காஷ்மீரும் பெல்லட் துப்பாக்கிகளும்….கவனிக்கப்பட வேண்டிய செய்தி…….

உலகின் சொர்க்கம் என்று அழைக்கப்படும் காஷ்மீர் இந்தியா பாகிஸ்தான் பிரிவினைக்கு பிறகு பெயரளவில் மட்டுமே சொர்க்க பூமியாக இருக்கின்றது. ஆம் நாள் தோறும் ஒரு பிரச்னை, கொலைகள், ஊடுருவல்கள் , தீவிரவாத சதிகள், போராட்டம், ராணுவ நடவெடிக்கைகள் என எப்போதும் ஒருவித பதற்றத்துடனையே காணப்படுகின்றது.இதற்கு முக்கிய காரணமாக காஷ்மீர் யாருக்கு சொந்தம் என்ற பிரச்சனையே என்று கூறலாம்.

2010 இல் நடந்த துப்பாக்கி சூட்டில் 112 பேர் கொல்லப்பட்டனர். எனவே இது போன்ற உயிரிழப்புகள் ஏற்பட கூடாதென்று அன்று ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசு பெல்லட் குண்டுகளை அறிமுகப்படுத்தியது. இது அபாயமற்றது எனத் தெரிவித்தது. போராட்டத்தில் பொதுமக்கள் பலியாவதைத் தடுக்க இத்தகைய பெல்லட் குண்டுகளைப் பயன்படுத்துவதாக தெரிவித்தது.

கூட்டத்தைக் கலைப்பத்தற்காக பயன்படுத்தப்படும் அபாயம் அல்லாத ஆயுதப் பட்டியலில் உள்ள ஒருவகை உபகரணம். உலகம் முழுவதும் இத்துப்பாக்கி பரவலாக பயன்படுத்தப்படுகிறது. இதுதவிர வேட்டைக்காகவும், பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதற்காகவும் இவ்வகை துப்பாக்கிகள் பயன்படுத்தப்படுகின்றன.

ஆனால்  இன்று இந்த துப்பாக்கியால் காயமடைந்தவர்களின்  எண்ணிக்கை பலநூறு மடங்காக அதிகரித்துள்ளது.இதனிடையே பெல்லட் துப்பாக்கிகளின் பயன்பாடு குறித்து மறுபரிசீலனை செய்யப்படும் என்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கூறியிருப்பது சற்று ஆறுதலான விஷயம்.

பெல்லட் துப்பாக்கிகளின் பயன்பாட்டினால் மக்கள் எப்படி பாதிப்படைந்து இருப்பார்கள் என்று பாகிஸ்தானின் வழக்கறிஞர் ஒருவர் இந்திய பிரபலங்களின் போட்டோவை மார்பிங் செய்து வெளியிட்டுள்ளார். அந்த பிரபலங்களின் அழகு முகங்கள் பெல்லட் துப்பாக்கிகள் தாக்குதலில் எப்படி சிதிலமடைந்து காணப்படுகின்றது என்று சமூகத்திற்கு வெளிச்சம் போட்டு  காட்டியுள்ளார். அவர் பாகிஸ்தான்  என்பதாலேயே இதை தவறாக எண்ணாமல் பாதிப்படைந்த மக்களின் நிலையை உணர்ந்து பெல்லட் துப்பாக்கிகளை தடை செய்து அந்த மக்களுக்கு உரிய நிவாரணம் அளித்து உதவிட வேண்டும் .

போராட்டம் மக்களின் உரிமை..அது தான் ஜனநாயகத்தின் வலிமை. அதை ஒடுக்க துப்பாக்கிகள் தேவை இல்லை …முடிவுகள் தான் தேவை…

வாழ்க இந்தியா…

ஸ்ரீ

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *