Site icon பாமரன் கருத்து

இன்னும் அப்துல்கலாம் ஐ மறக்க முடியவில்லையே ஏன் ? | APJ Abdul Kalam | Bio

Abdul kalam motivated Students

Abdul kalam motivated Students

நமது பிறப்பு
ஒரு சம்பவமாக இருக்கலாம்
ஆனால்
இறப்பு ஒரு சரித்திரமாக
இருக்க வேண்டும்

Former Indian President Abdul Kalam

அப்துல்கலாம் அய்யா அவர்கள் மறைந்து ஆண்டுகள் பல கடந்திருப்பினும் இன்னும் இளைஞர்களின் மனதிலே வாழ்த்துவருகிறார் . இது எப்படி சாத்தியமானது ? அனைவரையும் அவர் வென்றது எப்படி ? நாம் அவருக்காற்றும் நன்றி என்ன என்பதனை தான் பார்க்க இருக்கின்றோம் .

ஜூலை 27 , 2015 மேகாலயா மாநிலத்தில் ஷில்லாங் பகுதியில் இருக்கக்கூடிய IIM கல்லூரியில் “Creating a Livable Planet Earth” என்னும் தலைப்பில் உரையாற்றிக்கொண்டு இருக்கிறார் நமது முன்னால் குடியரசு தலைவர் அப்துல்கலாம் . திடிரென்று நிலைதடுமாறி விழும் அவரை தாங்கி பிடிக்கிறார்கள் காவலர்கள் . அவரை காப்பாற்றுவதற்கான முயற்சிகள் நடக்கின்றன . ஆனாலும் இயற்கையோடு இணைந்துவிட்டார் கலாம் என்னும் ஆசான் .

முன்னால் இந்திய குடியரசுதலைவர் திரு APJ அப்துல் கலாம் அவர்கள் அக்டோபர் மாதம் 15 ஆம் நாள் ராமேஸ்வரத்தில் பிறந்தார்

ஏதாவது ஒரு தலைவர் இறந்தால் ஓரளவு வயதானவர்கள்,விபரம் அறிந்தவர்கள் வருத்தப்பட்டு பார்த்திருக்கிறேன் ஆனால் அப்துல்கலாம் மறைந்தபோது வயது பாகுபாடெல்லாம் கிடையவே கிடையாது . பள்ளிக்கு செல்ல ஆரம்பித்த மாணவர் , கல்லூரி செல்லும் இளைஞர்கள் , மாணவிகள் , குடும்ப ஆண்கள் பெண்கள் , வயதான தாத்தா பாட்டிகள் கூட அப்துல்கலாம் மறைவுக்காக வருந்தியதை பார்க்க முடிந்தது .

இத்தனைக்கும் வருந்தியவர்களில் பலருக்கு அவர் என்ன கண்டுபிடித்தார் , என்ன விருதெல்லாம் வாங்கியிருக்கிறார் என்று அதிகம் தெரியாதவர்கள் . இருந்தாலும் அவர்களின் மனம் நொந்தன அவரது மறைவில் . இது எனக்கு மிகப்பெரிய ஆச்சரியத்தை கொடுத்தது . அவருக்கு முன்னரும் பின்னரும் பல குடியரசு தலைவர்கள் வந்துவிட்டனர் , அவருக்கு நிகராக பல கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியவர்களும் இல்லையென சொல்லிவிட முடியாது , அவரைபோலவே பல விருதுகளை வாங்கியவர்களும் இருக்கிறார்கள் . ஆனாலும் அவர் மட்டுமே மக்களின் மனதினை வென்றார் . எப்படி அப்துல்கலாம் அவர்களால் மக்களின் மனதில் இடம்பிடிக்க முடிந்தது?.

ஒரே பதில் மாணவர்கள் , இளைஞர்களின் மீதான அதீத அக்கறை

அதற்குமிக முக்கிய காரணம் அவர் அடைந்த அனைத்தையும் இளைஞர்களின்,மாணவர்களின் முன்னேற்றத்திற்காக பயன்படுத்திக்கொண்டே வந்தார் . குடியரசுத்தலைவர் தலைவர் பதவிக்கு உயர்ந்த பின்னரும் தொடர்ச்சியாக இளைஞர்களிடம் உரையாடுவதனையும் மாணவர்களுக்கு வகுப்பெடுப்பதையும் அவர் நிறுத்திக்கொள்ளவே இல்லை.

அவருடைய தூய்மையான எளிமையும் மாணவர்களின் மீதான அன்பும் இளைஞர்களின் மீதான அக்கறையும் அவர் மீதான மதிப்பினை அன்பினை அதிகரிக்க காரணமாக அமைந்துவிட்டது .

கனவுகளின் நாயகன்

அப்துல்கலாம் என்றால் “கனவு காணுங்கள் ” என்கிற சொல்லாடல் நினைவுக்கு வந்துபோகும் . ஆம் ஒவ்வொரு இளைஞனும் ஆக்கபூர்வமான சிந்தனைகளை நினைத்திட வேண்டும் என ஒவ்வொரு நொடியும் பேசி வந்தவர் . இளம்வயதில் வீடு வீடாக சென்று செய்தித்தாள் போட்டு வாழ்க்கையை நடத்திவந்த கலாம் அவர்கள் கடின உழைப்பினால் செய்திதாள்களில் இடம்பிடிக்கும் அளவிற்கு உயர்ந்தவர் .

நாடே கலங்கிய நல்லவர்

அரசியல்கட்சித்தலைவர்களுக்கும் நடிகர்கர்களுக்கும் கூட்டம் கூடி (பணம் , பிரியாணி கொடுத்து) பார்த்திருக்கின்றேன் . ஆனால் கலாம் என்கிற ஒற்றை நபர் இறந்தபோது நாடே கலங்கியது, அவருக்காக வருத்தப்படாதவர்கள் இல்லை . அரசியல் பேனர்களை தாண்டி கலாம் நினைவு அஞ்சலி கடவுட்கள் இடம் பிடித்தன . ராமேஸ்வரம் சாலைகள் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தன . கண்ணீரால் மேலும் உப்பானது ராமேஸ்வரம் கடல் . அவ்வளவு மக்கள் மாமனிதருக்காக வருத்தப்பட்டனர் .

இன்றும் மறக்காத இளைஞர்கள்

அவர் மறைந்தது 2015 , ஆண்டுகள் கடந்தாலும் இன்றும் அவருக்கு இளைஞர்களிடத்தில் மக்களிடத்தில் இருக்கின்ற அன்பும் நினைவுகளும் குறைந்திடவே இல்லை . உண்மையாலுமே கலாம் அவர்களுக்கு நாம் செலுத்துகிற உண்மையான அஞ்சலி இதுவாக இருக்கலாம் . ஒவ்வொரு இளைஞனும் மக்களும் கலாம் என்கின்ற நாயகனை நினைத்துக்கொன்டு மட்டுமே இருக்காமல் , ஆக்கபூர்வமாக அவரைபோலவே சிந்தித்து இந்தியாவினை வல்லரசு நாடாக உயர்த்திட தங்களது பங்களிப்பை கொடுக்க வேண்டும் . அதுவே அவருக்கு நாம் செலுத்துகின்ற உண்மையான நன்றியாக ,அஞ்சலியாக இருக்கும் .

1998 வாஜ்பாய் – கலாம் கூட்டணி பொக்ரான் அணுகுண்டு சோதனை நடத்தியதெப்படி? 





எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!

பாமரன் கருத்து

Share with your friends !
Exit mobile version