Site icon பாமரன் கருத்து

மக்கள் பணத்தில் விளம்பரம் செய்யும் ஆட்சியாளர்கள் – காமராஜர் சொன்ன அதிரடி பதில்

 


கடந்த காலங்களில் ஆட்சி செய்தவர்களாகட்டும் தற்போது ஆட்சி செய்பவர்கள் ஆகட்டும் “நாங்கள் இதனை செய்தோம், நாங்கள் அதனை செய்தோம்” என கூவி கூவி விளம்பரம் செய்கிறார்கள். அரசின் சார்பாக நலத்திட்டங்கள் அறிவிக்கப்படும்போது அது பற்றிய விவரங்கள் போய் சேருகிறதோ இல்லையோ ஆட்சியாளர்கள் பற்றிய விவரங்கள் போய் சேருகிற விதமாகவே விளம்பரங்கள் அமைக்கப்படுகின்றன. முதல்வர் அல்லது பிரதமர் இவர்களின் படங்கள் மிகப்பெரியதாகவும் திட்டம் குறித்த தகவல்கள் மிகச்சிறியதாக ஒரு மூலையிலும் பதிவிடப்பட்டு இருப்பதனை நாம் பலமுறை கண்டிருக்கிறோம்.

 

எந்தவொரு துறையிலும் சாதனை நிகழ்த்தப்படும்போது அதனை விளம்பரப்படுத்தி எந்த ஊழியரும் விளம்பரப்படுத்துவது இல்லை

 

மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஆட்சியாளர்கள் தான் இதனை செய்கிறார்கள். ஆட்சியாளர்கள் செய்தவற்றை விளம்பரப்படுத்தலாமா? அப்படி செய்வதற்கு மக்களின் வரிப்பணத்திலேயே செலவு செய்யலாமா? என்ற கேள்வி அனைவருக்கும் எழலாம். இந்த கேள்விகளுக்கு காமராஜரின் வாழ்வில் நடந்த நிகழ்வு ஓர் அற்புதமான பதிலை அளிக்கும்.

 

Kamarajar at office

 

ஒருமுறை காமராஜர் அவர்களிடம் நிர்வாகிகள் சிலர் சென்று, நாம் நிறைய செய்திருக்கிறோம், அதனை பிறருக்கு தெரியப்படுத்தும் விதமாக விளம்பரம் செய்யவேண்டும், நோட்டீஸ் போன்றவை அடிக்க வேண்டும் என கூறுகிறார்கள். உடனே காமராஜர் “நான் முதலமைச்சராக இருப்பதற்கு மக்கள் சம்பளம் கொடுக்கிறார்கள். அவர்களுடைய பணியை செய்ய ஒருவனை நியமித்து இருக்கிறார்கள். அதற்க்கு சம்பளம் வாங்கிக்கொண்டு செய்தவற்றை விளம்பரம் செய்வது மிகத்தவறு. அதோடு நில்லாமல், அதனை செய்ய மக்கள் பணத்தை பயன்படுத்திடுவது முறையல்ல” என அவரிடம் கறாராக தெரிவித்துவிட்டார்.

 

political advertisement

 

காமராஜர் தேர்தலில் தோற்று இருக்கலாம் ஆனால் அவர் செய்த விளம்பரங்களாலா இன்று அவருடைய சாதனைகள் பேசப்படுகின்றன? இல்லையே, மக்களுக்கு நன்மை பயக்கின்ற திட்டங்கள் கொண்டுவரப்படும் போது அதற்க்கான வரவேற்பை அங்கீகாரத்தை மக்கள் நிச்சயம் அளிப்பார்கள்.

 

இன்று நாம் என்ன செய்துகொண்டு இருக்கிறோம்? திட்டங்களுக்கு ஆகிற செலவை விட அதனை விளம்பரப்படுத்திட ஆகின்ற செலவு அதிகமாக அல்லவா இருக்கிறது. ஆட்சியாளர்களை சேவை செய்கிறார்கள் என்று கூட சொல்ல இயலாது. ஏனென்றால் அவர்கள் செய்கின்ற பணிக்கு அவர்கள் சம்பளம் பெறுகிறார்கள். ஆனாலும் தங்களை விளம்பரப்படுத்துக்கொள்ள மக்களின் பணத்தையே அல்லவா விளம்பரம் செய்திட பயன்படுத்துகிறார்கள். இது எவ்வளவு பெரிய தவறு. சட்டங்கள் அனுமதிப்பதாலேயே அனைத்தும் சரியானதாகி விடாது. தார்மீகம், பொறுப்புணர்வு இருக்க வேண்டும்.

 

திமுக அதிமுக காங்கிரஸ் பாஜக என கட்சி பேதமில்லாமல் எவர் ஆட்சிக்கு வந்தாலும் இந்த தவறு நடக்கத்தான் செய்கிறது. காமராஜரை புகழ்வது மட்டுமே தேசத்திற்கு நலன் பயக்காது, அவர் நடந்து கொண்ட முறைகளை அறிந்துகொண்டு அதன்படி நடப்பதும் தான் நன்மை பயக்கும்.

 

You may like ……..

காமராஜர் ஏன் இன்னும் உயர்ந்தவராகவே இருக்கின்றார்?

காமராசர் ஒரு மாணவரால் தோற்கடிக்கப்பது ஏன்?

 



பாமரன் கருத்து

Share with your friends !
Exit mobile version