நாம் செல்லும் பாதை சரியானதா??
நாம் செல்லும் பாதை சரியானதா??
அண்மையில் டெல்லி JNU [ஜவகர்லால் நேரு ] பல்கலைக்கழகத்தில் நடந்து வரும் போராட்டம் நாட்டின் இறையான்மையை கேள்விக்கு உள்ளாக்கி உள்ளது..
JNU வை சேர்ந்த மாணவர் தலைவர் கண்ணையா குமார் ஏற்பாடு செய்த ஒரு பொது கூட்டத்தில் நாடாளுமன்ற தாக்குதலில் தொடர்பு இருந்த அப்சல் குருவிற்கு ஆதரவாகவும் பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் அக்கூட்டத்தில் பேசப்பட்டதால் தேச துரோக சட்டதின் படி அந்த கூட்டதிற்கு ஏற்பாடு செய்த கண்ணையா குமார் கைது செய்யப்பட்டு உள்ளார்.
இந்தியாவின் இறயாண்மைக்கு யார் எதிராக இருந்தாலும் அதை ஒப்பு கொள்ள முடியாது. ஆனால் அதே நேரத்தில் இந்த நிகழ்வின் பின்னால் இருக்கும் கருத்துகளை சிந்திக்க நாம் தவறி விடுகின்றோமோ என்று எண்ண தோன்றுகிறது.
ஆமாம் JNU பல்கலைகழகம் ஏதோ ஜம்மு கஷ்மீரில்லோ அல்லது பிரிவினைவாத கருத்துக்கள் உள்ள பகுதியிலோ உள்ள பல்கலைகழகம் இல்லை. இந்தியாவின் தலைநகரமான நம் நாட்டின் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும், நாட்டு மக்கள் அனைவரின் பார்வையும் படுகின்ற டெல்லியில் அமைந்து உள்ளது. பெரும்பாலானவர்களின் கருத்துப்படி தேசப்பற்று மிகுந்த சமூக அக்கறை கொண்ட மாணவர்கள் பலர் படிக்கும் கல்லூரி தான் JNU. அப்படி இருக்கும் போது இந்த நிகழ்வை சாதாரணமாக எடுத்துகொள்ள கூடாது.
சமீபகாலமாக இளைய தலைமுறையினரிடம் ஏதோ ஒருவித வெறுப்பு காண படுகின்றது. அது ஊழல் காரணமாக இருக்கலாம், படித்துவிட்டு வேலை வாய்ப்பற்று இருப்பதனால் இருக்கலாம் நம் நாட்டு அரசியல் வாதிகளின் நடவெடிக்கைகள் பிடிக்காமல் இருக்கலாம், நீதி மன்றங்களின் மீது நம்பிக்கை இழந்தவர்களாக கூட இருக்கலாம். எந்த இளைய தலைமுறை நாட்டின் தூண்கள் என்று நாம் கூறிகொண்டு இருக்கின்றோமோ அவர்கள் தான் அந்த பொது கூட்டத்தில் அப்சல் குருவையும் பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் பேசி இருக்கிறார்கள். அவர்களை கைது செய்து நீதியின் முன்னால் அரசு நிறுத்தி இருக்கிறது. அவர்கள் அப்படி பேசியதற்கான காரணம் என்ன? அவர்கள் யாரோ சிலரின் தூண்டுதலினால் பேசினார்களா இல்லை அது அவர்களின் மனதில் தோன்றிய கருத்தா என்பது பற்றி யாருக்கும் கவலை இல்லை. நாம் மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கும் நீதி மன்றம் கூட அதை பற்றி கவலை கொள்ளாமல் அவரை சிறை வைக்க உத்தரவிட்டது..
கைது செய்யப்பட்டவர் ஒரு மாணவர் தலைவர். இந்தியா போன்ற ஒரு ஜனநாயக நாட்டில் அனைவருக்கும் பேச்சுரிமை என்ற அடிப்படை உரிமை உண்டு. ஆனால் அதற்காக நாட்டின் இறையாண்மைக்கு எதிராக பேசுவதை அனுமதிக்க முடியாது. அதே நேரத்தில் பேசியவர்கள் யார் என்பதையும் எண்ணி பார்க்க வேண்டும்.. பேசியவர்கள் மாணவர்கள்..ஒரு மாணவனே நம் நாட்டின் இறையாண்மை மீது நம்பிக்கை இழந்து பேசுகின்றான் என்றால் தவறு அவன்பால் இருக்க வாய்ப்பில்லை.. அது சமூகத்தின் மீதான தவறாக தான் இருக்கும்.
ஆம் எங்கு திரும்பினாலும் ஊழல், வேலை வாய்ப்பின்மை, அதிகார குவியல், பணக்காரன் பணக்காரன் ஆகிறான் ஏழை மேலும் ஏழை ஆகின்றான். பணக்காரன் கொலை வழக்கில் இருந்து கூட விடுதலை செய்ய படுகின்றான்..சந்தேக வழக்கில் கைது செய்யப் பட்டவன் பல ஆண்டுகள் சிறையில் வாடுகின்றான் நல்லொழுக்கம் காரணம் காட்டி குற்றவாளி விடுதலை செய்ய படுகின்றான்..
நாம் நாட்டின் வரலாறுகளையும் சுதந்திரம் பற்றிய கருத்துகளையும் அவனுக்கு சிறு வயது முதலே சொல்லி கொடுத்து நாட்டின் மீதும் நாட்டு மக்கள் மீதும் இளைய சமுதாயம் பற்றுடனும் இருக்க அவர்களுக்கு வழி காட்டியாய் இருக்க வேண்டும்..அதை விடுத்து அவர்களை குற்றவாளிகளை போல கையாண்டால் அவர்களுக்கு நாட்டின் மீதான வெறுப்பு மட்டுமே கூடும்..அந்த மாணவரை உடனடியாக விடுதலை செய்து அவருக்கும் அவர் சார்ந்த அமைப்பினருக்கும் ஆலோசனைகள் வழங்கி அவர்களின் குறைகளை களைந்து இந்த நாட்டிற்கு நல்ல குடிமகன்களாக மாற்றிட வேண்டும் என்பதே எனது விருப்பம்…
குறிப்பு : அனைத்து தேசிய கல்லூரிகளிழும் 207 அடி கம்பத்தில் தேசியகொடியினை ஏற்ற வேண்டும் என்று முடிவு செய்திருகிறார்கள். தேசிய கொடியினை மட்டும் ஏற்றினால் தேசப்பற்று வந்து விடுமா என்பதை அவர்கள் யோசித்திருக்க மாட்டார்களா?
ஒவ்வொரு கல்லூரியிலும் 207 அடி தேசியக்கொடி கம்பம் அமைக்க 60 லட்சம் செலவு ஆகுமாம். அது போக ஆண்டுக்கு பராமரிப்பு செலவு 65 ஆயிரம் ஆகுமாம்.
குறிப்பு : அனைத்து தேசிய கல்லூரிகளிழும் 207 அடி கம்பத்தில் தேசியகொடியினை ஏற்ற வேண்டும் என்று முடிவு செய்திருகிறார்கள். தேசிய கொடியினை மட்டும் ஏற்றினால் தேசப்பற்று வந்து விடுமா என்பதை அவர்கள் யோசித்திருக்க மாட்டார்களா?
ஒவ்வொரு கல்லூரியிலும் 207 அடி தேசியக்கொடி கம்பம் அமைக்க 60 லட்சம் செலவு ஆகுமாம். அது போக ஆண்டுக்கு பராமரிப்பு செலவு 65 ஆயிரம் ஆகுமாம்.