இந்திய அரசாங்கத்தின் சார்பாக சமூக நலனுக்கான பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதிலே முக்கியமானது தான் “பிரதான் மந்திரி வய வந்தனா யோஜனா” என்கிற ஓய்வு பெற்றவர்களுக்கான பென்சன் திட்டம். இந்திய அரசு LIC மூலமாக இதனை செயல்படுத்துகிறது.
இந்திய அரசு தேவையின் அடிப்படையில் அவ்வப்போது பல சமூகப் பாதுகாப்புத் திட்டங்களைக் கொண்டு வருகிறது. பொது வருங்கால வைப்பு நிதி Public Provident Fund (PPF), அடல் பென்ஷன் யோஜனா Atal Pension Yojana, தேசிய ஓய்வூதியத் திட்டம் National Pension Scheme, மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் Senior Citizens Saving Scheme மற்றும் பல திட்டங்கள் ஏற்கனவே பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்றன. இந்தப்பட்டியலில் இணைந்திருப்பது தான் பிரதான் மந்திரி வய வந்தனா யோஜனா (PMVVY) என்கிற பென்ஷன் திட்டம்.
PMVVY என்பது ஓய்வு பெற்றவர்களுக்கான மற்றும் ஓய்வூதியத் திட்டமாகும், இது இந்தியாவின் மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (LIC) மூலம் இயக்கப்பட்டு நிர்வகிக்கப்படுகிறது.
பிரதான் மந்திரி வய வந்தனா யோஜனா திட்டம் என்றால் என்ன?
பிரதான் மந்திரி வய வந்தனா யோஜனா திட்டம் என்பது ஓய்வு பெற்றவர்களுக்கான பயனுள்ள திட்டம் ஆகும். 2017 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த திட்டத்தில் ஓய்வு பெற்ற ஒருவர் செய்திடும் முதலீட்டுக்கு நிரந்தரமான வட்டித்தொகையை பெற முடியும். ஓய்வூதியதிற்கு ஒப்பாக அந்தப்பணம் இருக்கும்.
60 வயது நிரம்பிய ஒரு இந்தியக்குடிமகன் இந்தத்திட்டத்தில் இணையலாம். ஒருவர் குறைந்தபட்சம் 1.5 லட்சம் மதிப்பிலான பத்திரத்தை வாங்க வேண்டும். அப்படி வாங்கினால் மாதம் ஒன்றுக்கு ரூ 1000 வட்டித்தொகையாக கிடைக்கும். அதிகபட்சமாக 15 லட்சம் வரைக்கும் இதிலே ஒருவர் முதலீடு செய்யலாம். அப்படி 15 லட்சம் முதலீடு செய்தால் மாதந்தோறும் ரூ 10,000 பெற முடியும். ஒருவர் 10 ஆண்டுகள் இந்தத்திட்டத்தில் இருக்கலாம். அதன் பிறகு குறிப்பிட்ட நபர் செலுத்திய தொகை திருப்பி தரப்படும்.
பிரதான் மந்திரி வய வந்தனா யோஜனா திட்டத்தில் இணைய என்னென்ன சான்றிதழ் அவசியம்?
ஆதார் அட்டை
வயது சான்றிதழ்
இருப்பிட சான்றிதழ்
பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம்
வேலையில் இருந்து ஓய்வு பெற்றதற்கான சான்றிதழ்
பிரதான் மந்திரி வய வந்தனா யோஜனா திட்டத்தில் இணைய விண்ணப்பம் செய்வது எப்படி?
இந்த திட்டத்தை மத்திய அரசானது LIC உடன் இணைத்து செயல்படுத்தி வருகிறது. இதில் இணைய ஆன்லைன் மூலமாகவோ அல்லது நேரடியாக LIC கிளையை அணுகியோ இணைய முடியும்.
ஆன்லைன் மூலமாக இணைய LIC யின் https://licindia.in/ இணையத்திற்கு சென்று பின்னர் ‘pension plans’ என்ற பகுதிக்குள் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.
நேரடியாக விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் LIC கிளையை அணுகி அவர்கள் தரும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து விண்ணப்பிக்க முடியும்.
Pension mode | Minimum amount of pension | Minimum amount of investment | Maximum amount of pension | Maximum amount of investment |
Monthly | Rs 1,000 | Rs 1,50,000 | Rs 10,000 | Rs 15,00,000 |
Quarterly | Rs 3,000 | Rs 1,49,068 | Rs 30,000 | Rs 14,90,684 |
Bi-annually | Rs 6,000 | Rs 1,47,601 | Rs 60,000 | Rs 14,76,014 |
Annually | Rs 12,00 | Rs 1,44,578 | Rs 1,20,000 | Rs 14,45,784 |
பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா காப்பீடு திட்டம் என்றால் என்ன?
எங்களது கட்டுரைகளை நீங்கள் தவறாமல் படிக்க விரும்பினால் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்து பின்தொடருங்கள். கூறவே வாட்ஸ்ஆப் பட்டனை அழுத்தி எங்களுடைய குரூப்பில் இணைத்துக்கொண்டு பதிவுகளை பெறுங்கள்