Site icon பாமரன் கருத்து

Noble Prize Winner | நான் ISIS இயக்கத்தின் செக்ஸ் அடிமை, யார் இந்த நாடியா முராத்? | Real Story of Nadia Murad in Tamil Part 2

 

முந்தைய பகுதியினை படிக்காதவர்கள் கிளிக் செய்து படிக்கவும்

 

தொடர்ச்சி….

 

நாடியா முராத் தன்னை வாங்கிக்கொண்டு சென்றவர்களிடமிருந்து தப்பி 2015 இன் தொடக்கத்தில் ஜெர்மனிக்கு அகதியாக குடியேறினார் . பின்னாளில் அவர் பாதிக்கபட்டவர்களுக்கான விழிப்புணர்வு இயக்கமொன்றினை தொடங்கினார் . 2015 இன் இறுதியில் ஸ்விட்சர்லாந்து நாட்டிற்கு பயணித்தார் . ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றுவதற்க்காக சென்றதாக குறிப்பிடும் நாடியா,  முதன் முறையாக தனக்கு நடந்ததை பெரிய கூட்டத்தின் முன்பாக சொல்ல சென்றேன் என குறிப்பிடுகின்றார் .

 

Nadia Murad, Nobel Prize Winner



ஐக்கிய நாடுகள் சபையில் தனக்கு கிடைத்த வாய்ப்பினை பயன்படுத்தி , தனது ஊரான கோச்சோ எவ்வாறு ISIS இயக்கத்தினரால் கைப்பற்றப்பட்டது ,நானும் பிற பெண்களும் சபையாவாக எவ்வாறு நடத்தப்பட்டோம் , நான் எவ்வாறு பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டேன் , தாக்கப்பட்டேன் , எவ்வாறு தப்பித்தேன் , என்னுடைய சகோதரர்கள் எவ்வாறு கொல்லப்பட்டார்கள் அனைத்தையும் சொல்லிவிட்டேன் .

 

எனக்கு நடந்ததை சொல்வது கடினமாகத்தான் இருக்கின்றது . ஆனால் எனக்கு நடந்த கொடுமை வேறொருவருக்கு நடப்பதை தடுக்க என்னிடமிருக்கும் ஆயுதம் என்னுடைய கதை தான் .



அநீதிகளை இழைக்கும் தீவிரவாத இயக்கங்கள் நீதிக்கு முன்னால் நிறுத்தப்படும் வரை எனக்கு நடந்ததை சொல்லுவதை நிறுத்தப்போவதில்லை . உலக நாடுகளின் தலைவர்கள் குறிப்பாக முசுலீம் மத தலைவர்கள் ஒடுக்கப்பட்டவர்களுக்கு எதிராக நடக்கின்ற அநீதியை தடுத்து நிறுத்த முன்வர வேண்டும் . என்னுடைய கதையினை கூறி முடித்தவுடன் பேச்சினை தொடர்ந்த நான் யாசிதி பெண்கள் இப்படிப்பட்ட கொடுமைகளில் இருந்து விடுபட உதவிட வேண்டும் .



கொடுமையான கதையினை கூறும் கடைசி பெண்ணாக நான் இருக்க வேண்டும்



ஆகஸ்டு மாதம் 2014 இல் பல யாசிதி இன பெண்களோடு நாடியா முராத் உம் கடத்திச்செல்லப்பட்டார் . அந்த சமயத்தில் 6 சகோதரர்களையும் தன்னுடைய  தாயையும் இழந்தார் . தற்போது தன்னைப்போன்றே பாதிக்கப்பட்ட பெண்களின் விடுதலைக்காகவும் முன்னேற்றத்திற்க்காகவும் இயக்கத்தினை ஆரம்பித்தார் நாடியா முராத் . துன்பங்களுக்கு  பிறகான அவருடைய சிறப்பான செயல்பாடுகளை பாராட்டி பல விருதுகள் வழங்கப்பட்டிருக்கின்றன . தற்போது அமைதிக்கான நோபல் பரிசும் நாடியா ராவத் அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது .

வெறும் கதைகளை கேட்டுவிட்டு போய்விடக்கூடாது , உலகநாடுகளின் தலைவர்கள் ஒன்றினைந்து எந்தவொறு இன மக்களுக்கும் இதுபோன்ற கொடுமைகள் போர் போன்ற காலங்களில் கூட ஏற்படக்கூடாது என்பதனை உறுதி செய்திட வேண்டும் . மனிதத்தை காக்க உறுதி ஏற்க வேண்டும் .

 


 

பாமரன் கருத்து

Share with your friends !
Exit mobile version