Site icon பாமரன் கருத்து

“நரிப்பல்” இறையன்புவின் எளிய மனிதர்களின் சிறந்த கதைகள்

நரிப்பல் Book Pdf

சராசரி மனித வாழ்வில் இருந்து விலகிப் போனவர்களின் காலடித்தடத்தையும் – பச்சை மரத்தில் அறைந்த ஆணி போல் அசையாமல் நின்று கொண்டிருக்கும் அன்றாடம் காய்ச்சிகளின் வாழ்வினையும் படம்பிடித்து காட்டுகிறது இந்த சிறுகதை தொகுப்பு.


இந்த புத்தகத்தை வாசித்துவிட்டு பிரசன்னா வெங்கடேசன் என்ற புத்தக வாசிப்பாளர் அருமையாக தனது விமர்சனத்தை பேஸ்புக்கில் தெரிவித்து உள்ளார். அதை நீங்கள் இங்கே படிக்கலாம்.

 

கடுமையான வேலைப்பளுவிலும் சமூகத்தை வளமாக்கும் பல புத்தகங்களை தொடர்ச்சியாக தந்துகொண்டிருப்பவர் தான் வெ.இறையன்பு ஐஏஎஸ். வாழ்வின் உயர்ந்த கருத்துக்களை எளிய மனிதர்களின் சாதாரண வாழ்வியல் சம்பவங்களில் இருந்து சிறப்பாக எழுதி இருக்கிறார் நூலின் ஆசிரியர். நரிப்பல் என்ற இந்த புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கும் பதினைந்து கதைகளும் ஒரு கருத்தை தாங்கி நிற்கிறது. அனைவரும் வாங்கிப்படிக்க வேண்டிய புத்தகம் இது. நீங்கள் வாசித்து முடிக்கும் போது பல மாற்றங்களை உங்கள் மனம் நிச்சயமாக அடைந்தே தீரும். 

 

புத்தகம்: நாிப்பல்

ஆசிரியர்:திரு. வெ.இறையன்பு

பதிப்பகம்:நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.,

பக்கங்கள் : 120

 

விலை: ₹ 105/-


 

‘இரங்கல்: என்ற சிறுகதையில் இருந்து ‘சமர்ப்பணம்’ வரையிலும் வாசிக்கும்போது ஒரு ரயில் பெட்டியில் பயணம் செய்துகொண்டு சம்பந்தப்பட்ட ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் சந்தித்துவிட்டு கீழே இறங்கிய திருப்தி மேலிடுகிறது.

 

‘மரணதண்டனை’ என்ற கதையில் ஒரு கைதியின் மனப்பதிவுகள் ஆகட்டும் ‘சிறகுகள் வேண்டும்’ என்கிற கதையில் ஒரு கிளியின் அறிவார்ந்த சொற்கள் ஆகட்டும் எல்லாமே நம் கண்முன்னே அழகாக விரிகிறது.

 

‘விசுவாசிகள்’ என்கிற இன்னொரு கதையில் ஆக்கிரமிப்பு நிலம் பற்றிய உரையாடல்கள் அருமையாகவும் தெளிவாகவும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஏழைகளின் வாழ்வை நசுக்கிப் பார்த்து சந்தோஷப்படுவதே பொழுதுபோக்காகக் கருதும் சில மனிதர்களிடமிருந்து விலகிச் செல்லும் அகதிகளாகவே  பாமரர்கள் இருக்கிறார்கள் என்கிற கூற்றும் வெளிப்படுகிறது.

 

ஒவ்வொரு கதையின் பின்னணியில் ஒரு நூல் இழைப் போன்று ஊடுருவிச் செல்வதை உணரலாம். ஏழைக்கு இன்பமும் துன்பமும் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள் அதுதான் வாழ்விற்கும் வளர்ச்சிக்கும் உரம் இடுகின்றன பக்குவ படுத்துகின்றன என்று கூறலாம். இந்நூலில் இடம்பெற்றுள்ளன  பதினைந்து சிறுகதைகளும் மிகவும் நுணுக்கமாகவும் உணர்வுபூர்வமாகவும் செதுக்கி இருக்கும் நூலாசிரியர் 

வெ. இறையன்பு அவர்களுக்கு  படிக்கும் ஒவ்வொருவரும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம்.

 

இந்த நூலில் இருக்கும் சிறந்த வரிகள் பின்வருமாறு…

 

முதலாவது கதையான “இரங்கல்” என்ற கதையில் “போன மாசம் வீட்டுப் பிரச்சனையாக தாலுகா ஆபிஸ் போனேனே!  மகன் பட்டாளத்தில் இருக்கிறான்னு  சொன்னேன். ஒருத்தராவது ஒழுங்கா பதில் சொன்னாங்களா ! இப்ப வந்துட்டாங்க ! ராணுவத்தில் உயிரோடு இருக்கிறதை விட செத்துட்டா  அதிக மரியாதை போல இருக்கு” என்று நினைத்துக்கொண்டு மார்பிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு ஒரு தாய் அழுவது போல குறிப்பிட்டிருக்கிறார். “பொறுமையாக அதிகாரி தங்கள் குறைகளை கேட்டாலே 50 சதவீத பிரச்சனை தீர்ந்ததாக நிம்மதி அடையும் நிறைவு நம் மக்களிடம் உண்டு.

 

“சிறகுகள் வேண்டும்” என்ற கதையில், “எல்லாமே கொஞ்ச நாளைக்கு தான் அழகாக இருக்கிறது எதுவுமே ரொம்ப நாளைக்கு இருக்காது .ரொம்ப நாளைக்கு இருக்க முடியாததனால தான் அது அழகா இருக்கு. இதையெல்லாம் எப்படி சொல்றது. உங்கள் நாட்டில் பெண்களின் பொறுமையும் சகிப்புத்தன்மையும் நினைத்தால் எனக்கு அதிசயமாக இருக்கிறது அவர்கள் ஆற்றும் பணிகள் மலைப்பாக இருக்கின்றன.

“நான் ஏழைங்க பக்கம் நிற்க யாருமே ஜாதி பாக்கரதில்லே. பணம் என்று வரும்போது எல்லோரும் ஒரே ஜாதி ஆகி விடுகிறார்கள்” என்று நினைத்துக்கொண்டேன் என்று “நிறப்பிரிகை” என்ற கதையில் உரையாடல் போல அமைத்துள்ளார்.

 

‘செருப்பு விற்பவர்’ என்ற கதையில் ஒரு மகன்  அப்பா சொன்னதை யோசிப்பது போல, எவ்வளவு சரியாக இருக்கிறது இந்த சமூகம் கொள்ளை அடிப்பவர்களை கூட ஏற்றுக் கொள்கிறது ஆனால் உண்மையாக உழைப்பவர்களை இப்படி வரிசைப் படுத்துகிறது என்று எண்ணிக்கொண்டான்.

 

தன்னுடைய மகளுக்கு ஒரு அப்பா அறிவுரை கூறுவது போல, “எங்கப்பா முடிஞ்சு போன நேரம் கடையை கூட்டுற வேலை கூட சமயத்தில் செய்யணும் எனக்கு 80 ரூபாய்தான் சம்பளம் ஆனால் நான் அப்படிப்பட்ட வேலையில இருக்கேன் ஒரு நாள் கூட உங்க அம்மா சொல்லி காட்டியது இல்லை அந்த அனுசரணை தான் எனக்கு உந்துசக்தியாக இருந்தது நீ எப்படி வேணும்னாலும் நினைச்சுக்கோ ஆனால் உன் புருஷன் அவரோட நிறுவனத்தில் சின்ன பதவியில் இருந்தாலும் ரொம்ப மரியாதையாய் நடத்தப்பட எல்லாரும் அவர் மேல மரியாதை வைத்திருக்கும் அவருக்கு நீயே மரியாதை கொடுக்கிறார் கொடுப்பாங்க வேலைக்காரனாக வேலை பாக்குறவன் கூட ராஜா மாதிரி நடத்துபவள் தான் உண்மையான பொண்டாட்டி.

 

“சார் ஒன்னு புரிஞ்சுக்கோங்க?  இந்த இடத்திலே நான் சேல்ஸ்மேன் உங்களுக்கு சரியா அணிய உதவி பண்றது என்னுடைய கடமை . இந்த ஷோரூமிற்கு ஓர் அடி வெளியில நின்னு ஒரு கோடி ரூபாய் நீங்க தந்தா கூட உங்களுக்கு ஷூ போட உதவி பண்ண மாட்டேன் .ஆனா இங்க ஒரு கோடி ரூபாய் தந்து எனக்கு உதவி பண்ணாதீங்க என்று சொன்னாலும், நான்  கேட்க மாட்டேன் .ஏன்னா,  இதுதான் என்னோட தொழில் தர்மம்.

 

‘துப்டன் டெம்பா’ என்ற கதையில் “தேசிய ஒருமைப்பாடு என்பது கோஷங்களாலும், வெறும் கூச்சல்களாலும் உண்டாகக்கூடிய உணர்வு அல்ல. அது மனதின் கைகள் நீண்டு ஒன்றுக்கொன்று குலுக்கிக் கொள்ளும்போது ஏற்படும் பரஸ்பர உணர்வால் ஏற்படுவது என நானும் அடிக்கடி பேசிக் கொள்வோம்.

 

‘நரிப்பல்’ என்ற கதையில் “மனிதர்கள் மீதான நம்பிக்கை பொய்த்துப் போன போது மனம் கனத்து தான் போகிறது.”

 

“டூலெட்” என்ற கதையில் “நல்லா இருக்கோமா  இல்லையான்னு யோசிக்கக்கூட நேரம் இல்லாமல் எதையோ செஞ்சுட்டு இருக்கோம். ஆனா என்ன செய்கிறோம் யாருக்காவது பிரயோஜனமாக இருக்கான்னு யாருக்கும் தெரியலை”.

 

“சாய்ந்த கோபுரம்” என்ற கதையில் “ஓவியங்கற  கலை மனசுல அழகும், கலையும் வழிஞ்சாதான் வரும். அன்பு பொங்கி வழியும் போது தான் அழகுணர்வு வளரும்”.

 

“இழப்பீடு” என்ற கதையில்  கழுகுகளின் ராஜா  “ராஜாளி” என்ற பறவையைப் பற்றி  பின்வருமாறு  குறிப்பிடுகிறார்.

 

அது கழுகுகளின் ராஜா, மற்ற பறவைகள் காய்ந்ததும் புலர்ந்ததும் சாப்பிடும் சிலவகை கழுகுகள் அவற்றைத் தேடி உண்டு. எப்படியேனும் உயிர் வாழ்ந்தால் போதும் எனும் உந்துதல் உள்ளவைகள். ஆனால் ராஜாளி வந்து மரத்தில் அமர்ந்தால் காட்டில் இருக்கும் அத்தனை மிருகங்களுக்கும் அதன் இருத்தல் தெரியும். சிறிய மிருகங்கள் பொந்துக்குள் ஓடி ஒளியும். ஆகாய விமானத்தைப் போல இறக்கைகளை விரித்து தன் மேல் மின்னல் வேகத்தில் இறங்கி இரு கால்களாலும் அதை பிடிக்கும்போது நகங்களை உள்ளே பாய்ச்சும் ஆற்றல் பெற்றவை. பலநூறு அடி உயரத்தில் கீழே புள்ளியாய் தெரிகிற உயிர்களின் மீது சரியாக பார்வையை செலுத்துபவை அவை. ராஜாளி என்பது கம்பீரம் அதிசயம் ஆளுமையின் குறியீடு.

எங்களது கட்டுரைகளை நீங்கள் தவறாமல் படிக்க விரும்பினால் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்து பின்தொடருங்கள். கூறவே வாட்ஸ்ஆப் பட்டனை அழுத்தி எங்களுடைய குரூப்பில் இணைத்துக்கொண்டு பதிவுகளை பெறுங்கள்



Get Updates in WhatsApp

Exit mobile version