தேர்தலில் நிற்பதற்கு கல்வி தகுதி அவசியமா???

செய்தி  : ஹரியானா  மாநிலத்தில்  பஞ்சாயத்  ராஜ்  தேர்தலில்  நிற்பதற்கு  கல்வி  தகுதி  அவசியம்  என்றும்  மேலும்  கழிப்பறை  கண்டிப்பாக  இருக்க  வேண்டும்  என்பது  கட்டாயம்  என்று  அரசு  சட்டம்  இயற்றி  உள்ளது …

ஒரு பாமரனின் நிலையில் இருந்து ஒரு பார்வை…..

இந்திய  அரசியலமைப்பு  சட்டம்  ஒவ்வொரு  குடிமகனுக்கும்  அடிப்படை  உரிமைகளை  வழங்கி  உள்ளது …அதன்படி இந்திய  குடிமகனாக  பிறந்த  ஒவ்வொருவரும்  தேர்தலில்  நிற்பதற்கும் வாக்களிப்பதற்கும் உரிமையினை வழங்கி உள்ளது.

இந்த சட்டத்தில்  பொது  பிரிவினருக்கு  ஒரு  கல்வி  தகுதியும் பெண்களுக்கு  ஒரு  கல்வித்தகுதியும் பிற்படுத்தபட்டவர்களுக்கு ஒரு  கல்வி தகுதியும் கொடுக்கபட்டுள்ளது ….அது  ஏன்? கல்வி  தகுதி  வேண்டுமென்று நினைத்தால் அனைவருக்கும் சமமான  கல்வி  தகுதியை  கொண்டு  வந்திருக்கலாமே???
எப்படி  10ம்  வகுப்பு  பயின்ற  ஒரு  பொது  பிரிவினருக்கு  உள்ள  அறிவை  5ம்  வகுப்பு  பயின்ற  பெண்களாலோ பிற  சமூகத்தை  சேர்ந்தவர்களோ  எப்படி பெற முடியும்.கல்வி என்பது அனைவர்க்கும் சமம் தானே ..நீங்கள்  மக்களை  உயர்ந்த  தாழ்ந்த  ஜாதி  என்று  பிரித்தாலும் கொள்கையை  எப்போது விட போகின்றீர்கள்..

பஞ்சாயத்  ராஜ்  தேர்தலுக்கே  10ம்  வகுப்பு  கல்வி தகுதி  வைத்திருக்கும்  நீங்கள்  MLA  தேர்தலுக்கும்   MP  தேர்தலுக்கும் குறிப்பாக  முதல்வர்களுக்கும்  பிரதமர்களுக்கும்  எந்த  அளவுக்கு கல்வி  தகுதி  வைக்க  போகிறீர்கள்? அவர்கள்  இயற்றும்  சட்டத்தையும்  அவர்கள்  ஒதுக்கும்  நிதியையும்  வைத்து  தானே  இவர்கள்  நிர்வாகம்  செய்வார்கள் ? இது  முதல்  கோணல்  முற்றிலும்  கோணல்  என்பதாகிவிடாதா?? …

நம்  தேசத்தில்  அனைவர்க்கும்  பொதுவான  அரசியல்  அமைப்பு  சட்டம்  பின்பற்றபட்டு  வருகின்றது …அப்படி  இருக்கையில் 100% கல்வியறிவு  பெறாத  ஒரு  மாநிலத்திற்கு  எப்படி  இந்த  சட்டம்  பொருந்தும்?

கழிப்பறை கட்டாயமென்றால் கட்டி  கொள்ளலாம்  கல்வி  தகுதி  வேண்டும் என்றால் 50 வயது  அடைந்த  ஒருவர்  எப்படி  கல்வி  தகுதி  பெறுவது ….உதாரணத்திற்கு ஒரு  சில  கிராமங்களில்  படிப்பறிவு  இல்லாத பெரியவர்கள்  சிறப்பாக   நிர்வாகம்  செய்திருப்பார்கள் …அவர்களுக்கு  இது  ஒரு  தடையாக  அமையாதா?

நீங்கள்  கேட்கலாம்  அப்படியென்றால்  இந்த  சட்டம்  தவறா …எப்பொழுதுதான் இந்த  சட்டத்தை  கொண்டு  வருவது  என்று ….

என்  தேசத்தில்  என்னை  தேர்தலில் நிற்க  கூடாது  என்று  சொல்ல யாருக்கும் உரிமை இல்லை.அனைவர்க்கும்  கல்வி  அளிக்க  வேண்டிய   அரசாங்கமோ  அனைவர்க்கும்  கல்வி  அளிக்க  தவறி  விட்டது  …. அதன்  கடமையை  செய்ய  தவறிய  அதே  அரசு  இப்பொழுது  பாமரனை  தேர்தலில்  நிற்க  கூடாது  என்று  சொல்லுவது  என்ன  நியாயம் …

இந்த  காலகட்டத்தில்  கல்வி  தகுதி  அவசியமான ஒன்றுதான்  …அதை மறுபதற்கு  இல்லை …ஆனால் எப்பொழுது  உங்களால்  அனைவர்க்கும்  கல்வியறிவு  கொடுக்க  முடிகின்றதோ  அப்பொழுது  இந்த  சட்டத்தை  கொண்டு  வந்தால்  வரவேற்கின்றோம் ….

முதலில் அனைவரும் கல்வி கற்பதற்கு வழி செய்யுங்கள்

முடிவாக  எந்த அறிவார்ந்த  மக்கள்  உங்களை  தேர்ந்தெடுத்து  இந்த  சட்டத்தை  இயற்ற  உதவினார்களோ  அந்த  அறிவார்ந்த  சமுதாயம்  தானே  பஞ்சாயத்து தேர்தலிலும் வாக்களிக்க  போகின்றது ….மக்கள் படித்தவர்கள்தான் தங்களை ஆள வேண்டும் என்று நினைத்தால் அவர்கள்  வாக்களிக்காமல்  போகட்டுமே …மக்கள்  உண்மையாகவே  கல்வியை  காரணம் காட்டி அவர்களை நிராகரித்தால் அடுத்த  தேர்தலில் படிக்காத பாமரன் நிற்க மாட்டான்.

மாறாக அந்த தேர்தலில் மக்கள் படிக்காத பாமரனை தேர்ந்து எடுத்தால் படித்த வேட்பாளர்கள் அடுத்த தேர்தலில் நிற்பதற்கு உங்களால் தடை கொண்டு வர முடியுமா??

உங்கள் கருத்துகளை கீழே உள்ள கமெண்ட் இல் தெரிவிக்கவும்…

நன்றி

***ஸ்ரீ***

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *