அடிக்கடி வந்துபோகும் 144….

அடிக்கடி வந்துபோகும் 144….

முன்பெல்லாம் 144 தடை உத்தரவு ஒரு இடத்தில் போடப்படுகிறது என்றால் அங்கு மிகபெரிய கலவரம் அதனை தொடர்ந்து உயிர்பலிகளும் நடந்திருக்கும் …எந்நேரமும் அடுத்த கலவரம் வெடிக்கலாம் என்ற நிலையில் மட்டுமே 144 போடப்படும் ….

ஆனால் இன்றோ கஷ்மீரில் கலவரம் என்றாலும் இங்கே சிறு கிராமத்தில் சாதி பிரச்சனை என்றாலும் தலைவர்களின் நினைவு நாள் என்றாலும் தலைவர்கள் இறந்த ஊர்வலம் என்றாலும் மிக எளிதாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கிறார்கள் …

ஒரு காலத்தில் 144 என்றாலே பயந்த மக்கள் இன்று 144 தானே என்கிற தொனியில் பேசுகிறார்கள் ..

எதற்கெடுத்தாலும் 144 போட்டுத்தான் சட்டம் ஒழுங்கை காப்பற்ற வேண்டிய நிலையில் தான் காவல் துறை இயங்கி வருகிறதா ?

மாவட்ட ஆட்சி தலைவர்கள் ஒரு சராசரி மனிதனின் வாழ்க்கை 144 தடை உத்தரவினால் பாதிக்கப்படும் என்று தெரியாமலா இருக்கிறார்கள் ….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *