மழை சொன்ன கதை!!!!
உனக்காக காத்திருந்தது உண்மைதான்
சாரல் மழையால் என் வாசல் நனைப்பாய் என்று
உனக்காக காத்திருந்தது உண்மைதான்
வீதியோடு போக வேண்டிய நீ
வீட்டிற்குள் வந்து அமர்வாய்
என கனவும் காணவில்லை
ரமணன் சொல்லியும் நம்பவில்லை
நீ வீட்டிற்குள் வரும் அளவிற்கு
பாசமழை பொலிவாய் என்று….
குளத்தில் பள்ளி கட்டினோம்
ஓடையில் கல்லூரி கட்டினோம்
ஆறை மறித்து அப்பார்ட்மெண்ட் கட்டினோம்
தட்டி கேட்டவனை அடித்தோம் பணமழையால்
வாயை மூடி சென்றான் – மனிதன்
பொறுத்தது போதும் என்று
இன்று இயற்கை அடிக்கின்றது அடைமழையால்
நீ கட்டின பள்ளியால்
நீ கட்டின கல்லூரியால்
நீ கட்டின அப்பார்ட்மெண்டால்
பாதிக்கப் பட்டவன்
பாமரன் தான்
நிரம்பும் தண்ணீரால் மூழ்குவது
உன் வீடல்ல
பள்ளியில் படிப்பதும் உன் பிள்ளையல்ல..
நனைவதும் என் வீடுதான்
மூழ்குவதும் என் பிள்ளைதான்
எத்தனை எத்தனை கொடை உள்ளங்கள்
இந்த சென்னையிலே….
இட்லி கடை வைத்திருப்பவன்
காலை வேலை உணவளித்தான்
கடை வைத்திருப்பவன் கொடை
அளித்தான் பால் பன் போன்றவைகளை
கல்லூரி மாணவனும்
கார்ப்பரேட் இளைஞனும்
மதிய உணவும் தண்ணீர் பாட்டிலும் தந்து உதவினான்..
எதுவுமே செய்ய முடியாத ஏழையும்
எத்தனையோ பேரை கரை சேர்த்தான்…
எதுவுமே செய்யாமல் எவனும் இல்லை…
நாம் தலை மேல் தூக்கி வைத்து
வருமானம் வாங்கி கொட்டி கொடுக்கும்
எந்த தலைவனும்
எனக்காகவும் வரவில்லை
உனக்காகவும் வரவில்லை
ஆமாம் கொடுத்தான்
நாம் யாருக்காக அள்ளி அள்ளி கொடுத்தோமோ
எவன் நமக்காக இருக்கிறேன் என்று பாட்டுக்கு பாட்டு கூறினானோ
அவன் கில்லி கொடுக்கின்றான்
எவன் எவனோ அள்ளி கொடுக்கும் போது
நான் தலைவன் என்றவன் கில்லி கொடுப்பதை
கண்டு நெஞ்சு பொறுக்கவில்லை…
கொடுப்பது அவன் இஷ்டம் என்று
அவனுக்காக வெற்று கோசம் போடும்
நம்மவர்களே இருக்கும்வரை
நான் கேட்பது நகைச்சுவையாக மட்டுமே இருக்கும்….
இயற்கை நடத்தி விட்டது என்று
அதன் மேல் பலி போட்டு போகும்
அரசியல் வாதிகளே
நாங்கள் என்ன செய்தோம்
எதற்காக இத்தனை கொடுமை என்று
ஒடுங்கி நிற்கும் பாமரன்களே
இது இயற்கை நமக்கு அளித்திருக்கும்
ஒரு முன்னெச்சரிக்கை மட்டுமே
இந்த மழை….
பொருத்தது போதும் என்று
அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்ற வேண்டிய பொறுப்பு
அரசுக்கு…
ஆக்கிரமிப்பு செய்த நிலங்களை விட்டு கொடுங்கள்
அடுத்த மழைக்கு உங்கள் பிள்ளைகளின் நிம்மதியான தூக்கத்திற்கு
***ஸ்ரீ***