Site icon பாமரன் கருத்து

ஷெர்லாக் ஹோம்ஸால் தீர்க்க முடியாத புதிர் | மருதன் | Sherlock Holmesaal Theerka Mudiyatha Puthir

Sherlock Holmesaal Theerka Mudiyatha Puthir Tamil book

வித்தியாசமான தலைப்புகளில் பல கட்டுரைகளை தாங்கி வந்துள்ளது இந்தப்புத்தகம். சிறிய விசயங்களை அடிப்படையாக வைத்துக்கொண்டு எப்படி நெடுங் கட்டுரைகளை படைக்க முடியும் என்பதற்கோர் உதாரணம் இது. எழுத்து குறித்து ஆர்வம் உள்ளவர்கள் , எழுத நினைப்பவர்கள்,அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம் இது.

புத்தகம் : ஷெர்லாக் ஹோம்ஸ்ஸால் தீர்க்க முடியாத புதிர்

எழுத்தாளர் : மருதன் 

விலை : ரூ 178

Click Here To Download/Buy

நீங்கள் இங்கே படிக்க இருக்கும் புத்தக விமர்சனம் சிறந்த புத்தக வாசிப்பாளர் திரு கருணா மூர்த்தி அவர்களால் எழுதப்பட்டது. அவர் இதுபோன்ற பல புத்தக விமர்சனங்களை எழுதுபவர் அவரை நீங்கள் பேஸ்புக்கில் தொடர விரும்பினால் இங்கே கிளிக் செய்திடுங்கள்.

ஆசிரியர் மருதன் முன்னுரை

இளம் வாசகர்களுக்கான எழுத்து? அப்படி நினைத்து நாம் எழுதுவது அவர்களை உண்மையிலேயே சென்றடைகிறதா? அதை அவர்கள் எப்படி எடுத்துக்கொள்கிறார்கள்? அவர்களுக்குப் பிடித்தது என்ன, பிடிக்காதது என்ன? எதை ஆர்வத்துடன் படிக்க விரும்புகிறார்கள், எதைக் கடனேவென்று படிக்கிறார்கள், எதைக் கடந்து சென்றுவிடுகிறார்கள்? எது குறித்து மேலும் தெரிந்துகொள்ள விரும்புகிறார்கள்? எது அவர்களுடன் தங்குகிறது? எது அவர்களோடு தங்கி, அவர்களோடு சேர்ந்து வளர்கிறது?

 

இந்தக் கேள்விகளுக்கான பதில்களை அவர்களுக்காக எழுதுவதாகச் சொல்லிக்கொள்ளும் ஒவ்வொருவரும் தனிப்பட்டமுறையில் தேடிக் கண்டடைய வேண்டியிருக்கிறது.

 

மனிதர்களை, விலங்கு களை, இடங்களை அறிமுகப்படுத்துவது எளிதாக இருந்தது. பொருள் என்பதன் பொருளைச் சற்றே நீட்டித்து பேசுபொருளாகவும் பயன்படுத்தியிருக்கிறேன். கல்லும் மண்ணும் மலையும் மேஜையும் மட்டுமல்ல; வாசிப்பு, அறிவு, இயற்கை, அன்பு, கவிதை, வரலாறு எல்லாமே பொருள்தான்.

வரலாறு மட்டும் அளவுக்கு அதிகமான இடத்தை அபகரித்துக் கொண்டதற்கு அத்துறை மீதான என்னுடைய தனிப்பட்ட ஆர்வமே காரணம்.”என்கிறார் ஆசிரியர்.

புத்தகம் பற்றி


இந்த புத்தகத்தில் மொத்தம் 54 கட்டுரைகள் இடம்பெற்றிருக்கிறது.

 

1. அசோகரை ஏன் நினைவில் வைத்திருக்கிறோம்?

2. ஆப்பிரிக்கா ஏன் இப்படி இருக்கிறது?

3. ஒரு பெட்டி வளர முடியுமா?

4.பாயும் புலி, பதுங்கும் பூனை.

5 ஒரு ஷிபாகுஷாவின் கதை 

6. சிறையும் சுதந்திரமும்

7. ஒரு குரங்கு தொடுத்த வழக்கு!

8. ஒரு கல்லின் வாழ்க்கை வரலாறு

9. நான் ஒரு பெண்

10. அறிவு வேட்டைக்கு நீங்கள் தயாரா?

11. போர்க்களத்தில் ஓர் அமைதிப் புறா

12. தந்தத்தில் வளர்ந்த மான்!

13. இயற்கையைக் கண்டுபிடித்தவர்

14. விலங்குகளுக்குப் படிக்கத் தெரிந்தால் என்னாகும்?

15.என் கேள்விக்கு என்ன பதில்?

16. வெடிக்கும் மருந்து

17. காட்டு மனிதர்.

18. ஓநாய் வேட்டை

19. ஒரு குட்டி யானையின் சவால்! 20. ரோஜா எழுதிய வரலாறு

21. வேற்று கிரகவாசியின் கதை

22. ஒரு கோப்பை தங்கம்

23. அரிஸ்டாட்டில் என்ன சொன்னார்?

24. உபுண்டு

25. அன்புள்ள கழுதை

26. ஒரு கதையின் கதை

27. என்னது, மனிதர்கள் குரங்கில்

இருந்து வந்தவர்களா?

28. மண்ணே வணக்கம்!

29. பறவையும் குழந்தையும்

30. புத்தகத்தை என்ன செய்யலாம்?

31. உங்களுக்குத் தெரியுமா, தெரியாதா?

32. எது நிஜம், எது கனவு?

33. பேனா தயாரிப்பது எப்படி?

34. மேதைகள் பலவிதம்!

35. நட்சத்திரங்களுக்குப் பசித்தால் என்ன செய்யும்?

36. கவிஞரும் கவிதையும்

37. கணக்கு பூதம்

38. இயந்திரக் குதிரை

39. இது ஆண்களுக்கான இடமா?

40.மியாவ்… மியாவ்…

41. என் கரடி நண்பன்42. பராக்…பராக்…

43.துப்பறியும் நிபுணராக வேண்டுமா?

44. ரகசியக் கடிகாரம்

45. அவர்களை எப்படி அழைப்பது?

46. பெஞ்சமின் ஏன் இப்படி இருக்கிறான்?

47. நட்பு இல்லாமல் நான் இல்லை!

48. முள்ளம்பன்றி சொன்ன யோசனை

49. அங்குலிமாலா கதை

50.ஊர் சுற்றுங்கள்!

51. உங்களுடைய இறக்கைகள் எங்கே?

52.ஷெர்லாக் ஹோம்ஸால் தீர்க்க முடியாத புதிர்!

53.ரண்டு கைகள் போதவில்லை!

54. இறந்த காலத்துக்கு உயிர் உண்டா?

 

நாம் முதலில் கூறியது போல ஒரு சிறு செய்தியை வைத்துக்கொண்டு ஒரு சிறு துணுக்கை  வைத்துக் கொண்டு இவ்வளவு கட்டுரைகளை ஆசிரியர் மருதன் அவர்கள் அழகாக எழுதி இருக்கிறார் .

புதிய இளம் எழுத்தாளர்கள் இவரின் எழுத்தை படித்து ஆராய்ந்து இது போல எழுத கற்றுக் கொள்ள வேண்டும் .எழுதுவது எப்படி என்பதை இந்த புத்தகத்தை படித்தால் அறிந்து கொள்ளலாம்.


சைமன் கார்ஃபீல்ட் எழுதிய Timekeepers என்னும் புத்தகத்தைப் படித்ததால் நேரத்தைத் தடுத்து நிறுத்த நடைபெற்ற வேடிக்கையான முயற்சிகள் குறித்து இவரால்  எழுத முடிந்தது.    பமுதன்முதலில் ரயில் வண்டியைக் கண்ட மக்களின் அனுபவம் குறித்தும் இந்த நூலிலிருந்துதான் தெரிந்துகொண்டார்.

வால்டர் ஐசக்ஸனின் லியானர்டோ புத்தகத்தின் முன்னுரையை அடிப்படையாகக் கொண்டு அவரைப் பற்றி  எழுதமுடிந்தது.

 

 ஆண்டரியா உல்ஃப் எழுதிய The Invention of Nature என்னும் வியப்பூட்டும் புத்தகத்தை வாசித்திருக்காவிட்டால் அலெக்சாண்டர் ஹம்போல்ட் பெயரை எப்படியாவது அறிமுகம் செய்துவிட வேண்டும் என்னும் துடிப்பு தோன்றியிருக்காது.

 

பெளத்தம் தொடர்பாக வாசித்துக்கொண்டிருந்தபோதுதான் அங்குலி மாலா பற்றிய சில ஆய்வுக்கட்டுரைகளைக் கண்டு ஒவ்வொரு கதையிலும் பல கதைகள் ஒளிந்துகொண்டிருக்கின்றன; முயன்றால் அவற்றை நம்மாலும் கண்டுபிடிக்க முடியும் என்னும் செய்தியை எழுதினார் மருதன் அவர்கள்.

 

ஆ.இரா.வேங்கடாசலபதியின் ஒரு கட்டுரையைப் பின்பற்றி வையாபுரிப்பிள்ளை எழுதிய தமிழ்ச் சுடர்மணிகள் என்னும் நூலைப் படித்ததன் விளைவாக பாரதியுடனான அவருடைய சந்திப்பு குறித்து எழுத முடிந்தது.

 

இடம் பொருள் மனிதர் விலங்கு என்று நான்கையும் உள்ளடக்கிய பதிவு என்று பார்த்தால்

ஒன்றுதான் தேறும்.

. ‘ஒரு கதையின் கதை’, பெங்களூரு சென்றிருந்த போது என்ன எழுதுவது என்னும் யோசனையோடு அங்கே இருந்த மடிக்கணினியைத் திறந்தேன். வழக்கமான திரைக்குப் பதிலாக உபுண்டு என்னும் சொல் பெரிய எழுத்தில் தோன்றியது என்கிறார் ஆசிரியர்.

 

உதய்பூர் சென்றிருந்தபோது முதன்முறையாக பொம்மலாட்ட நிகழ்ச்சி  கலைஞர்களுடன் கொஞ்சம் பேசியதால் ‘ஒரு குட்டி யானையின் சவால்’ எழுதியதற்கு வாய்ப்பானது.ஷெர்லாக் ஹோம்ஸ் கதைகளை மறுகற்பனை செய்யும் எலிமெண்டரி என்னும் தொடரை அமேசானில்  பார்த்ததின் காரணமாக புத்தகத் தலைப்பில் கட்டுரை எழுதினார் ஆசிரியர்.

 

செய்திகளும் கட்டுரைகளாக மாறியிருக்கின்றன. தன்னையே படம் எடுத்துக்கொண்ட குரங்கு குறித்தும், அந்தப் படம் யாருக்குச் சொந்தம் என்னும் கேள்வியோடு நடைபெற்ற சுவையான வழக்கு குறித்தும் இரு கட்டுரைகள் எழுதினார் மருதன் அவர்கள்.

 

விலங்குகளுக்குக் காப்புரிமை இல்லை என்று நீதிமன்றம் சொல்லி விட்டது. எனில், இறைந்துகிடக்கும் விறகுகளுக்கு யார் உரிமை கோரலாம்? இயற்கைக்கு யார் உரிமை கோருவது? நீருக்கும் கதிரவனுக்கும் நட்சத்திரங்களுக்கும்கூட சொந்தம் கொண்டாடுவது சாத்தியம்தானா? என்று கேள்வி எழுப்புகிறார் மருதன் அவர்கள்.

எழுத்து குறித்து ஆர்வம் உள்ளவர்கள் , எழுத நினைப்பவர்கள்,அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம் இது.

மேலும் நூல்கள் பற்றி படிக்க….


Share with your friends !
Exit mobile version