு பணத்தினை மற்றவர்கள் எளிமையாக மாற்றும் செய்திகளை கண்டும்
இதனை தடுக்க அரசாங்கம் எதுவும் செய்யாமல் இருந்ததும்
இன்னும் பண தட்டுபாடு குறையாமல் இருப்பது கண்டும் மக்கள் மத்தியில் பிரதமருக்கு எதிரான குரல்கள் மக்கள் மத்தியில் எழ தொடங்கின …
இதனை நன்றாக உணர்ந்துகொண்ட பிரதமர் கருப்பு பண ஒழிப்பு என்கின்ற தனது கருத்தினை மாற்றி இப்போது ” பண பரிவர்த்தனையை ஒழித்து கார்டு பரிவர்த்தனையை கொண்டுவர எண்ணுவதாக ” பேசிகொண்டு வருகின்றார் ..
மக்களிடம் எதிர்ப்பு வந்தால் உடனே குறிக்கோளை மாற்றுவது சரியல்ல …
ஒழித்தது ஒழித்ததாக இருக்கட்டும் அதற்காக உங்களது எண்ணங்களை மாற்றிக்கொண்டே போக வேண்டாம் …கருப்பு பணத்தினை மாற்றியவர்களை கண்டு அவர்களை களை எடுங்கள் …..