Site icon பாமரன் கருத்து

உஜ்வாலா யோஜனா திட்டத்தில் இலவச சிலிண்டர் பெற விண்ணப்பிப்பது எப்படி?

பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டம்

உலக சுகாதார அமைப்பின் தகவல்படி, விறகு உள்ளிட்ட தூய்மையற்ற எரிபொருளில் இருந்து பெண்கள் சுவாசிக்கும் புகை ஒரு மணிநேரத்திற்கு 400 சிகரெட்டுகளை புகைப்பதற்கு சமம் என்கிறது. இத்தகைய பாதிப்பில் இருந்து வறுமை கோட்டிற்கு கீழே உள்ள பெண்களை பாதுகாக்கும் நோக்கத்தோடு அவர்களுக்கு இலவசமாக சமையல் எரிவாயு கிடைப்பதற்கு வழிவகை செய்திடவே இந்திய அரசாங்கம் பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தை கொண்டுவந்தது.

பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டம் யாருக்கானது?

வறுமைக்கோட்டுக்கு கீழே இருக்கும் குடும்ப பெண்களின் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு அவர்களும் சமையல் எரிவாயுவை பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் அவர்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர்களை வழங்குவதே இந்த திட்டத்தின் நோக்கம். 

இந்த திட்டத்தின் மூலமாக குடும்ப பெண்களின் வாழ்வாதாரம் மேம்படும், அவர்களின் வேலைப்பளு குறையும், அவர்களின் ஆரோக்கியம் மேம்படும் மற்றும் சுற்றுசூழல் மாசுபாடும் குறைக்கப்படும்.

ஓய்வு பெற்றவர்களுக்கான பென்சன் திட்டம் | பிரதான் மந்திரி வய வந்தனா யோஜனா?

பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்திற்கு தகுதி என்ன?


வறுமை கோட்டுக்கு கீழே இருக்கும் 18 வயது நிரம்பிய பெண்ணால் இந்த திட்டத்தின் கீழ் இலவச சிலிண்டர்களை பெற முடியும். அதேபோல, குறிப்பிட்ட பெண்ணின் குடும்பத்தில் யார் பேரிலும் சிலிண்டர் இருக்கக்கூடாது.

இலவச சிலிண்டருக்கு விண்ணப்பிக்க என்ன சான்றிதழ்கள் அவசியம்?

நீங்கள் வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ளவர் என்பதற்கான ஊராட்சித்தலைவர் அல்லது பேரூராட்சித்தலைவர் அவர்களின் சான்றிதழ் 

ரேஷன் அட்டை 

ஆதார் அட்டை 

பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம் 

வீட்டின் ஆவணம் 

இருப்பிட சான்றிதழ் 

வங்கிக்கணக்கு

இலவச சிலிண்டருக்கு எங்கே விண்ணப்பம் செய்திட வேண்டும்?

மேற்கூறிய ஆவணங்கள் அனைத்தும் உங்களிடம் இருந்தால் இலவச சிலிண்டருக்கு விண்ணப்பிக்க முடியும். இதற்கான விண்ணப்பத்தினை ஏதேனும் ஒரு எல்பிஜி விற்பனை நிலையத்தில் வாங்கலாம் அல்லது மத்திய அரசின் இணையதளத்தில் [https://popbox.co.in/pmujjwalayojana/] டவுன்லோட் செய்துகொள்ளலாம். பின்னர் அந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அருகே உள்ள LPG விற்பனை நிலையத்தில் கொடுக்க வேண்டும். 

இந்த திட்டத்திற்கு விண்ணப்பிப்பவர்கள் தகுதி உடையவர்கள் தானா என்பதை அந்தந்த மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் கண்டறிந்து மத்திய அரசிடம் கூற வேண்டும். குறிப்பிட்ட பெண் இந்த திட்டத்தில் பயன்பெற தகுதி உள்ளவர் என்பது உறுதி செய்யப்பட்டால் அவருக்கு சிலிண்டருக்கான பணம் வங்கியில் வரவு வைக்கப்படும். ஒவ்வொரு ஆண்டும் இதற்காக பல ஆயிரம் கோடிகளை மத்திய அரசு ஒதுக்கி வருகிறது.

எங்களது கட்டுரைகளை நீங்கள் தவறாமல் படிக்க விரும்பினால் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்து பின்தொடருங்கள். கூறவே வாட்ஸ்ஆப் பட்டனை அழுத்தி எங்களுடைய குரூப்பில் இணைத்துக்கொண்டு பதிவுகளை பெறுங்கள்



Get Updates in WhatsApp

Exit mobile version