அதிமுகவிற்கு மீண்டும் வந்த சோதனை …தலைவர் பதவிக்கு யார் வந்தாலும் இழப்பு நிச்சயம் …எப்படி ? சமாளிக்க என்ன வழி …

எம்ஜியார் அவர்கள் இறந்த பொழுது அதிமுகவிற்குள் நிலவிய அசாதாரணமான சூழல் இப்போது ஜெயலலிதா அவர்கள் இறந்தபோதும் ஏற்பட்டுள்ளது ….

அப்போது எம்ஜியாரின் துணைவியார் ஜானகி அம்மாவிற்கும் கட்சியின் கொள்கைப்பரப்பு செயலாளராக இருந்த ஜெயலலிதாவுக்கும் இடையில் தான் போட்டி நிலவியது ..
ஆனால் இப்போது நிலவும் போட்டி ஜெயலலிதாவின் தோழி சசிகலாவிற்கும் தேர்தல் வைத்து அடுத்த தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்கிற கூட்டத்திற்கும் தான் …இதையும் தாண்டி ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபாவும் போட்டியிட விரும்புவதாக தெரிகின்றது ….
எம்ஜியார் இறந்த போது போட்டி போட்டவர்கள் முக்கியமானவர்கள் ஜனாகி – மனைவி
ஜெயலலிதா – செயலாளர் , எம்ஜியாரால் அரசியலுக்குள் வந்தவர்
ஆனால் இப்போது நடப்பது
தோழி என்கிற அடையாளத்துடன் இருக்கும் சசிகலாவிற்கும் , இப்போது வரை யாரென்று தெரியாத ஒருவருக்கும் , அண்ணன் மகள் தீபாவிற்கும் …
அப்போது நடந்த போட்டி தேர்தல் வரை சென்றது …அதே போன்று இப்போதும் இந்த போட்டி தேர்தலுக்கு இட்டு செல்லுமா ?
எதுவானாலும் பிரச்சனையே :
அப்போது நடந்த போட்டியில் வென்ற ஜெயலலிதாவிற்கு ஒரு கட்சியையும் அரசையும் நடத்த கூடிய திறமை இருந்தது …ஆனால் இப்போது போட்டியில் இருக்க கூடிய சசிகலா
குறைந்தபட்சம் ஜெயலலிதா போன்று ஒரு மேடையில் ஏறி பேசுவாரா என்பது சந்தேகமே ?
சசிகலாவை தவிர வேறொருவர் தேர்ந்தெடுக்கப்பட்டால் கட்சியை உடையாமலும் வெற்றியுடனும் நடத்தும் திறமை அவரிடம் இருக்குமா ?
அண்ணண் மகள் என்ற ரத்த சொந்தம் இருப்பதாலேயே ஒருவரால் ஜெயலலிதாவை போன்று இயங்கிட முடியுமா ? ஒருவேளை தமிழக மக்கள் ரத்த சொந்தத்தை அங்கீகரித்தாலும் கட்சியில் இவ்வளவு காலம் உழைத்த கட்சியினர் ஒப்புக்கொள்வார்களா ?
இத்தனையையும் தாண்டி என்ன நடக்க போகின்றது ….எது நடந்தாலும் அதிமுகவிற்கு இது கஷ்ட காலமே …
அதிமுகவிற்கு மீண்டும் வந்த சோதனை …தலைவர் பதவிக்கு யார் வந்தாலும் இழப்பு நிச்சயம் …இதனை சமாளிக்க ஒரேவழி  உட்கட்சி தேர்தலை நடத்தி தேர்ந்தெடுக்கப்படும் தலைவருக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் ….நடக்குமா ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *