தமிழகத்திற்கு வந்த சோதனையா ? என்ன செய்ய போகிறார் ஆளுநர்? சட்டம் என்ன சொல்கிறது.
பன்னிர்செல்வம் அவர்களின் ராஜினாமாவை ஆளுநர் என்ன செய்வார் ?
பன்னிர்செல்வம் அவர்களின் ராஜினாமாவை ஆளுநர் ஏற்றுகொண்டாகிவிட்டது. ஒரு அரசு ஊழியரின் ராஜினாமா கடிதம் ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்பு அதனை திரும்ப பெரும் உரிமை அந்த அரசு ஊழியருக்கு இல்லை என நீதிமன்றம் தெளிவுபடுத்தி உள்ளது. எனவே பன்னிர்செல்வம் அவர்கள் ராஜினாமா கடிதத்தை திரும்ப பெறுவதில் சட்ட சிக்கல் உள்ளது.
இருந்தாலும் தன்னை கட்டாயப்படுத்தி தான் ராஜினாமா செய்ய வைத்தார்கள் என்று ஆளுநரிடம் முறையிடும்போது அவர் அதன் உண்மை தன்மையை ஆளுநர் ஆராய்ந்து சட்டமன்றத்தில் உங்கள் பலத்தை நிரூபியுங்கள் என்று வாய்ப்பு வழங்கலாம்.
சசிகலா முதல்வராக ஆவதை ஆளுநர் தடுக்க முடியுமா ?
சட்டமன்ற குழு தலைவராக எவர் ஒருவர் தேர்தெடுக்கப்பட்டாலும் அவரை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டியது ஆளுநரின் கடமை. இதனை ஆளுநரால் தள்ளிப்போட முடியாது.
அதே நேரத்தில் இப்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சசிகலா அவர்களுக்கு சொத்துகுவிப்பு வழக்கில் வழங்கப்பட்டுள்ள 4 ஆண்டு தண்டனை தடைக்கு எதிரான வழக்கில் வருகிற வாரத்தில் தீர்ப்பு வழங்கப்படும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளதால் சசிகலாவை ஆட்சி அமைக்க அழைப்பது அரசின் நிலைத்தன்மைக்கு உகந்ததாக இருக்காது என்று கருதி தீர்ப்பு வரும் வரை ஆளுநர் காத்திருக்கலாம் எனவும் கூறப்படுகின்றது.
இந்த விஷயத்தில் இருவேறு கருத்துக்கள் நிலவுகின்றன. சிலர் சட்டமன்ற குழு தலைவராக தேர்ந்தெடுக்க பட்டவரை முதலமைச்சராக பதவி பிரமாணம் செய்துவைப்பதை ஆளுநர் தள்ளிவைப்பது தவறு என்றும் சிலர் அரசு இயந்திரத்தின் நிலை தன்மையை உறுதிசெய்யவேண்டி ஆளுநர் சிறிது காலம் தாழ்த்தலாம் என்றும் கூறப்படுகின்றது.
[சசிகலா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்புக்காக ஆளுநர் காத்திருப்பதில் தவறில்லை: சோலி சொரப்ஜி முன்னாள் அட்டார்னி ஜெனரல்]
[சசிகலா முதல்வராக பதவியேற்பதை தள்ளிப்போடுவது சட்டப்படி குற்றம் : சுப்ரமணிய சுவாமி உள்ளிட்ட சிலர்]
பன்னிர்செல்வமா ? சசிகலாவா ?
ஒருவேளை பன்னிர்செல்வம் அவர்களின் ராஜினாமாவை ஆளுநர் திருப்பி அளித்தால் , பன்னிர் செல்வம் அவர்களையும் சசிகலா அவர்களையும் சட்டமன்றத்தை கூட்டி அவர்களது பலத்தை நிரூபிக்க சொல்லுவார். அப்போது 117க்கும் மேற்பட்ட உறுப்பினர்களின் ஆதரவு பெற்றவர்களை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பார் .
எல்லாவற்றிற்கும் முன்னோடியாக இருந்த தமிழகம் இதிலும் முன்னோடியாக இருப்பது சற்று வருத்தமே..
மக்கள் வவிரும்பும் நிலையான அரசு அமைவதே மக்களுக்கும் ஜனநாயகத்திற்கும் நல்லது.