ஊழலை மறைக்க பத்திரிகையாளர்களுக்கு 50 கோடி லஞ்சமா ?இந்த துறையும் போச்சா

முக்கிய பிரமுகர்கள் சென்றுவர ஹெலிகாப்டர் வாங்க  அகஸ்டா வெஸ்ட்லாண்ட் நிறுவனத்துடன் போடப்பட்ட ஒப்பந்தத்தில் 360 கோடிக்கு ஊழல் நடந்தது தெரிந்துபோனதால் இந்த திட்டம் கைவிடப்பட்டு விசாரனைக்கு போனது .

நேற்று இந்த வழக்கு தொடர்பாக ஒரு பத்திரிக்கையாளர் அளித்த மனுவில் இந்த ஊழலில் பத்திரிக்கை துறையினருக்கு மட்டும் 50 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார் ..ஆகவே  இந்த ஊழலில் பத்திரிகையாளர்களுக்கு உள்ள தொடர்பு குறித்து விசாரணை நடத்தி அறிக்கை அளிக்குமாறு நீதிமன்றம் தெரிவித்துள்ளது ..இது மக்களிடையே பெரிய குழப்பத்தையும் பத்திரிகைகளின் மீதான நம்பிக்கையை குறைப்பதாகவும் உள்ளது ….

பத்திரிகையாளர்களும் இப்படி செய்தால் யார் தான் மக்களுக்கு உண்மையினை கொண்டு சேர்ப்பது ….
பத்திரிக்கை சுதந்திரம் இருக்கும் நாட்டில் குற்றங்கள் குறையும் .மக்கள் விழிப்புணர்வுடன் அனைத்து விஷயங்களிலும் உண்மையினை அறிந்தவர்களாக இருப்பார்கள் ..

பத்திரிகையாளர்களின் கடமை உண்மையினை மக்களிடம் கொண்டு சேர்ப்பது ….அரசாங்கம் ஒரு திட்டத்தினை அறிவிக்கும் போது அது பற்றிய எதிர்கால பயனை கணித்து சொல்ல கூடிய பொறுப்பு பத்திரிக்கைக்கு இருக்கின்றது.
ஆனால் அவர்களே லஞ்சம் பெற்றுகொண்டு மக்களிடம் பொய்யான தகவல்களை கொண்டு சேர்த்தால் ? அப்படி செய்து ஒரு திட்டத்திற்கு ஆதரவினை மக்களிடம் பெற நினைத்தால் …

இப்படி நடக்குமா என்று நினைக்காதீர்கள் …நடந்தே விட்டது …அதுவும் நம் நாட்டில் …

ஏற்கனவே அரசியல் கட்சிகளும் தொழில் அதிபர்களும் பத்திரிகை டிவி தொடங்கி தங்களுக்கு ஆதரவான செய்திகளை போட்டு வரும் நிலையில் மக்கள் நடுத்தரமான பத்திரிக்கை என்று நம்ப கூடிய மற்றவையும் ஊழலில் இணைந்துவிட்டால் யார் உண்மையை கொண்டு சேர்ப்பது ..

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *