அடுத்தடுத்த பாலியல் வன்முறைகள் ?உண்மையில் இந்த சமூகத்திற்கு என்ன தான் ஆச்சு ? என்ன தீர்வு ?
தினந்தோறும் பாலியல் செய்திகளை கண்டு கண்டு இப்போதெல்லாம் அது ஒரு சாதாரணமான நிகழ்வாக மக்களிடேயே போய்விட்டது . உண்மையில் இப்போது தான் பாலியல் வன்முறை நடக்கிறதா என்றால் பல காலமாகவே நடந்துவருகின்றது என்பதே உண்மை .
ஆனால் தொழிநுட்ப வசதிகளும் பெண்களுக்கு வந்துள்ள தைரியமான மனப்பான்மையும் தங்களுக்கு நடந்தது வேறு யாருக்கும் நடக்க கூடாது என்கிற எண்ணமும் இன்று பெரும்பலான குற்றங்களை சமூகத்தின் பார்வைக்கு கொண்டுவருகின்றன .
பொதுவாக பெண்களே இதில் பாதிக்கப்படுகின்றனர் …இதற்கு அவர்களது உடை பாவனைகளை காரணமாக சொல்லி தப்பிக்க நினைத்தாலும் ஒருவரது விருப்பமின்றி அவரை தொடுவதே குற்றம் தான் .ஆக எத்தனை காரணங்களை கூறினாலும் குற்றம் குற்றமே …
ஆனால் அதற்காக அப்படியே விட்டுவிடாமல் ஏன் இப்படி நடக்கின்றது என்பதை நாம் ஆராய்ந்தால் மட்டுமே சமூகத்தை மாற்றிட முடியும்
காரணம்தான் என்ன ?
சாதரணமாக ஒரு பெண்ணுக்கோ ஆணுக்கோ பருவ மாற்றங்கள் 13 வயதுமுதல் ஆரம்பிக்கும் ..அதன்பிறகு சில சில கலாய்ப்புகள் முதல் காதல் அனைத்தும் ஏற்படும் .அது அந்த வயதின் இயல்பு ..ஆனால் அதில் அதற்கு மேல் பெரும்பாலும் அந்த இளம் தலைமுறையினருக்கு தெரியாது …
மேலும் இயற்கை உணவு முறைகளை பின்பற்றும்போது கார்மோன் அளவும் கட்டுக்கோப்பாக இருக்கும் .அளவுக்கதிகமான உணர்வுகள் ஏற்படுவதில்லை .
ஆனால் இன்று சிறுவயதினரே இணையம் பயன்படுதின்றனர் .பதின்ம வயதில் தெரிந்துகொள்ளவேண்டியதை சிறுவயதிலே தெரிந்துகொள்கின்றனர் .அதோடு சேர்த்து இப்போது கடைபிடிக்கின்ற உணவு முறையால் கன்னாபின்னாவென்று உருவாகும் கார்மோன்களும் சேர்ந்து சில செயல்களை அவர்களை செய்ய தூண்டுகின்றது ..
இப்படியே போய்க்கொண்டிருக்கும் சிலரின் வாழ்கையில் பெண்கள் அதற்கான சூழ்நிலையில் மாட்டும்போது சுய உணர்வினை இழந்து மிருகமாகி அந்த கொடுமையை செய்யவும் துணிகின்றனர் …
தடுப்பது எப்படி :
உணவு முறைகளும் தொழில் நுட்ப வசதிகளும் பெருகிவிட்ட இந்த நிலையில் இவற்றை கட்டுப்படுத்துவது கடினம் .
ஆகவே நாம் பாலியல் கல்வியினை 13 வயதுக்கு முன்பாகவே கற்றுக்கொடுக்க வேண்டும் . உங்களுக்கு இந்த மாதிரியான உணர்வுகள் தான் இந்த வயதில் வரும் ..அப்போது இப்படிதான் நடந்துகொண்டு கட்டுப்பாடாக நடந்துகொள்ளவேண்டும் போன்றவைகளை சொல்லித்தரவேண்டும் ..
இன்னும் விலங்கியல் புத்தகத்தில் அந்தப்பக்கத்தினை நீங்களே படித்துக்கொள்ளுங்கள் என்று கூறிக்கொண்டே இருந்தால் இந்த சமூகத்தை திருத்த முடியாது ….
விழிப்புணர்வு அவசியம் ….