இந்தியாவில் நீதிபதிகளின் எண்ணிகை பற்றாக்குறை ? எதற்காக இத்தனை தாமதம் ?
முன்னால் உச்சநீதிமன்ற தலைமை
நீதிபதி கூறிச்சென்ற அதே நீதிபதிகளின் பற்றாக்குறையினை தற்போது பொறுப்பேற்று இருக்க கூடிய தலைமை நீதிபதியும் தெரிவித்துள்ளார் .மேலும் இந்த பற்றாக்குறையினால் அன்றாட அலுவல்களை செய்யவே கடினமாக இருப்பதாக தெரிவித்துள்ளார் .
கொலிஜியம் முறையில் பனிப்போர் போல முட்டிக்கொண்டிருக்கும் மத்திய அரசு கொலிஜியம் முறைப்படி பரிந்துரைக்கப்பட்ட நீதிபதிகளுக்கு நியமனம் வழங்காமல் இழுத்தடித்து வருகின்றது .
உச்சநீதிமன்றம் தொடங்கி நாட்டின் அனைத்து நிலைகளிலுமுள்ள நீதிமன்றங்களில் நீதிபதிகள் பற்றாக்குறை இருந்துவருகின்றது . இதனால் வழக்குகளை முடித்துவைப்பதில் கால தாமதம் ஏற்படுகின்றது .
உதாரணத்திற்கு ஜெயலலிதா அவர்களின் சொத்துகுவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் அவர் இறந்தபின்னும் கூட தீர்ப்பு வழங்கப்படவில்லை .காரணம் பணிச்சுமை .
இந்தியாவில் வேலைவாய்ப்பு அதிகரிக்கவில்லை அதிகரிக்கவில்லை என்று சொல்லிகொண்டு அழைக்கிறோமே தவிர எந்த துறையிலாவது முழு அளவில் ஏன் 90 சதவீத அளவிலாவது பணியாளர்கள் இருக்கிறார்களா ?
மற்ற அனைத்து துறைகளையும்விட நீதித்துறை மிக முக்கியமானது .அதற்காவது உடனடியாக நீதிபதிகளை மத்திய அரசு நியமிக்க வேண்டும் ..
செய்யுமா ?