பேங்க் வாசலில் 20 பேருக்கு பின்னால் நிற்கும் போது தோன்றிய கேள்விகள் …

மோடி அவர்கள் கியூவில் நிற்கும் ஏழை மக்களுக்கு என்ன பலனை தர போகின்றார் ….

கல்வியில் தனியாரை ஒழித்து  பள்ளி முதல் கல்லூரி வரை இலவச கல்வி அனைவருக்கும் கிடைக்க போகிறதா ?

அனைத்து மக்களுக்கும்  இலவச மருத்துவ வசதி இன்சூரன்ஸ் செய்யாமலே கிடைக்க போகிறதா ?

அனைத்து விவசாயிகளுக்கும் அரசே வட்டியில்லா முன்பணம் தந்து கடனால் விவசாயி சாவதை தடுக்க போகிறதா ?

உணவு பாதுகாப்பு சட்டம் உள்ளபோதும் உணவின்றி தவிப்பது சாவது நின்று  போகுமா ?

அரசு போடும்  வரிகளை ரத்து செய்து  பெட்ரோல் டீசல் விலை குறைத்து  விற்கப்படுமா ?

இனிமேல் அரசு வழங்கும் மானியம் எதுவும் குறைக்கப்படவே மாட்டாதா ?

வெளிவந்த அனைத்து பணமும் இனிமேல் எந்த அம்பானி வீட்டு அடியிலும் உறங்காமல் ஏழையின் ஜன்னலில் சுற்றி வருமா ?

இதுல ஒண்ணு நடந்தா கூட வரிசையில் நிற்பதை சந்தோசமாக ஏற்று நிற்பேன் ….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *