முக்கிய செய்தியை தீர்மானிப்பது மக்களா இல்லை செய்தித்துறையினரா ?

ஜெயலலிதா இறந்த பின்பு அனைவருக்கும் பிடித்ததோ பிடிக்கவில்லையோ சசிகலா அவர்கள் அந்த கட்சியின் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டார் ..அவர் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்பாக எதிர் கோஷ்டிகளும் பத்திரிகைகளும் சமூக வலைத்தளங்களும் எந்த  தகுதியும் இல்லாமல் வர போவதாக வரிந்து கட்டிகொண்டு பேசின …பேசியதில் தவறில்லை ஆனால் பேசி ஒரு மாற்றமும் நடக்க வாய்ப்பில்லாத நிலையில் வெறும் விற்பனைக்காகவும் எண்ணிக்கையை அதிகரிக்கவும் பேசிகொண்டேவா போவது ….

இன்றும் முதல் செய்தியாக போயஸ் கார்டனில் பேசுவதற்காக சசிகலா பயிற்சி எடுத்தார் என்று எழுதினார்களே தவிர ஜோதிமணி அவர்களை கீழ்த்தரமாக எழுதி ஒடுக்க நினைக்கிறார்களே அதற்கு முக்கியதுவம் தரவில்லையே …அது தான் ஆதங்கம் ..

பெண்ணுக்கு இழைக்கப்பட்டு இருக்கும் இந்த கொடுமையை பற்றி ஏன் யாரும் வாய் திறக்கவில்லை …சமீபத்தில் பாஜகவின் தொண்டரே பாஜக கட்சியின் தகவல் தொழிநுட்ப பிரிவுதான் காரணம் என்று கூறிய புத்தகம் வெளியானதே …இந்த புத்தகத்திற்கும் ஜோதிமணி விவகாரத்திற்கும் உள்ள தொடர்பை பெரிதாக்கவில்லையே ஏன் ?

எந்த செய்தியை அதிகம் படிக்கிறார்களோ அந்த செய்திக்கு முக்கியத்துவம் அளிப்பது விற்பனையை அதிகரிக்கும் …ஆனால் பத்திரிகைகள் அதற்கு மட்டும் முக்கியத்துவம் தருவது தர்மமல்ல …

மக்கள் முக்கிய செய்தியை தீர்மானிப்பதை விட பத்திரிகைகள் தான் முக்கிய செய்தியை மக்களிடம் திணிக்க வேண்டும் …

முக்கிய செய்திகளை செய்தி துறையினர் தான் நிர்ணயிக்க வேண்டும்

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *