நீதிமன்றம் உத்தரவிட்டால்தான் ஐயப்பன் கோவிலுக்குள் பெண்களை உள்ளே விடுவோம் என்றால் நாமாக எப்போது திருந்த போகின்றோம் ….
கேரள அமைச்சர் ஒருவர் மீண்டும் சபரிமலை கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்க முடியாது என்று கூறியுள்ளார் …ஆயிரம் ஆண்டு பாரம்பரியத்தை விட்டுவிட முடியாதாம் …
திருப்தி தேசாய் அடுத்த மாதத்தில் 100 பெண்களுடன் நுழைய போவதாக அறிவித்ததையடுத்து இவ்வாறு அமைச்சர் கூறியுள்ளார் …மேலும் வழக்கில் உச்சநீதிமன்றம் என்ன உத்தரவிடுகிறதோ அதை பொறுத்து முடிவு எடுக்கப்படும் என்றார் …
ஒவ்வொரு முறையும் பெண்களுக்கோ அல்லது தாழ்த்தப்பட்டவர்களுக்கோ குறிப்பிட்ட உரிமையை நீதிமன்றமே பெற்று தருகின்றது ..இந்த சமூகம் தானாக வந்து எந்த உரிமையையும் வழங்குவதில்லை …இவ்வளவு படிப்பறிவும் பகுத்தறிவும் பெற்றுவிட்ட போதிலும் இன்னும் நீதிமன்றம் மூலமாக மட்டுமே உரிமைகளை பெறுவது என்பது நம் சமூகம் இன்னும் பின்னிய கருத்துக்களில் பாரம்பரியம் என்கிற பெயரில் புதைந்துள்ளது என்று தானே அர்த்தம் …
எப்போது மாற போகின்றோம் ?