அட நம்ம நல்லக்கண்ணு அய்யாக்கு தெரிஞ்சது மேல இருக்கவங்களுக்கு தெரியல ?

நடுவர் மன்றம் அமைக்க நாடாளுமன்றத்திற்கு தான் அதிகாரம் உள்ளதென்றும் அதற்காக நாடாளுமன்றத்தினை கூட்டவேண்டும் என்றும் மத்திய அரசு வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தார் . நீதிபதிகளும் அதனை ஏற்று உத்தரவை நிறுத்தி வைத்தனர் ..

சில நாட்களுக்கு முன்பாக முன்னால் நீதிபதியும் சில நீர்ப்பாசன துறையை சேர்ந்த முன்னால் அதிகாரிகளும் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்தனர் ..அதில் நல்லகண்ணு ஐயா கூறியிருப்பதை போலவே காவிரி நடுவர் மன்றம் அமைக்க நாடாளுமன்றத்தை கூட்ட அவசியமே இல்லை என்றனர் ..

மேலும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் அடுத்த தவணையில் இது பற்றி கேள்வி எழுப்புவார்கள் என்றும் நம்பிக்கை தெரிவித்தனர் …

தவறாக தகவல் கொடுத்த மத்திய அரசு வழக்கறிஞருக்கு எண்ண கொடுக்க போகிறது நீதிமன்றம் ?

தொடர்ந்து ஏமாந்துகொண்டே இருக்கும் தமிழகத்துக்கு என்ன சொல்ல போகிறது நீதிமன்றமும் மத்திய அரசும் ?

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *