புத்தனை தேடி இந்தியாவிற்கு வந்த யுவான் சுவாங் துவங்கி மறைக்கப்பட்ட இந்தியாவின் பல விசயங்களை இந்த புத்தகம் கொண்டிருக்கிறது. வரலாற்றில் நாம் விட்டுப்போன பல விசயங்களை தேடி அதனை நமக்காக இந்த புத்தகத்தில் தொகுத்து கொடுத்திருக்கிறார். கிட்டத்தட்ட தன் 17 ஆண்டுகால தேடலில் கிடைத்த விசயங்களை இந்த புத்தகத்தில் கொடுத்திருக்கிறார் எஸ் ராமகிருஷ்ணன்.
ஒவ்வொரு வருடமும் வரலாறு பாடத்தை படிக்கிறோம். அப்படி படிக்கும் போது பல விசயங்களை பசு நுனிப்புல்லினை மேய்ந்தவாறு தான் நாம் கடந்து சென்றுவிடுகிறோம். ஆனால் அண்மையில் சஞ்சாரம் நாவலுக்காக தேசிய விருது பெற்ற திரு எஸ் ராமகிருஷ்ணன் அவர்களால் கடந்து செல்ல முடியவில்லை. எப்போதும் பேசும்போது திரு எஸ் ராமகிருஷ்ணன் அவர்கள் பல வரலாற்று உண்மைகள் மறைக்கப்பட்டு இருக்கின்றன. அவற்றை தேடி தேடி சென்று பார்ப்பதில் அறிந்துகொள்வதில் தான் எனக்கு மகிழ்ச்சி என இவர் கூறுவதை பலமுறை கேட்டிருப்போம். அப்படி வரலாற்றில் நாம் விட்டுப்போன பல விசயங்களை தேடி அதனை நமக்காக இந்த புத்தகத்தில் தொகுத்து கொடுத்திருக்கிறார். கிட்டத்தட்ட தன் 17 ஆண்டுகால தேடலில் கிடைத்த விசயங்களை இந்த புத்தகத்தில் கொடுத்திருக்கிறார் எஸ் ராமகிருஷ்ணன்.
இந்த நூலினை ஏன் படிக்க வேண்டும் என கேட்பவர்களுக்கு ஓர் உதாரணத்தை கூற விரும்புகிறேன். சுதந்திரம் யாரால் கிடைத்தது என்றால் வெகு சிலரை மட்டும் தானே நாம் கூறுவோம். வேறு எவருமே சுதந்திரத்திற்காக எதையுமே செய்திடவில்லையா? என என்றைக்காகவாது சிந்தித்ததுண்டா? அதற்க்கான பதில் “சுதந்திரத்திற்காக கல்லூரி மாணவி நடத்திய காங்கிரஸ் இந்தியா ரேடியோ” என்ற கட்டுரையாக இந்த புத்தகத்தில் இருக்கும்.
புத்தனை தேடி இந்தியாவிற்கு வந்த யுவான் சுவாங் துவங்கி மறைக்கப்பட்ட இந்தியாவின் பல விசயங்களை இந்த புத்தகம் கொண்டிருக்கிறது. நீங்கள் கண்டிப்பாக உங்களது வாழ்நாளில் ஒருமுறையேனும் வாசிக்கவேண்டிய புத்தகம் “மறைக்கப்பட்ட இந்தியா.
Download/Buy : மறைக்கப்பட்ட இந்தியா [Maraikkappatta India]