Site icon பாமரன் கருத்து

Noble Prize Winner | நான் ISIS இயக்கத்தின் செக்ஸ் அடிமை, யார் இந்த நாடியா முராத்? | Real Story of Nadia Murad in Tamil

 


 

நான் ISIS இயக்கத்தின் செக்ஸ் அடிமை .  என்னுடைய கதையை சொல்ல நான் வெட்கப்படவில்லை , என்னிடமிருக்கும் ஓரே ஆயுதம் என் கதை தான் .

 

 

Nadia Murad, Noble Prize Winner

 




2018 ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு ஈராக்கை  சேர்ந்த சகோதரி நாடியா முராத் அவர்களுக்கு வழங்கப்பட இருப்பதாக நார்வே அமைதிக்கான நோபல் பரிசு வழங்கும் குழு அறிவித்துள்ளது .  அமைதிக்கான நோபல் பரிசு இந்த முறை நாடியா முராத் அவர்களுக்கு வழங்கப்பட்டிருப்பது பெரும் மகிழ்ச்சி . போராளிகளுக்கு கிடைக்கும் பெரும் அங்கீகாரம். 

 

 

Congratulations to Nadia Murad, #Goalkeepers18 Changemaker award winner, and Dr. Denis Mukwege on receiving this year’s Nobel Peace Prize. pic.twitter.com/EQ0BZgTLFO

 

இதுதான் நாடியா முராத் அவர்களுக்கு நடந்தது (இவரை போன்றோ அல்லது இதற்கும் மேலாகவோ துன்பங்களை அனுபவித்து வருகிறார்கள் இன்னும் பல பெண்கள் ) . இனி அவரது குரலில் ..

பாலியல் அடிமைகளை விற்பதற்கான சந்தை இரவுகளில் தொடங்கும் . மேலே அறையில் அடைத்து வைக்கப்பட்டு இருந்தோம் அடிமைகளாக கைதுசெய்யப்பட்டு கொண்டுவரப்பட்ட பெண்கள் .  வாங்குவதற்கு வந்திருக்கும் தீவிரவாதிகளின் பெயர்களை பதிவு செய்வதும் ஒழுங்குபடுத்துவதும் கீழே இருந்து வருகின்ற பேச்சு சத்தங்களை வைத்து தெரிந்துகொள்ள முடிந்தது.

 

வரிசையாக ஒவ்வொரு தீவிரவாதியின்  நாங்கள் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அறைக்குள் நுழைந்திடும் போதும் நான் உட்பட அனைத்து பெண்களும் அலறுவோம் . திடீரென வெடிகுண்டு  போட்டால் மக்கள் அலறும் சத்தத்திற்கு இணையாக இருக்கும் . நாங்கள் புலம்புவோம் , அங்கேயே வாந்தி எடுப்போம் ஆனால் அவை எதுவுமே தீவிரவாதிகளை தடுப்பதில்லை .

மான்குட்டி  அழகாக துள்ளி விளையாடுகிறது என்பதற்காக சிங்கம் விட்டுச்செல்வதில்லை . இது இயற்கை . ஆனால் வேறோர் இன பெண் என்கிற ஒற்றை காரணத்திற்க்காக அவர்களை பாலியல் அடிமையாக்குவது கொடுமையான மிருகத்தனம் .

உள்ளே நுழையும் நபர் ஒவ்வொரு பெண்ணாக நோட்டமிடுவார் . அழகான பெண்ணென்றால் தேர்ந்தெடுத்து “உன் வயது என்ன?” என்பான் .நம்பிக்கையிட்டாவிட்டால் இழுத்துப்பிடித்து முடியையும் வாயையும் நோட்டமிடுவான். பிறகு அங்கிருக்கும் காவலாளியிடம் இவர்கள் விர்ஜின் தானே என கேட்பான்  , “ஆமாம்” என காவலாளி சொல்வான் .

வாங்க வந்திருப்பவன் தேர்ந்தெடுத்த பெண்ணை எங்கு வேண்டுமானாலும் தொடுவான் , முக்கால்வாசி நேரங்களில் மார்பிலும் கால்களிலும் தான் மிருக கரங்கள் ஊறும் . ஒரு மிருகத்தை சோதனையிடுவதை விட அருவறுப்பானதாக எங்களுக்கு சோதனை நடைபெறும் .

நாங்கள் கதறுவோம் “அமைதியாக இருங்கள் ” என அதட்டுவார்கள்  . அந்த அதட்டலுக்கு பிறகு எங்களுடைய சத்தம் இன்னும் கூடத்தான் செய்யும் . நான் அங்கிருக்கும் போது உயர் அதிகாரம் கொண்ட தீவிரவாதி போல தோற்றமளித்த சால்வன் வந்தான் . அவனுடன் ஒரு யாசிதி பெண்ணையும் கூட்டிவந்திருந்தான் . அவளுக்கு மாற்றாக இன்னொரு பெண்ணை  வாங்க நினைத்தான் . என்னை நோக்கி அவன் “இங்கே வா என அழைத்தான்” நான் கண்டுகொள்ளாமல் இருந்தவுடன் “பிங்க் நிற சட்டை அணிந்திருக்கும் பெண்ணே உன்னைத்தான்” என குறிப்பிட்டான் .

 

நான் எழவில்லை , ஆகையால் எட்டி உதைத்தான் . முகங்களின் பெரும்பகுதி முடியால் மூடப்பட்டிருந்த அவன் பார்ப்பதற்கு சாத்தான் போல தோன்றினான் .

 

வடக்கு இராக்கில் உள்ள சிஞ்சார் பகுதியை தாக்கி அங்கிருக்கும் பெண்களை செக்ஸ் அடிமைகளாக கொண்டுவருவதை போர்க்களத்தில் இருக்கும் வீரன் தானாக செய்வதில்லை . Islamic State அதனை திட்டமிடுகிறது . அவர்கள் எப்படி எங்களது வீட்டிற்குள் நுழைகிறார்கள் , எது பெண்களை மதிப்பற்றவர்களாக  மதிப்பு மிக்கவர்களாக யோசிக்க வைக்கிறது , எந்த தீவிரவாதி இலவசமாக பெண்களை பெறலாம் , யார் பணம் கொடுக்க வேண்டும் அவை அனைத்துமே அவர்களுக்கென உள்ள இதழில் விவாதிக்கப்படுகிறது .

 

Nadia Murad, Nobel Prize Winner

 

பெண்களை அடிமைப்படுத்தி விலைமாதர்களாக விற்பதனை ISIS தொடங்கியதாகவோ அல்லது அவர்கள் மட்டுமே கடைபிடிக்கிறார்கள் என்றோ நான் நம்பவில்லை , போருக்கான  ஆயுதமாக அனைவரும் பயன்படுத்திடும் கொடும்முறையாகவே இது இருக்கின்றது .

நாங்கள் அடைத்துவைக்கப்பட்டிருந்த அறைக்கு கீழாக உள்ள பதிவேட்டில் யார் யாருக்கு விற்கப்பட்டார்கள் என்கிற தகவல் அடங்கியிருக்கும் . நான் அங்கு விழுந்துகிடந்தபோது அனைவருடைய கால்களையும் நோக்கினேன் , அங்கு பெண் கால்களை போன்ற மிருதுவான கால்களை கொண்டவனுடைய கால்களை கண்டவுடன் அவனிடம் நகர்ந்து சென்று “என்னை உன்னோடு அழைத்துச்செல் , என்னை என்னவேனாலும் செய்துகொள் ஆனால் அந்த மிருகத்தோடு (சால்வன்)   செல்ல முடியாது” என கதறினேன் . என்னுடைய கதறலை ஏற்றுக்கொண்ட அந்த நபர் எனக்காக சால்வனிடம் பேசினான் “இவள் என்னுடையவள் ” என்றான் . சால்வன் பதில் கூறாமல் ஒப்புக்கொண்டான் . எனக்காக பேசியவன் மோசூல் நகரில் நீதிபதியாக இருக்கிறானாம் .

 

தொடர்ச்சி

 

 

பாமரன் கருத்து

 

Share with your friends !
Exit mobile version